செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மலையக மக்கள் தனித்துவம் பேண ஐ.ம.சு.முக்கு வாக்களிக்க வேண்டும் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்

sri-lankas.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த இந்த பொதுத் தேர்தலில், வெற்றிலை சின்னத்தை வெற்றி பெற செய்வதுடன் மலையக மக்கள் தமது தனித்துவத்தை பேணுவதுடன் அவர்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும், அரச நியமனங்களை பெற்றுக் கொள்வதற்கும் இ. தொ. கா. வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமென்று, இ. தொ. கா. பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

தேர்தல் தொடர்பாக அவரிடம் கருத்துக்களை கேட்டபோதே இதனைத் தெரிவித்தார். இத் தேர்தலில் இ. தொ. கா. வின் ஆதரவுடன் அரசாங்கம் அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்த அவர், தொடர்ந்து கூறியதாவது:-தேர்தலின் பின்னர் அரசியலமைப்பில் அரசாங்கம் மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

நாமும் எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் 3179 ஆசிரியர்களும் 500 தபாற்காரர்களும் நியமனம் பெற்றிருக்க மாட்டார்கள். மாறாக இவர்கள் தொழில் தேடி வெளி மாவட்டங்களுக்கு அலைய வேண்டி ஏற்பட்டிருக்கும்.

புனர்வாழ்வு பெற்ற மாணவர் யாழ். பல்கலையில் சேர்ப்பு – 7ம் திகதி உபவேந்தரால் பொறுப்பேற்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை முதல் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிருப்பதாக புனர்வாழ்வு முகாம்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க நேற்று தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் அன்றைய தினம் புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து தமது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்திருக்கும் பல்கலைக்கழக மாணவர்களை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்கள் வழமை போல் பல்கலைக்கழகத்தில் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர முடியுமெனவும் பிரிகேடியர் கூறினார்.

யாழ்ப்பாண புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளவர்களுக்காக எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை சித்திரை புதுவருடப் பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தெல்லிப்பளையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொள்ளவிருக்கும் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர், புனர்வாழ்வளிக்கப்பட்ட பின் தமது குடும்பத்தாருடன் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் மாணவர்களை பொறுப்பேற்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த முதலாம் திகதி புனர்வாழ்வு நிலையங்களிலிருந்த 1365 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வ மாக தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதில் 43 பேர் பல்கலைக்கழக மாணவர்களாவர். இவர்களுள் 12 பேர் மோதல்களின் போது அங்கவீனமடைந்தவர்களெனவும் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

மோதலின் இறுதி கட்ட நடவடிக்கையின் போது படையினரால் மீட்கப்பட்ட இளைஞர், யுவதிகள் புனர்வாழ்வளிக்கப் பட்ட பின்னர் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை ஏனைய புனர்வாழ்வு நிலையங்களிலும் புதுவருட பிறப்பு கொண்டாட்டங்களை நடத்த ஏற்பாடாகி வருவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க பல அனுசரணையாளர்கள் முன்வந்திருப்பதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

வளமான எதிர்காலம் உருவாக ஒன்றுபடுவோம் – ஜனாதிபதி

இலங்கை நாடு எமது தாய்நாடு, இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒரு தாய் பெற்ற மக்களாக வாழுதல் வேண்டும். இந்த நாட்டில் இனிமேல் சிறுபான்மை என்று ஒன்றில்லை. எமது தேசத்தின் மீது அன்பு காட்டுகின்ற எல்லோரும் ஓரினமே.

இவ்வாறு ஓட்டமாவடிப் பாலத்தினை திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி அமீர்அலி அரங்கில் இடம்பெற்ற வேளை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

இந்த நாட்டில் இனிமேல் இன மத குல பேதங்கள் இருக்கக் கூடாது. நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் பட்ட கஷ்டங்கள், துயரங்கள் எனக்குத் தெரியும். அப் பயங்கரவாத நிலை இனிமேல் இந்த நாட்டில் இல்லை. எல்லா இன மக்களும் இனி பாதுகாப்பாக வாழ முடியும். நாம் எல்லோரும் சகோதரர்கள்.

இன ரீதியான அரசியல் நோக்கம் தேவையற்றது. மாறாக வளமான எதிர்காலம் உருவாகப் பாடுபட வேண்டும். நீங்கள் என்னை நம்பினால் நான் உங்களை நம்புவேன். நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியது எனது கடமை. போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன். சொல்வதைச் செய்வேன். உங்கள் பகுதி விவசாய நடவடிக்கைகளு க்கு உரிய வசதிகளை வழங்குவேன். 30 வருட கஷ்ட நிலை மீண்டும் வர வேண்டுமா? உங்கள் பிரதேசம் இன்னும் முன்னேற ஒன்றுபடுங்கள்.

