செய்திகள்

செய்திகள்

செய்திகள்

புலமை பரிசில் பரீட்சையில் ஹம்பாந்தோட்டை முதலிடத்தில்

021009-dep-of-edu.jpgஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று நண்பகல் 12:00 மணியளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தூர இடங்களில் உள்ள பாடசாலைகள் கல்வியமைச்சின் http://www.doenets.lk என்ற இணைய முகவரியில் பெறுபேறுகளைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளின்படி ஹம்பந்தோட்டை ரு{ஹணு விஜயபா மகா வித்தியாலய மாணவர் ஜே.ஏ.பிரமோத் டில்ஷான் 196 புள்ளிகளுடன் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் 60 ஆவது தேசிய தினம்

02china_festivalss.jpgசீனா அதன்  60வது தேசிய தினத்தை நேற்று கோலாகலமாகக் கொண்டாடியது. பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்புடன் பல விசேட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

சீனாவில், 1949ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, கம்யூனிச ஆட்சி மலர்ந்தது. சீனாவின் மாபெரும் தலைவர் மா சேதுங்கின் புரட்சியை அடுத்து,  இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தது. இதையடுத்து,  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி, சீனாவின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது.

சீனாவில் கம்யூனிச ஆட்சி மலர்ந்ததன் 60வது ஆண்டு விழா,  நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் பீஜிங் விழாக்கோலம் பூண்டிருந்தது. வரலாற்று சிறப்பு மிக்க தினான்மென் சதுக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

சீனாவின் பலத்தை சர்வதேச நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நடந்தது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த அணி வகுப்பில், சீனாவில் தயாரான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்,  அணு குண்டுகளை ஏந்திச் சென்று,  மிக நீண்ட தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் வகையிலான ஏவுகணைகள்,  நவீன டாங்கிகள் ஆகியவை பங்கேற்றன. போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில்,  கண்கவர் வாண வேடிக்கையும் நிகழ்த்தி காட்டப்பட்டது. பிரம்மாண்ட அணிவகுப்பை சீன அதிபர் ஜிண்டவோ பார்வையிட்டார்.

குருநாகலில் குண்டு வெடிப்பு: சிறுவர்கள் உட்பட 13 பேர் காயம்

021009kurunagala.jpgகுருநாகல் உடவல்பொல பிரதேசத்தில் இன்று காலை வான் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று  நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட்ட 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது குறித்த வாகனம் வீடொன்றின் முன்பாக தரித்திருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தனிப்பட்ட  குரோதங்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது

மலையகத்தில் அடைமழை – மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது தேசிய கட்டட ஆய்வு நிறுவனம்

011009rain-in-upcountry.jpgமலைய கத்தில் தொடர்ந்து பெய்ந்து வருகின்ற அடைமழையினால் மத்திய மாகாணத்தில் மண் சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவரெலியா, கண்டி உட்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காற்றுடன்கூடிய அடைமழை பெய்து வருகின்றது. இதனால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கினிகத்தேனை – ஹட்டன் பிரதான வீதியில் ஆங்காங்கே சிறியளவான மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்பிரதேச பொது மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டுமெனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

டோங்காவில் மீண்டும் நிலநடுக்கம்- சுனாமி பலி 189 ஆக உயர்வு

300909samova_tsunamy.pngசமாவோ தீவுக்கு அருகே இருக்கும் டோங்கா தீவு பகுதியில் இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. நேற்று முன்தினம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 189 ஆக உயர்ந்துள்ளது. நியூசிலாந்துக்கு கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் சமாவோ தீவு கடும் பாதிப்புக்கு ஆளானது.

