செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அலுத்கமை இந்துருவை ரயில் சேவை தற்காலிக இடைநிறுத்தம்

train0000.jpgஅலுத்கமை மற்றும் இந்துருவைக்கிடையிலான ரயில் சேவை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில்  தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மறுதினமான ஞயிறு மாலை 5.00 மணி வரை இந்த ரயில் சேவைகள் தடைப்பட்டிரக்கும்.

பெந்தோட்டை ரயில் பாலத்தின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்கான காரணமாகும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதன்படி மருதானை ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை  காலை 6.45 க்கு காலி நோக்கி புறப்படும் ரயில் சேவை மற்றும்  பிற்பகல் 1.40 மற்றும் மாலை 5.50 ஆகிய நேரங்களில் மாத்தறை நோக்கிப் புறப்படும் ரயில் சேவைகள் இடம்பெற மாட்டாது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 க்கு மருதானை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் புறப்படும் கடுகதி ரயில் சேவையும் இடம்பெற மாட்டாது. இதேவேளை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் 8050 இலக்கம் கொண்ட ரயில் சேவை சனிக்கிழமை அலுத்கமை வரை மட்டுமே இடம்பெறும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

ரூ.10.9 கோடி கேட்டு கமலுக்கு நோட்டீஸ்

09-kamal-marmayogi.jpgமர்மயோகி படத்துக்காக தங்களிடம் முன் பணமாகப் பெற்ற ரூ 10.90 கோடியை உடனடியாகத் திருப்பித் தரவேண்டும் என பிரமிட் சாய்மிரா நிறுவனம் நடிகர் கமல்ஹாஸனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸை அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் சிதம்பரம்  அனுப்பியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் பிரமீட் சாய்மீரா நிறுவனமும், கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து மர்மயோகி எனும் படத்தை பிரமாண்ட முறையில் தயாரிக்க முடிவு செய்தனர். கமல் இயக்கி நடிப்பதாக இருந்த அந்தப் படம் பொருளாதார நெருக்கடி காரணமாக தள்ளிப் போடப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்துக்காக கமல்ஹாஸனுக்கு ரூ.10 கோடியே 90 லட்சம் முன்பணமாக வழங்கப்பட்டிருந்தது. மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி என முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்தான், கமல் தனது சொந்தப் படமான உன்னைப் போல் ஒருவன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். இப்போது அந்தப் படம் வெளியாகும் நாளும் குறிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் கமல்ஹாஸனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ‘மர்மயோகி’ படத்தை எடுத்து முடிக்காமல் ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தை வெளியிடுவது சரியல்ல. ‘மர்மயோகி’ படத்திற்கான பணிகளை துவக்காததால் முன்பணமாக பெற்ற தொகையை நீங்கள் திருப்பி செலுத்த வேண்டும். எனவே உடனடியாக முன்பணத்தை திருப்பிச் செலுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் தேவையற்ற செலவீனங்களை தவிர்ப்பீர்கள் என்றும் நம்புகிறோம்…”, என்று கூறப்பட்டுள்ளது.

\

இருபது ஓவர் போட்டிகளால் எனது திறமை மேம்பட்டுள்ளது: பிரெட்லீ

cricket_stadium.jpgஇருபது ஓவர் போட்டிகளில் விளையாடியதால் தனது பந்துவீச்சுத் திறன் மேம்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பிரெட்லீ அளித்துள்ள மின்னஞ்சல் பேட்டியில், இருபது-20 போட்டிகள் பந்து வீச்சாளர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கக் கூடிய போட்டி என்றாலும், இதில் விளையாடியதால் எனது பந்துவீச்சுத் திறன் மேம்ப்பட்டுள்ளது.

யார்க்கர், ஸ்லோ பால் மற்றும் ஸ்லோ-பாலில் பவுண்சர் வீசுவது உள்ளிட்டவை தற்போது எனக்கு அத்துபடியாகி விட்டது. இதேபோல் இருபது ஓவர் போட்டிகளில் பேட் செய்யும் போது முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாக பிரெட்லீ தெரிவித்துள்ளார். அக்டோபர் 8ஆம் தேதி இந்தியாவில் துவங்க உள்ள சாம்பியன்ஸ் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நியூ சௌத் வேல்ஸ் அணியில் விளையாடுவதற்காக பிரெட்லீ இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு அ. அட்டை வைத்திருந்தவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கடூழியச் சிறை

999.jpgதமக்குச் சொந்தமாக இரண்டு தேசிய அடையாள அட்டைகளை தன் வசம் வைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளி ஒருவருக்கு தெல்தெனிய மஜிஸ்திரேட் பிரியன்த லியனகேவினால் நேற்று முன்தினம் (8) 6 மாத ஒத்திவைக்கப்பட்ட கடூழியச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. திகன- அளுத்வத்தை பிரதேசத்தில் வகிக்கும் வீரய்யா கோபால கிருஷ்ணன் என்பவருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்ப ட்டுள்ள தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.

