எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ஓய்வூதியத்தை ஏப்ரல் 6 இல் வழங்க ஏற்பாடு

sri-lankan-money.jpgஏப்ரல் மாதத்தின் ஓய்வூதியப் பணம் (ஏப்ரல்) ஆறாம் திகதி வழங்கப்படும். ஓய்வூதிய திணைக்களத்தின் முந்திய அறிவிப்பின் பிரகாரம் ஏப்ரல் மாதம் எட்டாம் திகதியே ஓய்வூதியப் பணம் வழங்கப்படவிருந்தது. ஏப்ரல் 8ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அம்மாதத்துக்கான ஓய்வூதியச் சம்பளம் 6ம் திகதி வழங்கப்படும் என ஓய்வூதியத் திணைக்களம் மாற்றியமைத்துள்ளது.

சமஷ்டி தீர்வை வலியுறுத்தி தமிழ்க் கூட்டமைப்பு விஞ்ஞாபனம்

jaffna.jpgஇணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சமஷ்டி கட்டமைப்பு அடிப்படையிலான அதிகாரப்பகிர்வை உள்ளடக்கியதாக அரசியல் தீர்வுகாணப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் இது ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

யாழ்நகரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் மாவை சேனாதிராஜா வெளியிட்ட கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே அரசியல் தீர்வு தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இச் செய்தியாளர் மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பின் 11 வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய இனம் என்பதுடன் அவர்கள் இலங்கைத்தீவில் ஏனைய இனத்தவருடன் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகவும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துடையவர்கள் என்பதையும் அதிகாரப் பகிர்வுக்கான முக்கியமான அம்சமாக கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன்,நிலம், சட்டம், ஒழுங்கு ,கல்வி, சுகாதாரம், சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள், நிதி என்பனவற்றுக்கான அதிகாரங்களைக் கொண்டதாகவும் அதிகாரப்பகிர்வு அமையவேண்டுமெனவும் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வட,கிழக்கில் வேலைவாய்ப்பை உருவாக்க வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஏற்பாடு செய்தல், உயர்கல்வி வசதிக்கான ஏற்பாடுகள் வட, கிழக்கு இராணுவ சூன்யப்பகுதியாக்குதல்,இடம்பெயர்ந்த மக்களை கௌரவமான முறையில் மீளக்குடியமர்த்துதல், தடுப்பு காவலில் குற்றம் சுமத்தப்படாதிருப்பவர்களை விடுவித்தல், ஏனையோருக்கு பொதுமன்னிப்பு போன்ற வலியுறுத்தல்களும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒற்றுமையை வலியுறுத்தியுள்ள விஞ்ஞாபனத்தில் உரிமைகளை பெற்றுக்கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நிவாரணக் கிராமங்களில் இன்னும் 93 ஆயிரத்து 800 பேர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டோரில் 4942 பேர் திரும்பவில்லை – அமைச்சர் சமரசிங்க

இடம் பெயர்ந்த மக்களுள் இன்னமும் 93,823 பேர் மட்டுமே மீளக் குடியமர்த்தபடவுள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

கடந்த மார்ச் 10ஆந் திகதிய கணக்கின்படி வவுனியாவில் உள்ள முகாம்களில் 61,898 பேர் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் 1347 பேர் உள்ளனர். வைத்தியசாலைகளில் 1604 பேருமாக மொத்தம் 64849 பேர் முகாம் களில் உள்ளனர் என்று கூறிய அமைச்சர் சுதந்திரமாக நடமாட 24032 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலும் 4942 பேர் குறித்த தினத்தில் திரும்பி வரவில்லை யென்றும் கூறினார்.

இவ்வாறு 28974 பேர் சுதந்திரமாக நட மாட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

‘மிஹின்’ லங்கா சேவை இலாபத்தில் மேலுமொரு விமானத்தை கொள்வனவு செய்யத் திட்டம்

mihin-lanka.jpgமிஹின் லங்கா விமான சேவை கடந்த மூன்று மாதங்களுக்குள் அதி கூடிய இலாபம் கண்டிருப்பதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்தார். கடந்த டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மாதங்களில் 300 சதவீத இலாபம் அடைந்ததன் மூலம் தமது வாக்குறுதியை காப்பாற்றி யுள்ளோமெனவும் அவர் கூறினார்.

