அம்பாறை மாவட்டத்தின் குடி நீர் வசதியில்லாத குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தின் 3ஆவது கட்டத்;தை ஆரம்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் நிதிதிட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்திருந்தார். இத்திட்டத்திற்கான செலவீன மதீப்பீட்டுத் தொகையின் 85 வீதமான 91.8 மில்லியன் டொலரை வரையறுக்கப்பட்ட அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து வங்கிகளின் ஒருங்கிணைப்பு கடனுதவியாக வழங்குகின்றன. எஞ்சிய 15 வீதத்துக்கான 13.3 மில்லியன் அமெரிக்க டொலரை ஹட்டன் நெஷனல் வங்கி கடனாக வழங்குகிறது.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
உலமா சபையின் நடவடிக்கைகளில் அரசியல் சாயம் பூச முனைய வேண்டாமென மெளலவி நியாஸ் முஹம்மத் (கபூரி) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
அண்மையில் ஜனாதிபதி அபேட்சகர் சரத் பொன்சேகா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். இவ்வாறான விஜயங்கள் ஜனநாயக உரிமையாகும். அவரவரின் தெரிவுமாகும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பக்க சார்புகளின்றி நடுநிலைமையாய் சமய, சமயோசித வழியில் வழிநடத்த ப்படும் முஸ்லிம்களுக்கான ஒரு பொது ஸ்தாபனமாகும்.
இது இவ்வாறிருக்க சரத் பொன்சேகா வந்துசென்றதை சிலர் தவறாக விமர்சிக்கின்ற கதையும் அரசியலாக்க முனைகின்ற கதையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இது விடயத்தில் பிழையாக நடந்துகொண்டதாகவும் அதற்காக எதிரணி உலமா சபை ஒன்று உருவாகி உள்ளதாகவும் கதை ஏற்படுத்தி பிரசாரம் செய்வதும் ஒரு வகை அரசியல் இலாபம் ஈட்ட முன¨யும் காரியமாகும்.
உலமா சபை தலைமை பீடத்திற்கு ஜனாதிபதி அபேட்சகராக களமிறங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா வருகை பற்றி கட்சி உணர்வில் உந்தப்பட்டசிலரின் தனிப்பட்ட வித்தியாசமான கருத்துகளின்றி அது மேல் மட்டத்தில் வெளியான கருத்தல்ல. 16.12.2009ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்து இது விடயமாக உலமா சபையின் நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்திய போது ஜனாதிபதி புன்னகை பூத்தவராக ‘மெளலவி அவர்களே இதுவெல்லாம் யார் சொன்னகதை’ அப்படி நான் கருத்துக்கள் கொண்டவனுமல்ல இதற்கு எதிராக விமர்சனம் செய்பவனுமல்ல.
உலமா சபை என்பது உலமாக்களின் சமயத்துடன் இணைந்த ஒரு முஸ்லிம் மத ஸ்தாபனமாகும். அங்கு எவரும் வரலாம், வாழ்த்தும் பெறலாம். அவர்களுக்காக ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்த எனக்கு அவர்கள் நன்றி சொன்னதும் வாழ்த்து தெரிவித்ததும் எனக்கு நன்கு தெரியும். எனக்கும் அந்த உலமா சபை தலைமையகத்துக்குச் செல்ல ஆசைதான். பாதுகாப்பு நலன் கருதி நான் அங்கு செல்ல முடியவில்லை. உங்கள் மூலம் உலமா சபை உலமாக்களை எனது இல்லத்தில் சந்திக்கவும் நான் ஆவலுடன் இருக்கின்றேன்.
இது ஒரு பெரிய விவகாரமும் அல்ல. இதை எனது சார்பில் உலமா சபைக்கு அறிவிக்க தாங்களுக்கு அனுமதி தருகிறேன் என ஜனாதிபதி கூறியதை நினைவூட்டி உலமா சபையை பிரிக்க முனைகிறார்கள் என்ற பிரசாரங்களை விளங்கிக் கொள்வது நல்லது என கருதுகிறேன். எவருக்கும் அரசியல் செய்ய உரிமையுண்டு. ஆனால் உலமா சபையையும் உலமாக்களையும் அடகு வைக்காமல் கீழ்த்தரமாக விமர்சிக்காமல் அவரவரின் அரசியலைத் தொடரட்டும்.’ என அறிவுரை வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி கூறியதை நியாஸ் மெளலவி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவரையில் இடம்பெறாதளவு வன்முறைகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறப் போவதாக எச்சரித்துள்ள ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, வடக்கில் சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் இதுவரையில் அரசினால் ஏற்படுத்தப்படவில்லையெனவும் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். கரு ஜயசூரிய மேலும் கூறியதாவதுதேர்தல் பிரசாரங்களை நீதியாகவும் நேர்மையாகவும் முன்னெடுத்துச் செல்ல ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது. நாம் ஊடகங்களை மதித்தே செயற்படுகின்றோம். எம்மீது அரசு சேறு பூசும் நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக அரச ஊடகங்களை பாவித்து மக்களை ஏமாற்றி வருகின்றது.
வியாழக்கிழமை தேர்தல் பிரசாரம் தொடர்பில் 20/20 போட்டி தொடர்கின்றது. இந்நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடுகள் இடம்பெறலாம். ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வரும் நிலையில் எம் மீதும் ஆரம்பித்துள்ளது. கிழக்கிலுள்ள எமது கட்சி உறுப்பினரான சசிதரன் வீட்டின் மீது குண்டு வீசப்பட்டுள்ளதுடன் கம்புறுப்பிட்டியிலுள்ள எமது அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. அரசு அரசியலமைப்பை மீறி செயற்படுவதனாலேயே இவ்வாறான தேர்தல் சட்டவிதிகளை மீறும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 17 ஆவது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் சுயாதீன தேர்தல், பொலிஸ் உட்பட ஏனைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் தேர்தல் சுயாதீனமாக இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்டவிதிகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை நாம் வரவேற்கின்றோம்.