இரண்டு தே.அ. அட்டைகளை தன்வசம் வைத்திருந் துள்ளமை தொடர்பில் தெல் தெனிய பொலிஸ் பொறுப்பதிகாரி சத்ரசிங்க சியம் பலாப்பிட்டியவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் இவர் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

ஐ. ம. சு. மு. வேட்பாளரிடையே மோதல் – ஒழுக்காற்று விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு

southern_province2.jpgதென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டது தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக சுதந்திரக் கட்சி பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (9) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது. ஐ. தே. க. அடங்கலான எதிர்க் கட்சியில் இருந்து எமக்கு போட்டி இல்லாததால் ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் தமக்கிடையே மோதிக் கொள்கின்றனர்.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு சில வேட்பாளர்களை அழை த்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். மோதல்க ளுடன் தொடர்புடைய வேட் பாளர்களுக்கு எதிரான ஒழு க்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகைய மோதல்கள் மூலம் குறித்த வேட்பாளர்கள் தமக்குத் தாமே பாதிப்பை ஏற்படுத்துக் கொள்கின்றனர் என்றார்.

மீள்குடியேற்றுவது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொந்தமாக நிகழ்ச்சித் திட்டம்

nsri.jpgவன்னி முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளை தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொந்தமாக நிகழ்ச்சித் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகின்றது என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்து உரையாடினர்.

வன்னி முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு ஆகியன குறித்து இச்சந்திப்பின்போது பிரதானமாக பேசப்பட்டது. இச்சந்திப்பில் கூட்டமைப்புச் சார்பாக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான என்.ஸ்ரீகாந்தா குறித்த சந்திப்பு குறித்து “ஏசியன் ட்ரிபியூன்” ஆங்கில இணையத்தள  பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே வன்னி முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகியன சம்பந்தமாக கூட்டமைப்பு சொந்தமாகத் தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் அப்பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: நாம் வன்னி அகதிகளின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகியன தொடர்பாக சொந்தமாக சில திட்டங்களையும், யோசனைகளையும் வைத்திருக்கின்றோம். ஆனால்,  அவற்றை விளங்கப்படுத்துவதற்கு இது உரிய தருணம் அல்ல. நாம் இவை தொடர்பாக நிகழச்சித்திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறோம். 

பயஸ், பூபதி இணைகள் இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி

999bhupathi-knowles.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆடவர் இரட்டையர் காலிறுதி ஆட்டங்களில் லியாண்டர் பயஸ்-லூயி இணையும், மகேஷ் பூபதி-மார்க் நோல்ஸ் இணையும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.

4ஆம் தரவரிசையில் உள்ள பயஸ்-லூயி இணை, 7ஆம் தரவரிசையில் உள்ள பலமான தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையான வெஸ்லி மூடி, டிக் நார்மன் இணையை 6- 3, 5- 7, 6- 4 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

பயஸ்-லூயி இணை 7 டபுள் ஃபால்ட்களையும், 20 முறை கிரவுண்ட் ஷாட்களில் தவறையும் செய்தனர். இருப்பினும் வெற்றி பெற்றதற்கு காரணம் முதல் சர்வில் வெற்றி பெற்றது அதிகம். மேலும் தென் ஆப்பிரிக்க-பெல்ஜியம் இணையின தவறுகளை குறைவாக செய்தாலும் அந்த தவறுகள் முக்கியக் கட்டத்தில் நிகழ்ந்ததால் பயஸ்-லூயி இணை வெற்றி பெற்றது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3ஆம் தர நிலையில் உள்ள மகேஷ் பூபதி- மார்க் நோல்ஸ் இணை, தர நிலையில் இல்லாத குரேஷிய-பிரான்ஸ் இணையான லுபிசிச்-லோத்ரா இணையை 6- 4, 4- 6, 7- 6 என்ற செட்களில் சற்றே தட்டுத் தடுமாறி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

‘உறவினர்கள் பொறுப்பேற்க முன்வந்தால் முகாம்வாசிகள் விடுதலை’- இலங்கை அரசு அறிவிப்பு

idp tamils in vanniஇலங்கை வவுனியாவில் அமைந்திருக்கும் நிவாரண முகாம்களில் இருக்கும் இடம்பெயர்ந்தோரின் உறவினர்கள் அவர்களுக்கு பொறுப்பேற்று பராமரிக்க முன்வந்தால், அவர்களை விடுவிக்க அரசு தயாராக இருப்பதாக இலங்கை அரசு உள்ளூர் ஊடங்களில் விளம்பரம் செய்துள்ளது.

