10 நிமிட “கட்சிதாவும்” நாடகம் அரங்கேற்றம்

mohomad-muzzammil.gifஜே.வி.பி. யிலிருந்து வெளியேறி தேசிய சுதந்திர முன்னணி (விமல் வீரவன்ச)யில் இணைந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முஸம்மில் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கப்போவதாக வந்து விட்டு பத்து நிமிடத்தில் மீண்டும் திரும்பிச் சென்ற சம்பவம் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

நேற்று ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் மயோன் முஸ்தபாவுடன் ஒன்றாக வாகனத்தில் ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் மயோன் முஸ்தபாவிடமும் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிடமும் தனது குடும்பத்தவர்கள் ஆளும் தரப்பினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்து தனக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்புப் பெற்றுத்தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படுனெ ரவி கருணாநாயக்க உறுதியளித்த பின்னரும் கூட பயந்ததுபோல் காட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் முஸம்மில் திடீரென ஜெனரலை சந்திக்காமலேயே வெளியேவந்து ஊடகவியலாளர்கள் நின்ற இடத்தில் வந்து இங்கு எம்மை காசுக்கு வாங்கப்போகிறார்கள். இந்த விளையாட்டு எனக்குச் சரிவராதென்று கூறிவிட்டு கதவைத்திறந்து கொண்டு வெளியே பாய்ந்து காரில் ஏறி விரைவாகச் சென்று விட்டார்.

அதன் பின்னர் இச் சம்பவம் பற்றி செய்தியாளர் மாநாட்டில் மயோன் முஸ்தபாவிடம் கேட்டபோது மேலே எதுவுமே நடக்கவில்லை. அவர் ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சந்திக்கவுமில்லை. யாருடனும் பணப்பரிமாற்றம் இடம்பெறவுமில்லை என அவர் தெரிவித்தார். தனது குடும்பம் அச்சுறுத்தப்படுவதாகவும் தனக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்பைப் பெற்றுத்தருமாறுமே அவர் கேட்டார். பின்னர் எதுவுமே பேசாமல் வெளியேறிவிட்டார். அவர் ஏன் வந்தார். எதற்காகத் திரும்பிப்போனார் என்பது எவருக்குமே தெரியவில்லை எனவும் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • ssganendran
    ssganendran

    தேர்தல் வந்தால் இலங்கையில் இதெல்லாம் சகஜமையா

    Reply