இன்று அலரி மாளிகை அன்னதான மடமாக மாறியுள்ளது. இது தேர்தல் சட்டவிதிகளை மீறிய செயற்பாடாகும். அவர்கள் சொந்த பணத்தைக் கொண்டு இதனை செய்தால் பிரச்சினையில்லை. அரச இடம் மற்றும் நிதியைக் கொண்டு மேற்கொள்வதால் எதிர்க்கின்றோம். பொலிஸ் அதிகாரிகள் நீதியாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்றனர். எனினும் அதிலுள்ள சிலர் பக்கச்சார்பாக செயற்படுகின்றனர். எனவே சகல தரப்பினரும் நடுநிலையுடன் செயற்படவேண்டுமெனக் கோருகின்றோம்.
தேர்தல் வரலாற்றில் இத்தேர்தலிலேயே அதிகளவு வன்முறைகள் இடம்பெறப் போகின்றன. இதனை அரசே தற்போது ஆரம்பித்துள்ளது. அரச செலவுடனேயே பதாகைகள் அமைக்கப்படுவதுடன் நியமனங்களும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் தேர்தல் காலப்பகுதியில் இடமாற்றம் மேற்கொள்ள வேண்டாமெனக் கோரிய நிலையில் வடமத்திய மாகாணத்தில் 205 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது.
அரச ஊடகங்களில் இரண்டில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களுக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊடகங்கள் எவ்வாறு நேர்மையாக செயற்படும்.தேர்தல் வடக்கில் சுயாதீனமாக இடம்பெற அதற்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. நாம் வடக்கில் பிரசாரம் முன்னெடுக்க அனுமதி பெற்றே செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக முகாம்களிலுள்ள மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு கோருகின்றோம்.
தற்போது முகாம்களில் எஞ்சியுள்ளவர்களில் 75 வீதமானவர்களுக்கு வீடுகள் உள்ளன. எனவே இவர்களை அடைத்து வைக்க வேண்டாமெனக் கோருகின்றேன். மக்கள் தமது விருப்புக்கேற்ப எந்த அழுத்தமுமின்றி சுயாதீனமாக வாக்களிக்கவும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையின்றி சுதந்திரமாக பிரசாரத்தை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் அரசுக்கு முக்கிய பங்குண்டு.
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 363 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டதாக தேசிய அனர்த்த நிவாரண நிலையப் பணிப்பாளர் சரத் பெரேரா நேற்றுத் தெரிவித்தார்.
இந்த வெள்ள நிலைமையினால் 136 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள்ளதுடன் 1336 வீடுகள் பகுதியாக சேதமடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த வார இறுதியில் பெய்த அடை மழையினால் இவ்வாரத்தின் முற்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்:- கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிப்புக்களின் விபரங்களை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைத்துள்ளார்கள்.
அம்பாறை மாவட்ட செயலாளரின் தகவலின் படி, அங்குள்ள 15 பிரதேச வாழும் 54 ஆயிரத்து 308 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இரு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 45 வீடுகள் முழுமையாகவும், 316 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
57 மில்லியன் யூரோவை ஈரான் அரசாங்கம் இத்திட்டத்திற்கு கடனுதவியாக வழங்குகின்றது. இத்திட்டத்தினூடாக 1000 கிராமங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 80 ஆயிரம் பாவனையாளர்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- கடந்த காலங்களிலும் சிறந்த தேர்தல்களை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வழங்கியுள்ளது.
வியாழன் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் புனித முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை வியாழன் மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இம் மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ. ரஸா (மேமன் சங்கம்) முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜும்ஆ பள்ளி வாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள் ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ‘புனித ஸபர்’ மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் (புனித முஹர்ரம் 29) 16.01.2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு எனவும் முடிவு செய்யப்பட்டது.
பாராளு மன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார் .
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்க முன்வரும்போது அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்குவது சரியானதே. இதற்காக அரசாங்கம் புதிய அமைச்சுக்களை உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சுக்களுக்கே அமைச்சர்களாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்கள் நியமிக்கபட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.
பொது மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிகள் அமைச்சர்களுக்கு மட்டும் செலவிடப்படுவதில்லை. அவற்றில் பெருந்தொகைப் பணம் நாட்டின் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவை என்பனபோன்றவற்றுக்குச் செலவிடப்படுகின்றன. உலகில் இலவசக் கல்வியும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படும் ஒரே நாடு எமது இலங்கையே என்றும் அமைச்சர் கூறினார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் என்பவற்றை இடைநறுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுகாதார சேவை போன்ற அத்தியவசிய சேவைகளில் இதற்கு விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் வெற்றியைப் போன்று இரண்டாவது வெற்றியையும் நிச்சயம் பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நாயகம் செயலகத்தில் தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
முதல் வெற்றியாக யுத்தத்தை வெற்றிகொண்டென். அதேபோன்று இரண்டாவது வெற்றியாக பொருளாதார வெற்றியையும் நிச்சயமாகப் பெறுவேன். நாட்டின் முன்னேற்றத்தக்காவே பாடுபடுவதாகவும் ஜனாதிபதி மெலும் தெரிவித்தார்.