சமாவோ தீவில் இதுவரை 149 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் சமாவோவில் 31, டோங்காவில் 9 பேர் இறந்துள்ளனர். மொத்தமாக சுனாமிக்கு 189 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 100க்கும் மேற்பட்ட மக்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமாவோ தீவு மக்களில் பெரும்பான்மையினர் அங்கிருக்கும் மலை பகுதியிலே வசித்து வருகின்றனர். மீண்டும் சுனாமி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கடற்கரை பகுதிகளிலிருந்த இருக்கும் தங்களது வீடுகளுக்கு திரும்ப மறுத்துவிட்டனர். இந்நிலையில் இன்று காலை தெற்கு டோங்கா பகுதியில் மிதமான நிலநடுக்கம்  ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது.

வெளிநாடு சென்றுள்ள எமது நிபுணர்களை தாயகம் திரும்புமாறு ஜனாதிபதி அழைப்பு

290909mahinda.jpgஎத்தகைய தடைகள் வந்தாலும் அரசாங்கத்தின் பயணம் தொடரும். நாட்டைக் கட்டியெழுப்ப வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கல்விமான்கள், நிபுணர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டுச் செலாவணியில் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, பொறியியலாளர்கள் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் மிக அவசியமானதெனவும் தெரிவித்தார்.

இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் 103வது வருடாந்த நிகழ்வு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் பி. தயாரத்ன, மனோ விஜேரத்ன மற்றும் பொறியியல்துறை நிபுணர்கள், கல்விமான்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

நாட்டின் தீர்க்கமானதொரு காலகட்டத்தில் இலங்கை பொறியியலாளர் நிறுவனம் தமது 103வது நிறைவைக் கொண்டாடுகிறது. அதற்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

இந்நாட்டில் பொறியியலாளர்கள், கல்விமான்கள் மட்டுமன்றி சகல துறையினரையும் அச்சுறுத்திய யுகத்துக்கு அரசாங்கம் முடிவு கட்டியுள்ளது. துப்பாக்கியால் மீட்கப்பட்ட நாட்டை கலப்பையினால் பாதுகாத்துக் கட்டியெழுப்பும் யுகம் தற்போது உருவாகியுள்ளது.

நாம் இந்த நாட்டில் பில்லியன் கணக்கில் நிதியைச் செலவிட்டு வீடுகள், பாலங்கள் என நிர்மாணித்தாலும் பயங் கரவாதிகள் ஒருகுண்டை வெடிக்க வைத்து அவற்றை அழித்தனர். வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை அங்கு பாரிய நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் அஞ்சிய காலகட்டமொன்று இருந்தது. அந்த யுகத்துக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. படையினர் இந்த நாட்டை மீட்டு அபிவிருத்தியில் கட்டியெழுப்புவதற்காக எம்மிடம் கையளித்துள்ளனர்.

அரசாங்கம் தற்போது நாட்டின் சகல பகுதிகளிலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுக ளிலிருந்து அதற்குத் தேவையான இயந்திர உபகரணங்களும் இந்நாட்களில் கொள்வனவு செய்யப்படுகின்றன. மஹாவலி போன்ற திட்டங்கள் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு, தெற்கு என எப்பக்கம் சென்றாலும் அபி விருத்தியும் பல்வேறு நிர்மாண நட வடிக்கைகளும் இடம் பெறுவதை நாம் நேரில் காணலாம். வரலாற்றில் முன் னொருபோதுமில்லாத வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எமது தாய்நாடு என்ற உரிமையும் உணர்வும் நாட்டு மக்களிடையே காணப்படுகிறது.

வருடந்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறியியலாளர்கள் எமது பல்கலைக் கழகங்களினால் உருவாக்கப்படுகின்றனர். இவர்கள் தொழில், பிள்ளைகளின் கல்வி என பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்கின்றனர்.  சிலர் இந்த நாட்டில் இருப்பது வீண் என்று நினைக்கின்றார்கள்.

யுத்தம் எமது பொறியியலாளர்களுக்கும் கல்விமான்களுக்கும் ஒரு சாபமாக அமைந்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை சகல இன, மத மக்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் நமது பொறியியலாளர்கள் நிபுணர்கள் கல்விமான்கள் நாட்டில் இருக்கவேண்டும். அந்நியசெலாவணியால் மட்டும் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. கல்விமான்கள் புத்திஜீவிகளின் சேவை மிக அவசியமாகிறது.