தகவல் தொடர்பாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இத னைத் தெரிவித்தார். மிஹின் லங்காவின் பிரதான குறிக்கோள் தலயாத்திரிகர்களுக்கும் வெளி நாட்டுப் பணிப்பெண்களுக்கும் குறந்த செலவில் சேவை வழங்கு வதாகும்.

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிதாக இன் னொரு விமானத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளோம்.

அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றவர்கள் விமானச் சீட்டின் கட்டணத்தை 10 தவணைகளில் செலுத்துவதன் மூலம் வெளி நாடொன்றுக்கு பயணம் செய்யலாம். இந்த சலுகையை இராணுவ வீரர்களுக்கும் வழங்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை பேங்கொக்கிலுள்ளவர்களை சலுகையடிப்படையில் இலங்கைக்கு அழைத்து வரும் திட்டமொன்றினை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்த 5 ஆண்டு தேசிய செயல் திட்டம் – முதற்கட்ட பணிப்பூர்த்தி; சர்வதேசத்திடம் கையளிக்கவும் ஏற்பாடு

மனித உரிமைகளை உறுதிப்படுத்து வதற்கான தேசிய செயல்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தேசிய செயல்திட்டம் முழுமைப்படுத்தப் பட்டதும் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தப்படுமென்று கூறிய அமைச்சர், அதனை ஐரோப்பிய ஆணைக் குழுவுக்கும் ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் கையளிக்கவுள்ளதாகவும் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.

”மனித உரிமைகள் விடயத்தில் பிர ச்சினை இல்லை என்று நாம் கூற வில்லை. பல சவால்களும் உள்ளன.

எனவேதான் 2010 முதல் 2015 வரையிலான ஐந்தாண்டு தேசிய செயல்திட்டமொன்றைத் தயாரித்து வருகிறோம்” என்று அமைச்சர் கூறினார். செயல்திட்டம் பூர்த்தி செய் யப்பட்டதும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறினார். ஒன்றரை வருடத்துக்கு முன்னரே இதற்கான பணிகள் ஆரம்பமானதாகக் கூறிய அமைச்சர் இது வெறுமனே ஜீ.எஸ்.பீ சலுகைக் காகவன்றி பொதுவாக நிலைப்பா ட்டை எடுத்துரைக்கும் திட்டமாக இருக்குமென்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டுச் சூழ்ச்சிகளை முறியடிக்க உழைக்கும் வர்க்கம் தயாராக வேண்டும்

alevi-maulana.jpgஉள்நாட்டி லிருந்து எழும் அழுத்தங்கள் சூழ்ச்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்க உழைக்கும் வர்க்கத்தினர் தயாராக வேண்டுமென சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மெளலானா தெரிவித்தார். தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றைப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். எதிர்வரும் 8ம் திகதி நாம் பெற்றுக்கொள்ளும் வெற்றி அதற்கு சிறந்த வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

‘மஹிந்த சிந்தனை’ எதிர் காலத் திட்டத்தைத் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு விளக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாடு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் அலவி மெளலானா தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்:-

தொழிலாளர் வர்க்கம் எப்போதும் ஜனாதிபதியுடனேயே உள்ளது. கடந்த தேர்தலிலும் அவர்கள் முழுமையான ஆதரவினை வழங்கினர். நாட்டிலுள்ள முஸ்லிம்களைப் பொறுத்தவரை 75 வீதமானோர் பொதுத் தேர்தலிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கே தமது முழுமையான ஆதரவினை வாங்குவார்கள் என்பது உறுதியாகிவிட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் சவால் குறித்து கவலையில்லை – அநுரகுமார