இது குறித்த மாதிரி விண்ணப்பப் படிவம் ஒன்றும் இந்த விளம்பரத்தில் பிரசுரமாகியிருக்கிறது.

விண்ணப்பங்களில் பல அதிகாரிகள் கையெழுத்திடவேண்டும். குறிப்பாக ஒருவர் விடுவிக்கப்படும் முன்பு இராணுவத்தின், வவுனியா கட்டளையதிகாரி கையெழுத்திட வேண்டும் என்று மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் BBC தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்த) சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்

26parliament.jpgபாராளு மன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்ட மூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள சில பிரிவுகளுக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேற்படி சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அவ்வாறே நிறைவேற்ற வேண்டுமாயின் விசேட பெரும்பான்மையை பெறவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது எனவும் சபாநாயகர் நேற்று தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக் காலை சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மேற்படி உயர் நீதிமன்ற தீர்ப்பை சபையில் அறிவித்தார்.

சபையின் அங்கீகாரத்திற்கென பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பாக அரசியலமைப்பின் 121 (1) பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (மக்கள் பிரிவு), ஐ. தே. க என்பன மேற்படி சட்டமூலம் தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தன. மேற்படி மனுக்கள் தொடர்பாகவே உயர் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் 2ஆம் வாசகத்தின் 7(5) ஆ உப பிரிவு 7(6) உப பிரிவில் அல்லது ஏதேனும் மதத்தை அல்லது சமுதாயத்தை குறித்துக்காட்டுவதாயின் எனும் சொற்கள் மற்றும் 4 ஆம் வாசகத்தின் 9 (3) உப பிரிவு ஆகியவை அரசியலமைப்பின் 12 (1) , 14(1) அ. மற்றும் 14 (1)(உ) ஆகிய உறுப்புரைகளுக்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் உள்ளவாறே நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் பிரகாரம் விசேட பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரமே நிறைவேற்றப்படலாம் என அரசியலமைப்பின் 123 ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவ்வாறே 2 ஆம் பிரிவின் 7 (5) (ஆ), 7 (6) மற்றும் 4 ஆம் பிரிவின் 9 (3) உப பிரிவுகள் உயர் நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டுள்ளவாறு திருத்தியமைக்கப்படும் பட்சத்தில் அரசியலமைப்புக்கு முரணானதல்ல என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட 2 ஆம் பிரிவின் 7(5) (ஆ), 7 (6) மற்றும் 4 ஆம் பிரிவின் 9 (3) உப பிரிவுகள் தவிர்ந்த சட்டமூலத்தின் ஏனைய பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்றும் உயர் நீதிமன்றம் மேலும் தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தெரிவித்தார்.

இந்திய அணிக்கு கைகொடுத்த ஏர் இந்தியா

09-airways-99.jpgஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து கொழும்பு செல்லவிருந்த பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளானார்கள். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானம் ஒன்றை இயக்கி அவர்களை கொழும்பு அழைத்துச் சென்றது. ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் வேலைநிறுத்தம் காரணமாக ஜெட் ஏர்வேஸ் சேவை முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக சென்னையிலிருந்து ஜெட் நிறுவனம் இயக்கும் எட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கொழும்புக்கான விமானம். இந்த விமானம் இன்று ரத்து  செய்யப்பட்டதால், அதில் செல்லவிருந்த பயணிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

இதையடுத்து சென்னையிலிருந்து கொழும்புக்கு ஏர் இந்தியா நிறுவனம் கூடுதல் விமானத்தை இயக்கியது. சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் பயணிகள் இதில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதே விமானத்தில், ஜெட் வேலைநிறுத்தத்தில் சிக்கி கொழும்பு செல்ல வேண்டிய இந்திய கிரிக்கெட் அணியினரும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சிறப்பு கூடுதல் விமானம் இன்று முற்பகல் 11.45 மணிக்கு சென்னைக்கு வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற பயணிகளுடன் பெங்களூர் சென்றது. அங்கு தங்கியிருந்த சில வீரர்களை ஏற்றிக் கொண்டு 12.45 மணிக்கு கொழும்பு சென்றது.

இந்த விமானத்தில் சச்சின், ராகுல் டிராவிட், கம்பீர், இஷாந்த் சர்மா, பிரவீன் குமார், அமித் மிஸ்ரா, யூசுப் பதான், படேல், அபிஷேக் நாயர், திணேஷ் கார்த்திக், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோரும், பயிற்சியாளர்களான ராபின் சிங், வெங்கடேஷ் பிரசாத், கேரி கிர்ஸ்டன் ஆகியோரும் பயணித்தனர்.