பொறியியலாளர் கூட்டுத்தாபனம் தனியாருக்குக் கையளிக்கப்படவிருந்த காலமொன்று இருந்தது.  அதற்காக சிலர் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். திறமையான பொறியியலாளர்கள் ஒரு நாளில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

அந்த நிலை இன்று மாற்றம் பெற்றுள்ளது. அரசாங்கம் தேசிய நிர்மாணக் கொள்கை யொன்றை உருவாக்கியுள்ளது.  இத்துறையை மேலும் கட்டியெழுப்ப கல்விமான்கள் மற்றும் நிபுணர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

நிர்மாணத்துறை ஒப்பந்தங்களை வெளிநாட்டவருக்கு வழங்குவதை நாம் வெகுவாகக் குறைத்துள்ளதுடன் நம் நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாட்டின் அபிவிருத்தி மற்றும் மக்கள் செயற்பாடுகளுக்காக நாம் கடன்களைப் பெறுகிறோம்.

எனினும் எவ்வித நிபந்தனைக்கும் நாம் அடிபணிந்து அவற்றைப் பெறவில்லை. எமக்குக் கடன் கொடுக்க வேண்டாமெனவும், ஜீஎஸ்பி சலுகையை எமக்கு வழங்கக் கூடாதெனவும் சில சக்திகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.

பொறியியல் துறையில் நாட்டை நேசி க்கும் முன்னுதாரணமான பொறியியலாளர்கள் பற்றி நாம் குறிப்பிடவேண்டும். இரணைமடுக் குளத்திலிருந்து வெளியேறும் நீரை வாய்க்கால் மூலம் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்ல எஸ். ஆறுமுகம் ஆலோசனை முன்வைத்தார். ஆறுகள் இல்லாத யாழ்ப்பாணத்துக்கு ஆற்றை வழங்க அவர் முயற்சித்தார்.

இது மனிதாபிமானமாக சிந்திக்கும் செயல். அவ்வாறு இடம்பெற்றால் யாழ்ப்பாணம் மறு மலர்ச்சிபெறும். பொறியியலாளர்களால் இனங்களுக்கிடையிலான பாலத்தை மட்டுமன்றி மனிதாபிமான பாலத்தை உருவாக்கவும் முடியும். இது நாட்டுக்கு என்ன செய்யலாம் என சிந்திக்கின்ற யுகம்.

அவ்வாறு சகலரும் சிந்தித்தால் நாடு பெறுமதியானவற்றை பெற்றுத் தருவது உறுதி என்பதே எனது நம்பிக்கை. இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

சுப்பிரி மலர் கண்காட்சி

021009.jpgவிகார மகாதேவி பூங்காவில் இன்று 2ம் திகதி ஆரம்பமாகும் சுப்பிரி மலர்க் கண்காட்சி 3ம் திகதியும், 4ம் திகதியுமாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இம்மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்காட்சியை திருமதி புண்ணியா கத்திரிஆரச்சி ஏற்பாடு செய்துள்ளார்.

மத்திய மாகாண சாகித்திய விழாவில் தமிழக பேராசிரியர் அப்துல் காதர்

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் சிறப்புப் பேச்சாளராக தமிழ் நாட்டை சேர்ந்த வாணியம் பாடி பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் அப்துல் காதர் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ் சாகித்திய விழா என்பது தனியே தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்குமான சாகித்திய விழா என மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மாத்தளை மாநகரில் ஒக்டோபர் 10ம், 11ம் திகதி நடைபெறவுள்ள தமிழ் சாகித்திய விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே வே.இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் பிரத்தியேக செயலாளர் துரை. மதியுகராஜாவும் கலந்துகொண்டார்.