அமைச்சர் மேர்வின் சில்வாவினால் பொதுத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் வெற்றிக் கிண்ணத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டணிக்கு அவர் விடுத்த சவால் குறித்து எந்த அச்சமும் கிடையாதென ஜனநாயக தேசிய கூட்டணியின் தேசிய பட்டியல் உறுப்பினரும் ஜே.வி.பி. பாராளுமன்ற குழுத் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே கொழும்பு ராஜகீய மாவத்தையிலுள்ள ஜனநாயக தேசிய கூட்டணியின் அலுவலகத்தில்   வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அநுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பொதுத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வருவேன்.ஆனால் வெற்றிக்கிண்ணம் சின்னத்தில் எவராவது பாராளுமன்றத்துக்கு வந்திருந்தால் நான் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு நான் திரும்பிச் சென்று விடுவேன். பாராளுமன்றம் வரமாட்டேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த அநுரகுமார திஸாநயக்க எம்.பி.;ஒருவர் தன்னிடம் இருக்கும் ஒன்றைக் கொண்டுதான் பந்தயம் கட்ட வேண்டும். ஆனால், இது புதுமையான பந்தயம் அவரால் (மேர்வின் சில்வா) தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முடியாது.அவர் எம்.பி. ஆக மாட்டார் என்பதால் நாம் இதுபற்றி எந்த அச்சத்தையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

பான் கீ மூனின் செயற்பாட்டுக்கு அணிசேரா இயக்கம் கண்டனம்

un-secretary-general.jpgஇலங் கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக தமக்கு அறிவுறுத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கையை அணிசாரா இயக்கம் கண்டித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள அணிசேரா இயக்க கூட்டிணைப்பு பணியகத்தின் தலைமைத்துவம் இந்த விடயம் தொடர்பாக கடிதம் ஒன்றை ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திலேயே தனது கண்டனத்தை அணிசேரா இயக்கம் தெரிவித்துள்ளது அவ்வாறான நிபுணர்கள் குழுவை நியமிக்கும் விடயம் இலங்கையில் உள்ள நிலையை கருத்திற் கொள்ளாமலும் இலங்கை அரசுடன் கலந்தாலோசிக்காமலும் எடுக்கப்படுவதாக அணி சாரா இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட விடயம் தன்னிச்சையாக விசாரிப்பதற்காக உள்நாட்டிலேயே குழுவொன்றை நியமிக்கும் தனது நோக்கத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட உரிமையில்லை என்று அணி சாரா இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில குறிப்பிட்ட நாடுகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படுவது ஐ.நா. அமைப்பின் ஸ்தாபக கொள்கை மற்றும் அதன் சாசனத்துக்கு முரணானது என்று அணிசாரா இயக்கத்தின் கூட்டிணைப்பு பணியகம் கூறியுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கையில் தற்போது இடம்பெறும் ஒருங்கிணைப்பை பலப்படுத்தும் முயற்சிகள் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு நன்மையை விட தீமையையே ஏற்படுத்தக் கூடும். எனவே இலங்கை அதன் உள்நாட்டு நடைமுறையை பூரணப்படுத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அணி சாரா இயக்கம் கூறியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் கட்சி தலைவர்களுடன் இன்று சந்திப்பு

election_cast_ballots.jpgபாராளு மன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையிலான முதலாவது கூட்டம் இன்று பிற்பகல் தேர்தல் திணைக்களத்தில் நடைபெற உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் 24 அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கு பற்ற உள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள் தேர்தல் முறைகேடுகளை தடுப்பது, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தருவிப்பது உட்பட பல விடயங்கள் ஆராயப்படும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பகுதியில் 12 கிராமங்களில் 19ம் திகதி மீள்குடியேற்றம்

Buses_on_Election_Duty_25thJan10கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இம்மாதம் 19ஆம் திகதி மீளக் குடியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான சகல ஒழுங்குகளையும் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி நா. கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.

கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கனகபுரம், உதய நகர் கிழக்கு, மேற்கு, உருத்திரபுரம் கிழக்கு, திருநகர் வடக்கு, தெற்கு, பெரிய பரந்தன், ஜெயந்தி நகர், ஆனந்தபுரம், விவேகானந்த நகர், கணேச புரம், கிளிநகரம் மேற்குப் பகுதி ஆகிய கிரா மங்களைச் சேர்ந்தவர்கள் இம்மாதம் 19ஆம் திகதி மீள் குடியமர்த்தப்பட உள்ளார்கள்.