ஆங்கில மொழி அபிவிருத்தி: பயிற்சிபெற்ற மாணவர்க்கு இன்று சான்றிதழ்

சம்மாந்துறை வலய ஆங்கில மொழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பயிற்சிபெற்ற 160 க.பொ. த. (உ/த) மாணவர்க்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் நடைபெற வுள்ளது.

சம்மாந்துறை வலய ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகரும், மொழி அபிவிருத்தித் திட்டப் பொறுப்பாளருமான ஏ. ஆப்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வைப வத்திற்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் கலந்து சிறப்பிப்பார்.

மேற்படி ஆங்கில மொழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இதுவரை 03 அணிகள் தலா 300 மணி நேர ஆங்கில பயிற்சிபெற்று வெளியேறியிருந்தனர். இன்று சான்றிதழ் பெறுவோர் 4வது அணியினர். 300 மணி நேர ஆங்கிலப் பயிற்சிபெற்ற 160 பேர் இன்றைய நிகழ்வில் சான்றிதழ் பெறுகின்றனர்.

தமிழ் வர்த்தகர்களிடம் 4 கோடி ரூபா கப்பம் கோரிய கோஷ்டி அட்டனில் கைது

அட்டனில் மூன்று பிரபல தமிழ் வர்த்தகர்களிடம் சுமார் 4 கோடி ரூபா கப்பம்கோரிய குழுவைச் சேர்ந்த மூவரை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மடக்கிப்பிடித்த அட்டன் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கப்பம் கோரிய குழுவைச்சேர்ந்தவர்களில் இரு ஆண்களையும் ஒரு பெண்ணையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த மூவரும் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரியவருகிறது. இவர்கள் நீண்டகாலமாக இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து இந்தத் தமிழ் வர்த்தகர்களிடம் தொலைபேசியூடாக கப்பம் கோரியுள்ளதுடன், பணத்தைத் தராவிட்டால் குடும்பத்துடன் கடத்தி கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியுமுள்ளனர்.

இதையடுத்து மூன்று வர்த்தகர்களும் அட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுவர்ணசிங்கவின் கவனத்திற்குக் கொண்டு வரவே பொலிஸ் அத்தியட்சர் தலைமையிலான பொலிஸார் கடந்த சில தினங்களாக இரகசிய நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர். இதற்கமைய கப்பம் கோரியவர்களை அட்டன் நகரில் ஓரிடத்திற்கு வருமாறும் அங்கு வைத்து பணத்தைத் தருவதாகவும் வர்த்தகர்கள், கப்பம் கோரியவர்களிடம் தெரிவிக்கவே,வெள்ளிக்கிழமை மூவர் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.

அவர்களிடம் வர்த்தகர்கள் பணத்தை ஒப்படைப்பது போல் சென்றபோது அப்பகுதியில் பதுங்கியிருந்த பொலிஸார் கப்பக்காரர்கள் மூவரையும் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.இவர்களிடமிருந்து ஐந்து கையடக்கத் தொலைபேசிகளும் பல சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன. இவர்கள் தொடர்பாகவும் இவர்களுடன் தொடர்புடைய ஏனையோர் குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

2/3 பெரும்பான்மை பலத்தில் ஐ.ம.சு.மு. நம்பிக்கை கூட்டரசாங்கம் அமைக்கும்

2/3 பெரும்பான்மை பலத்தில் ஐ.ம.சு.மு. நம்பிக்கை கூட்டரசாங்கம் அமைக்கும் எதிர்பார்ப்பில் எதிரணி பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தமக்கு இலகுவாகக் கிடைக்குமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுதியாகத் தெரிவித்துவரும் நிலையில், அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியாவிடினும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டரசாங்கமொன்றை அமைக்க முடியுமென்ற உறுதியான நம்பிக்கையை ஐக்கிய தேசிய முன்னணி வெளிப்படுத்தி வருகின்றது.

