எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கிங்ஸ் லெவன் அணியின் தலைவராக சங்கக்கார

kumar.jpgஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இந்தி யாவின் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார்.

புதிய தலைவராக இலங்கையின் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) 3 வது “டுவென்டி-20” கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப். 25 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது.  இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. கடந்த 2 தொடர்களில் இந்த அணியின் தலைவராக யுவராஜ் சிங் செயல்பட்டார்.

ஆனால் இந்த முறை தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியின் புதிய தலைவராக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப் பட்டுள்ளார். இது குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

“யுவராஜ் சிங்கிற்கு பதில் 3 வது ஐ.பி.எல். தொடரில் சங்கக்கார அணியை வழிநடத்துவார். இதன் மூலம் அணியின் பலம் அதிகரிக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தொடர்களில் அணியின் தலைவராக யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவரது தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலாவது முறை அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.

அணியின் தலைமைப் பதவியிலிருந்து அவரை நீக்குவதால், அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. அணியில் அவருக்கு என தனி இடம் உண்டு” என்றார். இது குறித்து சங்கக்கார கூறியதாவது, கடந்த இரண்டு தொடர்களில் யுவராஜ் சிங்கின் தலைமையில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது.

அவர் மிகச் சிறந்த தலைவர் தவிர எனது நல்ல நண்பர். அணி நிர்வாகத்தின் புதிய முடிவு குறித்து அவரிடம் பேசினேன். அதற்குப் பின் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்தேன்.

இதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் யுவராஜ். ஆட்டத்தின் போக்கை அவரால் எந்த சமயத் திலும் மாற்ற முடியும் இவ்வாறு சங்கக்கார கூறினார்.

தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில்,

“யுவராஜ் துடுப்பாட்டத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என அணி நிர்வாகம் விரும்புகிறது. தலைமைப் பொறுப்பு அவரது செயல்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது.

வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவரும் இணைந்து சிறப்பாக தயாராகி வருகிறோம். அணி நிர்வாகத்தின் முடிவை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார் யுவராஜ்” என்றார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் இன்று

sania-mirza.jpgஅவுஸ் திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு சவாலானதாக அமைந்துள்ளது. ஆண்டின் முதல் கிராண்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் நடக்கிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ராபெல் நடால் மற்றும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், டினரா சபினா (ரஷ்யா), இவானோவிச் (செர்பியா) போன்ற வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, கடந்த ஆண்டு இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்.

இம்முறை இவருக்கு முதல் சுற்று போட்டி, கடினமானதாக இருக்கும் என தெரிகிறது. தர வரிசையில் 56வது இடத்தில் இருக்கும் இவர், 26வது இடத்தில் உள்ள பிரான்சின் அரவானே ரேசாயை சந்திக்கிறார். இதற்கு முன் இருவரும் மூன்று முறை மோதியுள்ளனர். இதில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர்.

அனுர பிரியதர்ஷன யாப்பா கட்சித்தாவல் ஒரு வதந்தியே

anu.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட்டோ ஒருபோதும் நான் விலகிச் செல்லப் போவதில்லை என அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.  ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்று முன்தினம் குளியாப்பிட் டியவில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஜனநாயகத் தலைவர் ஒருவரை விட்டு ஏகாதிபத்திய தலைவரின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் நீரோட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கட்சியின் சிரேஷ்ட உபதலைவர்களுள் ஒருவராக கட்சிக்குள்ளும்,  கட்சியின் தலைவரிடம் வரவேற்கும் நன்மதிப்பும், இருக்கிறது என சுட்டிக்காட்டிய அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தான் வேறு அரசியல் நீரோட்டத்தில் கலக்கப் போவ தாக பரவியுள்ள வதந்திகளில் உண்மை யில்லை என்றும் அவற்றை தான் வன்மை யாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 566 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு

படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் மேலும் 566 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா காமினி மகா வித்தியாலயம், பம்பைமடு உட்பட வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்கள் 566 பேரும், வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அருகே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகளினால் பலாத்காரமாக சிறுவர் படையணிக்கு சேர்க்கப்பட்டிருந்த சிறுவர் சிறுமியர்களில் சிலரும், புலிகள் இயக்கத்தில் மிகவும் அடி மட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தவர்களில் சிலருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்தும் சுமார் 1000 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும் அரசின் திட்டத்திற்கமைய எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஹெய்ட்டி பூகம்பத்தில் மரணித்தோர் எண்ணிக்கை 2 இலட்சமாக உயர்வு