மாத்தளை மாநகரில் 2002ம் ஆண்டிற்குப் பின் நடக்கும் மத்திய மாகாண சாகித்திய விழாவில் முதல் நாள் காலை 9 மணிக்கு கலாசார ஊர்வலத்துடன் ஆரம்பமாகும். இவ் ஊர்வலம் பாக்கியா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகும். இதல் ஆளுநர் மத்திய மாகாண முதலமைச்சர் அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள்.

2ம் நாள் நிகழ்வில் சாகித்திய விருதுகள் வழங்கப்படவுள்ளன. கட்சி சார்பின்றி கல்விமான்களை கொண்ட குழு இவர்களை தெரிவு செய்யும். இலக்கிய படைப்புகளுக்கான விருதுகளும், பணமுடிப்புகளும் வழங்கப்படவுள்ளன. என்றார்.

சர்வதேச சிறுவர் தினம்: சரண் அடைந்த புலிகளின் சிறுவர், சிறுமியர் ….

021009mainpic.jpgசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புலிகள் இயக்கத்திலிருந்து சரணடைந்த சிறுவர், சிறுமியர் பங்குபற்றும் நிகழ்வொன்று நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மேற்படி சரணடைந்தவர்களுள் 18 வயதுக்குக் குறைந்த சிறுவர், சிறுமியர்கள் இந்நிகழ்வில் பங்கு பற்றினர். இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 500 பேருள் 198 சிறுவர், சிறுமியர்கள் சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதல் அரையிறுதிப் போட்டி இன்று : England (all out; 47.4 overs) 257

021009untitled.bmpஇங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இரவு பகல் ஆட்டமாக இன்று சென்சூரியனில் நடைபெறவுள்ளது.

இதில் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரில் 6 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்தை இலகுவாக வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி இன்றைய தினம் இங்கிலாந்துக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் இம்முறை தொடரில் அபாரமாக செயல்பட்டுவரும் இங்கிலாந்து அணி இன்றைய போட்டியை இலகுவாக விட்டுக்கொடுக்காது எனவும் எதிர்பார்க்கலாம்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவட் பிரோட் காயத்துக்கு உள்ளாகியுள்ளார். இதனால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவதில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது.

England (all out; 47.4 overs) 257

England won the toss and elected to bat
ICC Champions Trophy – 1st Semi-Final
Played at SuperSport Park, Centurion (neutral venue)
2 October 2009 – day/night (50-over match)
Umpires Aleem Dar (Pakistan) and BF Bowden (New Zealand)
TV umpire AL Hill (New Zealand)
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire Asad Rauf (Pakistan)
 
England innings 

 AJ Strauss*  c Hopes b Siddle  14 
 JL Denly  not out  21  
 OA Shah  c †Paine b Lee  0 
 PD Collingwood  c †Paine b Johnson  34   
 EJG Morgan c †Paine b Watson 9
 SM Davies† b Watson 5
 LJ Wright  c †Paine b Siddle  48
 TT Bresnan  b Lee  80 
 GP Swann  run out (Hauritz/†Paine)  18 
 JM Anderson  not out  5
 G Onions  run out (Ferguson/†Paine)  1
 
 Extras (w 6, nb 1) 7     
      
Total (all out; 47.4 overs) 257 (5.39 runs per over)
Fall of wickets1-15 (Strauss, 1.6 ov), 2-16 (Shah, 2.4 ov), 3-71 (Collingwood, 11.2 ov), 4-91 (Denly, 17.2 ov), 5-100 (Davies, 18.5 ov), 6-101 (Morgan, 20.2 ov), 7-208 (Wright, 39.6 ov), 8-245 (Swann, 45.1 ov), 9-251 (Bresnan, 46.2 ov), 10-257 (Onions, 47.4 ov) 
        
 Bowling O
 B Lee 9 0 46 2
 PM Siddle 10 0 55 3
 JR Hopes 4 0 28 0  
 MG Johnson 10 1 61 1 
 SR Watson 8.4 1 35 2
 NM Hauritz 6 0 32 0 5.33