தேர்தலுக்கு மூன்று நாட்களே முழுமையாக இருக்கின்ற நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்தத் தேர்தல் மேடைகளில் கடந்த இரண்டொரு தினங்களாகப் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெற்றி தம்பக்கமே சாதகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமென்று நம்பிக்கை தொனிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தென்பகுதியில் கடந்த வாரத்தில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் என்மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் பாராளுமன்றத் தேர்தலில் அந்த நம்பிக்கை மேலும் பலப்படுத்தக்கூடியதாக அமையுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அரசு முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள பணிகளைச் சீராக மேற்கொள்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை மிக அவசியமானது. அதனை நாட்டு மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

இதேபோன்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கூட மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதிபடத் தெரிவித்திருக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளுந்தரப்பு பின்னடைவு கண்ட தொகுதிகளில் இம்முறை அதிகூடிய பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளுமெனவும் இதனூடாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது இலகுவாகிவிடுமெனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மை பலம் தமது கட்சிக்குக் கிடைக்குமெனவும் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கூட்டரசாங்கத்தை தம்மால் அமைக்க முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார். ஜே.ஆர்.ஜயவர்தன அறிமுகப்படுத்திய விகிதாசாரத் தேர்தல் முறையால் ஒருபோதும் எந்தவொரு கட்சியாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற முடியாது எனவும் அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் மூன்று பாராளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் இரண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஒரு தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிபீடமேறியுள்ளது. இந்தத் தேர்தல்கள் எதிலுமே மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆணை வழங்கப்படவில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 85 ஆசனங்கள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி கஷ்டமான காலத்தில் கூட 80 ஆசனங்களுக்குக் குறையாமல் பெற்றுக்கொள்ள முடிந்தது. இம்முறை நாம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது போனாலும் கூட கூடுதல் ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம். அதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகியவற்றின் ஆதரவுடன் கூட்டரசாங்கத்தை அமைத்து நாங்களே ஆட்சியை நிறுவுவோம் எனவும் ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவித்தார்.

இதேபோன்று வரக்கூடிய தேர்தலில் ஜனநாயக தேசியக் கூட்டணி கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளுமெனவும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கூட்டரசாங்கத்தை அமைக்குமெனவும் தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமாரதிஸாநாயக்க கூட்டரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவு – ஊர்வலங்கள், பேரணிகளுக்கு 7 தினங்களுக்கு தடை

2010 பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் நாளை 5ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு பெறுகின்றன. இன்று 4ஆம் திகதி நள்ளிரவு முதல் தேர் தல் பிரசாரங்களுக்கென பயன் படுத்தப்பட்டுவரும் பெனர்கள், கட்அவுட்டுகள், போஸ்டர்கள், கொடிகளை அகற்றும் நடவடிக் கைகளை கடுமையாகச் செயற்படு த்துமாறு பொலிஸாருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தேர்தல் முடிவடைந்து ஏழு நாட்களுக்கு ஊர்வலங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தடைசெய்யப் பட்டுள்ளதாக தேர்தல்களுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

நாளை நள்ளிரவு முதல் பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணி ப்புப் பணிகளுக்கென நியமிக்கப் பட்டுள்ள 2584 நடமாடும் பாதுகாப்பு பிரிவுகளும் செயற்பட ஆரம்பிக்கவுள்ளன. இதேவேளை தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும் இதுவரை வாக்களிக்காதவர்கள் இருப்பின் தவறாது உடனடியாக வாக்களிக்குமாறும், எதிர்வரும் எட்டாம் திகதி மாலை 4.00 மணி க்கு வாக்குச் சீட்டுகள் யாவும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்றும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

19,500 முப்படையினரும், 58,700 பொலிஸ் மற்றும் விசேட அதிர டிப் படையினரும் இன்று முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத் தப்படவுள்ளனர். இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் வேட்பாளர்கள் அனைவரும் தமது பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தைத் தவிர்ந்த ஏனைய அலுவலகங்களை மூடிவிட வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகள், வாக்கெண்ணும் நிலையங்கள், வாக்குப்பெட் டிகள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் என்பவற்றுக்கும் பாதுகா ப்பு வழங்கப்படுகிறது. வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடை க்காதவர்கள் தபாலகங்களில் வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தேர்தல் திணைக்களம் அறிவிக்கிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைவிட பொதுத் தேர்த லுக்கு பாதுகாப்பு நடவடிக்கை கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டிலுள்ள 413 பொலிஸ் பிரி வுகளும் உஷார் நிலையில் வைக் கப்பட்டுள்ளன.