haiti-earthquake02.jpgஹெய்ட்டி பூகம்பத்தில் மரணித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து ஹெய்ட்டி உள்துறை அமைச்சர் பால் அந்தோனி கூறும் போது, மரணித்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை தாண்டியுள்ளது. மீட்கப்பட்ட 40 ஆயிரம் உடல்களை கூட்டம் கூட்டமாக பல்வேறு இடங்களில் புதைத்து இருக்கிறோம்’ என்றார்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வீடுகளை இழந்தவர்களுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசியல் யாப்பு – தேர்தல் முறையில் மாற்றம்

luxman.jpgஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களை பாராளுமன்றத்துக்கு உள்ளீர்க்கும் வகையில் அரசியல் யாப்பிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்களை கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதியின் இத்தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் தொடர்பாடல் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா நேற்று தெரிவித்தார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததும் நடைமுறையில் இருந்து வரும் அரசியல் யாப்பில் நாட்டுக்கு பொருந்தக்கூடிய வகையில் மேலும் பல திருத்தங்கள் முன்னெடுக்கப்படும். இதனடிப்படையில் பாராளுமன்ற முறையிலும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படும். சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், அவர்கள் விகிதாசார முறையடிப் படையில் பாராளுமன்றத்தில் உள்Zர்க்கப் படுவார்கள்.

இதேவேளை மக்கள் சபை, கிராம சபை ஆகியன ஸ்தாபிக்கப்படுவதன் மூலம் கிராமங்கள் தோறும் அபிவிருத்தி செய்யப்ப டும். மேலும் தேர்த லில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கல்வி மான்களை உள்ளடக்கிய செனற் சபை யொன்றை ஸ்தாபிப்பது குறித்தும் ஜனாதி பதி தனது விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய அரசியல் முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஊழல், வன்முறைகளற்ற நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமென்பது ஜனாதிபதியின் நம்பிக்கை.

அரசியல் யாப்பில் மேற்குறிப்பிட்ட மாற்றங்களை கொண்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசித்து சில தீர்மானங்களை பெற்றுக் கொள்ள எமது கட்சி தயாராகவுள்ளது. எனவே எதிரணியினர் இதில் பங்குபற்றுமாறு நாம் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

எதிரணியினர் இதற்கு இணங்காவிடின், அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதனை அமுலுக்குக் கொண்டு வருவோமெனவும் அமைச்சர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

நிறை வேற்று ஜனாதிபதி முறையினை இல்லாமல் செய்யப்போவதாக கூறிக் கொண்டே சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கி னார். அன்று ஒரு மேடையில், தான் பதவிக்கு வந்தால் நாட்டின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல அதிகாரங்களை தான் பெற்றுக்கொள்ள விருப்பதாக கூறியுள்ளார். தானே தனது கருத்துக்களுடன் முரண்படுகின்றார். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் அமைச்சர்களே தேவைப்படாது போல் தெரிகிறது.

ஜனாதிபதி பதவிக்கு பொன்சேகா தெரிவாகிவிடுவாரோ என்று சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. அவரால் ஒருபோதும் ஜனாதிபதியாகிவிட முடியாதென்பது நிச்சயம். நாட்டில் சிறுபான்மையினர் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் விகிதாசார முறையடிப்படையில் அவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதே ஜனாதிபதியின் பிரதான குறிக்கோளாகுமே தவிர சுய ஆட்சி முறையில் ஸதாபிப்பது அல்ல.

பயங்கரவாதிகளை அழிப்பதற்காக 26 ஆயிரம் படையினர் உயிரிழந்ததுடன் 37 ஆயிரம் பேர் வரையில் தமது கை, கால்களை இழந்துள்ளனர். தேர்தல் என்றதும் இவர்களை மறந்துவிட்டு யாருக்கும் சுயாட்சி பெற்றுக் கொடுப்பது ஜனாதிபதியின் நோக்கமல்ல.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினருடன் சுய ஆட்சியை பெற்றுக்கொள்வதற்கான இரகசிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதனை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வேளை கூடவிருந்த கூட்டமைப்பிக் எம். பி. ஒருவரே வானொலி ஊடகவியலாளருடன் உரையாடுகையில் ஊர்ஜிதம் செய்துள்ளார்.

அது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தேர்தலைத் தொடர்ந்து, உரிய ஒலிப்பதிவு ஆவணங்களைக் கொண்டு நாம் எதிர்க்கட்சியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினருக்கான அனைத்து உரிமைகளும் சுதந்திரங்களும் பெற்றுக்கொடுக்கப்படுவது உறுதி. இருப்பினும் அவரது ஆட்சியின் கீழ் சுயஆட்சி முறைக்கு மாத்திரம் ஒருபோதும் இடமளிக்கப்படாது.

