செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இந்தோனேசியாவில் விமான விபத்து-78 பேர் பலி

indo.jpgஇந்தோ னேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள கிராமத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணம் செய்த 78 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானம் இந்தோனேசிய ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். ஜகார்த்தாவிலிருந்து, ஜாவாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, மடியுன் என்ற இடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

வயலில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அருகில் இருந்த கட்டடங்களில் மோதி விமானம் கீழே விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரியவில்லை. விமானத்தில் 100 பேர் இருந்ததாகவும், இதுவரை 78 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த விமானம் சி-130 ரக ஹெர்குலிஸ் விமானம் ஆகும். வழக்கமான பயிற்சியில் அது ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியது

இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்க விசேட நடவடிக்கையெடுக்கப்படும் – பிரதிக்கல்வியமைச்சர்

shachi.jpgகொடூர யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு அவசர கல்வியை செயற்படுத்தும் வகையில் பிரதிக்கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தலைமையிலான கல்வி அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் வவுனியா செல்லவுள்ளது.

இது தொடர்பாக பிரதிக்கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

அமைச்சர் சச்சிதானந்தனால் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவிற்கு வழங்கிய பணிப்புரைக்கமைய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் சேகரிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள், உடைகள் மற்றும் மருந்துவகைகளுடன் இக்குழு செல்லவுள்ளது.

“”யுத்தத்தின் காரணமாக இதுவரை நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்வுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் மோதல்கள் இடம்பெற்றுவரும் பகுதிகளிலுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் சில பாடசாலைகளில் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சில பாடசாலைகள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர் சமூகமும் இவ் இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வியைத் தொடர உடனடிச் செயற்பாடுகள் அவசியம்.

இது தொடர்பில் ஜனாதிபதி, கல்வி அமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் நடத்தினோம். அதன் பயனாக கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள், உடைகள் மற்றும் மருந்துவகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் அடுத்த வாரமளவில் நாம் வன்னி செல்லத் தீர்மானித்துள்ளோம். இதன்போது மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்பது அதன் அடிப்படை உரிமை மீறும் சம்பவம்

hands.jpgகுழந்தை ஒன்று பிறந்தவுடன் ஒரு தாயின் முதலாவது கடமையும் உரிமையும் தாய்ப்பால் கொடுப்பதாகும். அதேபோல குழந்தையின் முதலாவது உரிமையும் தாய்ப்பாலாகும். ஆனால், அந்த உரிமையும் கடமையும் தற்போது மறுக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இவ்வாறு கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சேனைக்குடியிருப்பு “சேவோ’ அமைப்பு ஏற்பாடு செய்த சிறுவர் ஊர்வலமும் குறைகேள் மன்றமும் கல்முனை கிறிஸ்தவ இல்லத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு கூறினார்.

சேவோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய டாக்டர் ரமேஸ்; சிறுவர் உரிமைகள் பற்றி பல நிறுவனங்கள் பலதரப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்திவருகின்றன. ஆனால், ஒரு தாய் தனது பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்க மறுப்பது அக்குழந்தையின் உரிமையை தாயே மீறும் போது இக்கருத்தரங்குகளும் விழிப்புணர்வுகளும் அர்த்தமற்றதாகிவிடும்.

தாய்ப்பால் இன்றி குழந்தைக்குப் போதிய போஷாக்குக் கிடைப்பதில்லை.அதனால், அக்குழந்தையின் எதிர்காலம் பாழடிக்கப்படுகிறது. ,மின்சாரம் இல்லாதது ஒரு தடையாக அமையாது. தன்னம்பிக்கை இருந்தால் எதிலும் வெற்றிபெறலாம். இதற்கு உதாரணமாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தெருவிளக்கில் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றார்.

பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் மைக்கேல் மார்ட்டீன் ராஜினாமா

_michaelmartin.jpgபிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவினங்கள் தொடர்பான சர்ச்சையில் நாடாளுமன்ற சபாநாயகர் மைக்கேல் மார்ட்டீன் ராஜினாமா செய்துள்ளார்.

பிரபாகரன் உயிரிழக்கவில்லையென்று சர்வதேச மட்டத்தில் சிலர் பிரசாரம்: அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் – அமைச்சர் யாப்பா

yappa.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாதத்தை இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களில் முற்றாக ஒழித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் உலகத்தில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியவர்கள். முதன் முதலாக மனித வெடிகுண்டு என்ற அழிவு முன்மாதிரியை வெளிக்காட்டியவர்கள். எனது இளமைக் காலம் அரசியல் தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முக்கியமாக சிவிலியன்களை புலிகள் கொலை செய்தனர். மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. தமிழ் மக்களுக்கே துரோகம் இழைத்தனர்.

இலங்கையின் பொருளாதார மையங்களை அழித்தனர். புலிகளின் அழித்தல் தொடர்பான விடயங்களை கேள்வியுற்றவாறே எனது இளமை காலம் கழிந்தது. எப்போதும் நிம்மதியற்ற வகையிலேயே காலத்தை கழித்தோம். ஆனால், தற்போது எதிர்கால சந்ததியினருக்கு நாம் அதனை விட்டு வைக்கவில்லை. இன்னும் புலிகளுக்கு சிலர் வக்காளத்து வாங்குவதாகவே தெரிகிறது. பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லையென சர்வதேச மட்டத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயற்படின் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். 

ஊடகத்துறையே உலகிலுள்ள மிகவும் பயங்கரமான ஆயுதம் – அமைச்சர் கெஹெலிய

keheliya_rambukwella.jpgஊடகத்துறையே உலகிலுள்ள மிகவும் பயங்கரமான ஆயுதமாகும். இலங்கையில்  பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் இந்த ஊடகங்கள் அளப்பறிய பங்கை வகித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் உறுதியுடன் முன்னெடுக்கப்படதால் இன்று இந்த அபார வெற்றி கிடைத்துள்ளது. எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புக்கு உதவியளித்துக்கொண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையை ஒரு விளையாட்டுத்திடலாகப் பயன்படுத்தினர். பிரபாகரனை ஒரு மாபெரும் வீரனாகவும் இலங்கை அரசாங்கத்தை மோசமாகவும் விமர்சித்த அந்த நிறுவனங்களுக்கு சரியான பதில் இன்று கிடைத்துள்ளது. ஆசியாவிலேயே இலங்கையை முதன்மை நாடாக உயர்த்த இலங்கையர் அனைவரும் திடசங்கட்பம் பூணவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். 

பிரபாகரனின் உடலை கருணா அம்மான் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினார்

படையினரின் தாக்குதலில் பலியான பிரபாகரனின் உடலை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இன்று பார்வையிட்டதோடு அது பிரபாகரன்தான் என அடையாளம் காட்டினார்.

புலிகள் இயக்கத்தில் முன்னாள் கிழக்குத் தளபதியாக இருந்த கருணா அம்மான் பிரபாகரனின் நெருங்கிய சகாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பிரபாகரன் மரணச் செய்தி அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது.

இன்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது. விடுதலைப் புலிகள இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அசாதாரண நிலை காணப்படுகிறது.

இன்று காலை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தின் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

சேலத்தில் புதிய பஸ் நிலையப் பகுதியில் இன்று காலை குடியுரிமை நடுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அப்போது அரசுப் பேருந்து ஒன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டது. பஸ் டிரைவரும், கண்டக்டரும் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செல்லக்குப்பம் பகுதியில், ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்து எரிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், சிதம்பரம் , மஞ்சக்குப்பம் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் பிரபாகரன் மரணச் செய்தி அசாதாரண நிலையை உருவாக்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் இதே பேச்சாக உள்ளது. சில பகுதிகளில் வர்த்தர்கள் அவர்களாகவே கடைகளை அடைத்துள்ளனர். பஸ் போக்குவரத்து உள்ளிட்டவை இயல்பாக உள்ளது.

வடக்கு, கிழக்கில் 265,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

unhcr.jpgஇலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடந்த மோதல்கள் காரணமாக இதுவரை 265,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் சரியான நிவாரணங்கள் மற்றும் சரியான கட்டுமானங்களின்றிப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக யூ.என்.எச்.சீ.ஆர். பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட் கூறினார்.

புலித்தேவன் மற்றும் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்

LTTE LOGOஇலங்கை இராணுவத்தின் சூழ்ச்சியால் ஆயுதம் தரிக்காத புலிகளின் அரசியல் துறையச் சேர்ந்த புலித்தேவன, மற்றும் ப.நடேசன்  ஆகியோர் நேற்றுக் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.