ஊடகத்துறையே உலகிலுள்ள மிகவும் பயங்கரமான ஆயுதமாகும். இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் இந்த ஊடகங்கள் அளப்பறிய பங்கை வகித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் உறுதியுடன் முன்னெடுக்கப்படதால் இன்று இந்த அபார வெற்றி கிடைத்துள்ளது. எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புக்கு உதவியளித்துக்கொண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையை ஒரு விளையாட்டுத்திடலாகப் பயன்படுத்தினர். பிரபாகரனை ஒரு மாபெரும் வீரனாகவும் இலங்கை அரசாங்கத்தை மோசமாகவும் விமர்சித்த அந்த நிறுவனங்களுக்கு சரியான பதில் இன்று கிடைத்துள்ளது. ஆசியாவிலேயே இலங்கையை முதன்மை நாடாக உயர்த்த இலங்கையர் அனைவரும் திடசங்கட்பம் பூணவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.