நாட்டு மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவி ருந்த பயங்கரவாதம் ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது. இனி நாட்டுக்கும் மக்களுக்கும் தேவைப்படுவது அபிவிருத்தியே. மஹிந்த சிந்தனையின் இரண்டாம் பாகத்தினூடாக ஐந்து பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மூன்றாம் உலக நாடாகிய இலங்கையை முதலாம் உலக நாடாக மாற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இனிவரும் காலங்களில் புதியதொரு அபிவிருத்தி யுகத்தை இலங்கையில் காண முடியுமெனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேலும் குறிப்பிட்டார்.

10 நிமிட “கட்சிதாவும்” நாடகம் அரங்கேற்றம்

mohomad-muzzammil.gifஜே.வி.பி. யிலிருந்து வெளியேறி தேசிய சுதந்திர முன்னணி (விமல் வீரவன்ச)யில் இணைந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முஸம்மில் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக வந்து விட்டு பத்து நிமிடத்தில் மீண்டும் திரும்பிச் சென்ற சம்பவம் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

நேற்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மயோன் முஸ்தபாவுடன் ஒன்றாக வாகனத்தில் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் மயோன் முஸ்தபாவிடமும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிடமும் தனது குடும்பத்தவர்கள் ஆளும் தரப்பினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்து தனக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்புப் பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படுனெ ரவி கருணாநாயக்க உறுதியளித்த பின்னரும் கூட பயந்ததுபோல் காட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் திடீரென ஜெனரலை சந்திக்காமலேயே வெளியேவந்து ஊடகவியலாளர்கள் நின்ற இடத்தில் வந்து இங்கு எம்மை காசுக்கு வாங்கப்போகிறார்கள். இந்த விளையாட்டு எனக்குச் சரிவராதென்று கூறிவிட்டு கதவைத்திறந்து கொண்டு வெளியே பாய்ந்து காரில் ஏறி விரைவாகச் சென்று விட்டார்.

அதன் பின்னர் இச் சம்பவம் பற்றி செய்தியாளர் மாநாட்டில் மயோன் முஸ்தபாவிடம் கேட்டபோது மேலே எதுவுமே நடக்கவில்லை. அவர் ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சந்திக்கவுமில்லை. யாருடனும் பணப்பரிமாற்றம் இடம்பெறவுமில்லை என அவர் தெரிவித்தார். தனது குடும்பம் அச்சுறுத்தப்படுவதாகவும் தனக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்பைப் பெற்றுத்தருமாறுமே அவர் கேட்டார். பின்னர் எதுவுமே பேசாமல் வெளியேறிவிட்டார். அவர் ஏன் வந்தார். எதற்காகத் திரும்பிப்போனார் என்பது எவருக்குமே தெரியவில்லை எனவும் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.

இதுவரை 473 தேர்தல் வன்முறைகள்

sri_election.jpgதேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரை 473 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு எதிராக 6 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இது தொடர்பாக மேலும் அந்நிலையும் தெரிவிக்கையில்

தேர்தல் வன்முறை தொடர்பில் 473 முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளோம். தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் வியாழக்கிழமை மாலை 4 மணிவரை தேர்தல் வன்முறைகள் இவ்வாறு அதிகரித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கின்றோம். எமக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் பாரிய, சிறிய மற்றும் துப்பாக்கி பிரயோக சம்பவமென மூன்றாக பிரித்துள்ளோம்.

இதன்படி பாரிய சம்பவங்களாக 208, சிறிய சம்பவங்களாக 265 மற்றும் துப்பாக்கியுடன் தொடர்புடைய சம்பவமென 62 என வகைப்படுத்தியுள்ளோம்.பாரிய சம்பவங்களில் ஒரு கொலைச் சம்பவம் உட்பட கொலை முயற்சி சம்பவங்கள் 4 அடங்குகின்றது. அத்துடன் இதில் 60 தாக்குதல் சம்பவங்களும் 59 அச்சுறுத்தல் சம்பவங்களும் அடங்குகின்றன. மாவட்ட ரீதியில் அதிகூடிய சம்பவங்களாக மாத்தறையில் 43 ம் குருநாகலில் 41 ம் அம்பாந்தோட்டையில் 39 ம் அநுராதபுரத்தில் 35 ம் கம்பஹாவில் 32 ம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக நாம் 239 ம் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 5 ம் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக 24 ம் ஜே.வி.பி.க்கு எதிராக 10 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.

