இலங்கை நாடு எமது தாய்நாடு, இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒரு தாய் பெற்ற மக்களாக வாழுதல் வேண்டும். இந்த நாட்டில் இனிமேல் சிறுபான்மை என்று ஒன்றில்லை. எமது தேசத்தின் மீது அன்பு காட்டுகின்ற எல்லோரும் ஓரினமே.
இவ்வாறு ஓட்டமாவடிப் பாலத்தினை திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஓட்டமாவடி அமீர்அலி அரங்கில் இடம்பெற்ற வேளை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி தலைமையில் இடம்பெற்ற இப்பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
இந்த நாட்டில் இனிமேல் இன மத குல பேதங்கள் இருக்கக் கூடாது. நீண்ட காலமாக இப்பகுதி மக்கள் பட்ட கஷ்டங்கள், துயரங்கள் எனக்குத் தெரியும். அப் பயங்கரவாத நிலை இனிமேல் இந்த நாட்டில் இல்லை. எல்லா இன மக்களும் இனி பாதுகாப்பாக வாழ முடியும். நாம் எல்லோரும் சகோதரர்கள்.
இன ரீதியான அரசியல் நோக்கம் தேவையற்றது. மாறாக வளமான எதிர்காலம் உருவாகப் பாடுபட வேண்டும். நீங்கள் என்னை நம்பினால் நான் உங்களை நம்புவேன். நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டியது எனது கடமை. போலி வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டேன். சொல்வதைச் செய்வேன். உங்கள் பகுதி விவசாய நடவடிக்கைகளு க்கு உரிய வசதிகளை வழங்குவேன். 30 வருட கஷ்ட நிலை மீண்டும் வர வேண்டுமா? உங்கள் பிரதேசம் இன்னும் முன்னேற ஒன்றுபடுங்கள்.
NANTHA
தமிழர்களுக்கு விடுதலை(?) என்று புறப்பட்டவர்கள் “தமிழர்கள் அனைவரும் ஒருதாய் பெற்ற மக்கள்” என்று எங்கும் சொன்னது கிடையாது. ஆனால் ஒரு மஹிந்த வந்து ஓர் மானிட உண்மையை சொல்ல வேண்டிய கால கட்டம் வந்துள்ளது. வெறுப்பும் துவேஷமும் வளர்த்துக் குளிர் காய்ந்தவர்களுக்கு மகிந்தவின் பேச்சு கடுக்காய் பேதியாகவே இருக்கும்!
thurai
//தமிழர்களுக்கு விடுதலை(?) என்று புறப்பட்டவர்கள் “தமிழர்கள் அனைவரும் ஒருதாய் பெற்ற மக்கள்” என்று எங்கும் சொன்னது கிடையாது//நந்தா
தமிழர்களிற்கு அவர்கள் வணங்கும் குலதெய்வங்களே ஒருதாய் பெற்ர மக்கள் என்று சொல்லாதபோது இனியார்தான் சொல்வார்கள்.
துரை
NANTHA
தெய்வங்கள் பேசியதாக சான்றுகள் இல்லை. அப்படி எந்த குலதெய்வம் தமிழில் பேசியது?