வேட்பாளர்கள் தாம் வாக்களிக்கும் வாக்குச்சாவடியைத் தவிர வேறு வாக்குச் சாவடிக்கு செல்வதாயின் வேட்பாளருக்குரிய ஆளடையாள அட்டையுடன் மட்டுமே செல்லமுடியும் என்றும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஓட்டமாவடி பாலம் நேற்று திறந்து வைப்பு

ஸ்பெயின் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 770 மில்லியன் ரூபா செலவில் ஓட்டமாவடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் கிழக்கின் வசந்தம் கருத்திட்டத்தினூடாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் 250 மீற்றர் நீளத்தையும் 10.5 மீற்றர் அகலத்தையும் கொண்டது.

பொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள இப்பாலத்திற்கான நிர்மாண பணிகள் 2007 நவம்பர் 17ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்தன. பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக்குச் சமர்ப் பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய இப்பாலத்திற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஓட்டமாவடி பாலம் பிரமாண்டமான முறையில் நிர்மாணிக்கப்பட்டு நேற்று மக்கள் உபயோகத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்றைய இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் அமீர்அலி, முரளிதரன், வேட்பாளர்களான அலி சாஹிர் மெளலானா, எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் எம். எஸ். சுபைர் மற் றும் ஐ. ம. சு. மு. முக்கிய ஸ்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கொலை அச்சுறுத்தல்; ஆயுதம் வைத்திருந்தமை – ஐ. தே. மு. வேட்பாளர் கிதெலபிட்டிய கைது

பெண் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் மற்றும் ஆயுதம் வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சுசில் கிதெலபிட்டிய நேற்றுக் காலை கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பெலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய வெலிக்கடை பொலிஸார் நேற்று மேற் கொண்ட சுற்றி வளைப்புக்கமையவே ஐ.தே.மு வேட்பாளரும் அவரது வேன் சாரதியும் கைது செய்யப்பட்டதுடன் அவரது வாகனத்திலிருந்த 7.62 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட் டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் கூறியதாவது:- மிரிஹானை பொலிஸ் நிலையம் வந்த பெண் ஒருவர் தனக்கும் ஐ. தே மு. வேட்பாளரான சுசில் கிதெலபிட்டயவுக்குமிடையில் தொடர்பு இருந்து வந்ததாகவும் தற்போது அவர் தனக்கு அசீட் வீசி கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை தன்னைத் தவிர அவருக்கு மேலும் 20 பெண்களுடன் தொடர்பு இருந்து வருவதா கவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தேடுதல் நடத்திய பொலிஸார் அவரது வாகனத்திலிருந்து 7.62 மில்லி மீற்றர் ரக துப்பாக்கியொன்றை கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்த வான் சாரதி கடற்படையிலிருந்து தப்பியோடியவர் என்ற உண்மை தெரியவந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

தேர்தல் முறையை மாற்றியமைக்க ஐ.ம.சு.முவிலுள்ள கட்சிகள் ஏகதீர்மானம்

2010 பொதுத் தேர்தல் முடிவடைந்த வுடன் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கப்படும் பாராளுமன்றத்தில் தேர்தல் முறையை மாற்றும் நடவ டிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இதனை ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தீர்மானமும் செய்து கொண்டுள்ளன.

விருப்பு வாக்குகள் முறையிலான விகிதாசார தேர்தல் முறையின் கீழ் நட த்தப்படும் இறுதியான தேர்தல் இதுவாகத் தான் இருக்கப் போகிறது என அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். நாட்டிற்கு பெரும் கேடாக இருக்கின்ற இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றித் தாருங்கள் என்றும் மக்கள் உங்களிடம் கேட்கின்றனர்.

தொகுதிவாரியான தேர்தல் முறையில் நிச்சயமாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உறுப்பினர் இருப்பார். அவர் அந்த தொகுதிக்கு பொறுப்பு கூறக்கூடியவராக, பொறுப்பு கூற வேண்டியவராக இருப்பார். குறிப்பாக அவர் கண் ணாடி வீட்டிற்குள் இருப்பவர் போன்று இருக்க வேண்டியவராக இருப்பார்.

எமது நாட்டிற்கு ஒரு தொல்லை யாக இருந்த பயங்கரவாத ஒழிக் கப்பட்டு விட்டது. அதே போன்று மிகப் பயங்கர விளைவுகளை தந்து கொண்டிருக்கும் விகிதாசார தேர்தல் முறையிலும் விரைவில் மாற்றம் கொண்டுவரப்படும் என்றார். தேர்தல் மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு க்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் முதற்கட்டமாக தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்பதை உறுதி செய்தார்.