அடையாளம் காணப்படாமல் 181 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ள அதேநேரம், இம்முறை பொலிஸாருக்கு எதிராக 6 முறைப்பாடுகளை பெற்றுள்ளோமென தெரிவித்துள்ளது.இதேவேளை, தேர்தலைக் கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான கபே தேர்தல் வன்முறை தொடர்பில் 317 முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்துத் தெரிவிக்கையில் பொலநறுவை வன்முறைச் சம்பவத்துக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி. ஆகிய வற்றின் 6 தேர்தல் காரியாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், எதிர்காலத்தில் நிலைமை மோசமடையும். நாம் நேற்று வியாழன் வரை 317 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.

இந்த நிலைமைக்கு அரசாங்கம் 17 ஆவது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான். இதனால் பொலிஸார் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. தேர்தல் ஆணையாளரின் உத்தரவையும் பொலிஸார் நடைமுறைப் படுத்தாததற்கு இதுவே காரணமாகும்.

பொன்சேகா அணிக்கு மாற 3 கோடி ரூபாவுக்கு பேரப் பேச்சு விலைபோகமாட்டேன் என்கிறார் முஸம்மில்

muzzammil.jpgஅரசாங் கத்திலிருந்து வெளியேறி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்காக தனக்கு 30 மில்லியன் ரூபா மயோன் முஸ்தபாவால் வழங்கப்பட்டதாகவும் ஆனால் தன்னை வாங்க முடியவில்லை என்றும் தான் கட்சி மாறப்போவதில்லை என்றும் தேசிய சுதந்திர முன்னணி எம்.பி. எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் முஸம்மில் இதனை தெரிவித்ததாக “அததெரண’  இணையத்தளம் தெரிவித்தது.செய்தியாளர் மாநாட்டில் பேசிய பா.உ முசம்மில், ரணில் விக்கரமசிங்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் என்னை அழைத்து சரம்பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குமாறும், அவ்வாறு ஆதரவு வழங்கினால் 300 மில்லியன் பணமும் வெளிநாடு ஒன்றில் வாழ்வதற்குரிய சகல ஏற்பாடுகளும் செய்து தருவதாகவும்; கூறினர். அதன்பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம அவர்களின் ராஜகிரியவில் உள்ள காரியாலயத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் அங்கும் பா.உ ரவி கருணாநாயக்க இருந்தார். ஜெனரல் கலந்து கொள்ளும் விசேட ஊடகவியலாளர்கள் மாநாடொன்று உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு ஜெனரலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிகுமாறும் என்னை வேண்டினர். அத்துடன் பா.உ மயோன் முஸ்தபா தலைமையிலான குழுவொன்று என்னிடம் பணப்பெட்டி ஒன்றை தந்தனர். அந்தப்பணத்தை எண்ணுவதற்குக்கூட எனக்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. 

இது இவ்வாறிருக்க கவர்ச்சிகரமான நிதியை வழங்குவதன் மூலம் தேசிய சுதந்திர முன்னணி எம்.பி.யான முகமட் முஸம்மிலின் ஆதரவை பெறுவதற்கு எதிரணி முயற்சித்ததாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச நேற்று தெரிவித்துள்ளதுடன் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆதரவை விலைக்கு வாங்குவதற்கு எதிரணி மேற்கொண்ட முயற்சிக்கான ஆதாரத்தை ஊடகங்களுக்கு விரைவில் வெளிப்படுத்த இருப்பதாக நிருபர்களிடம் நேற்று வீரவன்ச தெரிவித்ததாக டெய்லி மிரர் இணையத்தளம் தெரிவித்தது. இந்த செய்தியாளர் மாநாட்டின் போது பிரசன்னமாகியிருந்த முஸம்மில் தன்னை எதிரணிக்கு விற்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஹெய்ட்டிக்கு உதவிகளை அனுப்புவதில் சிரமம்

haiti-earthquake02.jpgபெரும் பூகம்பம் ஏற்பட்ட ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு அவசர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க தாங்கள் போராடிவருவதை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான அழிவுகள் நிவாரணப் பொருட்களையும் கருவிகளையும் கொண்டு சேர்ப்பதென்பதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.  இருபது லட்சம் பேர் வரையிலானவர்களுக்கு உணவு உதவி வழங்க ஐ.நா. எண்ணம் கொண்டுள்ளது என்றாலும் தற்போது வெறும் நான்காயிரம் பேரை மட்டுமே அதனால் சென்றடைய முடிந்துள்ளது.

haiti-earthquake02.jpgஅமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலான கார்ல் வின்சன் ஹெட்டியை சென்றடைந்துள்ளது. அதிலிருந்த ஹெலிகாப்டர்கள் தலைநகருக்கு உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன.