எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

58 வது படையணி புதுக்குடியிருப்பு மேற்கை கைபற்றியுள்ளனர்

udayar-kattu-tmv.jpgஇரணுவத்தின் 58வது படைணி புதுக்குடியிருப்பு மேற்கை முற்றாக கைப்பற்றி அதன்பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதாக களநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

6வது கெமுனு படையணி,8வது கெமுனு படையணி,12வது கெமுனு படையணி,11வது காலால் படையணி,10வது காலால் படையணி, 7வது சிங்கப் படைப்பிரிவு என்பன கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தாக்குதல் நடத்தி இப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். படையினர் இப்பகுதியை கைபற்ற ஏ-35 (பரந்தன்- முல்லைத்தீவு) பாதைக்கு வடக்காகவும் தாக்குதல் நடத்தியதுடன் பயங்கரவாதிகளின் கடும் எதிர்பு நிலைகளையும் பல நீர்நிலைத் தடைகளையும் தாண்டி இப்பகுதியை கைபற்றியுள்ளதாக களத்திலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலைத் தொடர்ந்து நடத்திய தேடுதலின் போது 28 பயங்கரவாதிகளின் சடலங்களைக் கைபற்றியுள்ளனர் இதில் 14 சடலங்கள் ரி-56 ரக துப்பாக்கிகளுடன் கைபற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு- மேற்கு, பரந்தன் நகருக்கு 18 கி.மீ.தொலைவில் உள்ளது. பயங்கரவாதிகளிடம் எஞ்சியிருப்பது புதுக்குடியிருப்பு நகரமாகும். கைபற்றப்பட்ட பகுதியின் பாதுகாப்பை படையினர் பலப்படுத்தி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் கடத்தப்பட்ட இலங்கைப் பிரஜையை விடுவிக்க நடவடிக்கை!

pilipinas.jpgபிலிப் பைன்ஸில் கடத்தப் பட்டிருக்கும் இலங்கைப் பிரஜையைப் பாதுகாப்பாக விடுவிடுப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம், பிலிப்பைன்ஸ் அரசைக் கேட்டுள்ளது. வெளி விவகார அமைச்சு இது தொடர்பாக  பிலிப் பைன்ஸ் வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இதேவேளை பிலிப்பைன்ஸிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும்; மணிலாவில் இயங்கும் வன்முறையற்ற அமைதிக்கான செயலணியினருடன்; பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மூதூரைச் சேர்ந்த ஒமர் ஜமில் என்பவர் வன்முறைகளற்ற அமைதி செயலணியில் தென் பிலிப்பைன்ஸில் பணியாற்றி வந்த வேளையில் கடந்த வெள்ளியன்று தென் பிலிப்பைன்ஸின் பாசிலான் தீவின் லமிற்றன் நகரில் தங்கியிருந்த சமயம் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

இவரைப் பாதுகாப்பாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சைக் கேடடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பல்வேறு எச்சரிக்கைகளின் மத்தியிலேயே எமது அரசியல் பணிகள் தொடர்கிறது -மனோ கணேசன்

mano_ganesan_mp_.jpgஅடுத்த இரு வாரங்களில் நான் கொலைசெய்யப்படவிருப்பதாக நேற்று காலையிலிருந்து தொடர்ச்சியாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி செய்தியலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகள் தொடர்பில் பதற்றமடையவேண்டாமென ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

இந்திய தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளையடுத்து கொழும்பு, மலையகம், வடகிழக்கு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருந்து பெருந்தொகையான தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்திய தொலைக்காட்சி செய்திகளை பார்த்தும், கேட்டும் அறிந்துகொண்ட கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்டவர்கள் மிகவும் பதற்றமடைந்துள்ளனர்.

இலங்கையிலிருந்து சென்றிருக்கக்கூடிய ஒரு கிறிஸ்வ மதத்தலைவர் என்மீது அக்கறைகொண்டு இந்த கருத்தை இந்திய தொலைக்காட்சிகளில் தெரிவித்துள்ளார். நான் கவனமாக இருந்து நீண்ட நாள் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுவே அவரது நோக்கமாகும்.

நான் கொலை செய்யப்படவிருப்பதாக கடந்த மூன்று ஆண்டுகளாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய முயற்சிகள் நடைபெறுவது எனக்குத் தெரியும். என்னை கொலை செய்வதற்கு மூன்று முறை நாள், இடம் குறிக்கப்பட்டு கடைசி நேரத்தில் அவை கைவிடப்பட்டதாக மறைந்த நண்பர் ஸ்ரீபதி சூரியாராச்சி என்னிடம் அவர் இறப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். எனவே, இத்தகைய எச்சரிக்கைகள் மத்தியில்தான் எனது அரசியல்பணி தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

இன்று எமது கட்சி மேல்மாகாணத்திலிருந்து மத்திய மாகாணத்திலும் பிரவேசித்து வெற்றிக்கொடி நாட்டிவரும் வேளையில் எம்மை அகற்றிவிடவேண்டுமென சிலர் முன்னைவிடவும் அதிகமாகவும் விரும்புகின்றார்கள்.

மனோ கணேசனை பற்றியும் எமது ஜனநாயக மக்கள் முன்னணி பற்றியும் எதிர்கால வரலாறு தீர்ப்பு கூறட்டும். இன்று நிலவும் அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து மரணிப்பதைவிட நிமிர்ந்து நின்று அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மண்ணில் விழுவதே மகத்தான மனித வாழ்க்கை என்பது எனது தந்தை கற்றுத்தந்த பாடமென்றும் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்துவரப்பட்ட மக்கள் தொகை 1212 . கொழும்பு, கண்டி ஆஸ்பத்திரிகளுக்கு 28 பேர் அனுப்பிவைப்பு

trico-hospital.gifமுல்லைத் தீவிலிருந்து மூன்று தொகுதிகளாக கப்பலில் அழைத்து வரப்பட்ட வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த 1212 பொதுமக்களில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைத்து 306 பேருக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 28 பேர் விசேட சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கும் கண்டி போதனா ஆஸ்பத்திரிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 11 இலிருந்து பெப்ரவரி 16 வரை திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களில் இதுவரை இருவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். ஒருவர் வேலாயுதம் சிவகுமார். மற்றவர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.

வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரிமுகாங்களுக்கு திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட வன்னிப்பிரதேசமக்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (17.02.2009), நண்பகல் 12 மணி வரை அனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.

17.02.2009, நண்பகல் 12 மணி வரையான நிலைவரப்படி வெளிமாவட்டங்களிலுள்ள அரச ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பிரதேச மக்களின் எண்ணிக்கை வருமாறு;

கந்தளாய் ஆஸ்பத்திரி 84, தம்பலகமம் 33, பொலன்னறுவ 86, திருகோணமலை ஆஸ்பத்திரி 678, திருமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரி83,

முல்லைத் தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 16  திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ள வன்னிப் பொதுமக்களின் பெயர், விபரங்கள் வருமாறு;

1.சுனிதா, குமுழமுனை, முல்லைத்தீவு (வயது 17)
2. ஆர். கமலாவதி, தாமரைக்கேணி, முள்ளியவளை(வயது47)
3. வி. ரஜனிகாந்த்,ஓடந்தன்குளம், முல்லைத்தீவு(வயது 27)
4. வி.பாலச்சந்திரன்,ஜமுனை, சுழிபுரம் கிழக்கு(வயது 47)
5.சொக்கலிங்கம்,இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 58)
6. சொக்கலிங்கம் பராசக்தி, தட்சணமருதனாமடு,(வயது 56)
7. மாரி, துணுக்காய், மல்லாவி,(வயது 37)
8. அடையாளம் தெரியாதவர், கண்டிக்கு மாற்றம்
9. ஏ.மோகனசுதாகர், உதயநகர், கிளிநொச்சி, (வயது 23)
10. அடையாளம் தெரியாதவர்
11. கே. சிவபாக்கியம், முழங்காவில்,(வயது 74)
12. ஷீபா,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 33)
13. ஜே. அபிலாஷி, மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 01)
14. ஆர். புனிதமலர், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது23)
15. சுபிதா, அக்கராயன்குளம்,(வயது 21)
16. யதுசன், அக்கராயன்குளம், (வயது25)
17. கே. பிரதீபன், (வயது 09)
18. ஆர். ஜெயலட்சுமி, பளை, கிளிநொச்சி,(வயது 51)
19.கே. தனுஷியா, விவேகானந்தா நகர், கிளிநொச்சி,(வயது22)
20. சுபாஜினி அன்ரனிராஜா, திருகோணமலை,(வயது 23)
21. டினுஷன்,திருகோணமலை,(வயது 05)
22. டிலுஷா, திருகோணமலை,(வயது 02)
23. கே.சுகதாஸ், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 23)
24. பி.கதிரவேலு,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 75)
25. பி. ஆனந்தன் ,விசுவமடு,(வயது63)
26.சி. சசிதரன், தம்பிரா, பூநகரி,(வயது 20)
27.ராமஜயலட்சுமி,ஆண்டான்குளம், அடம்பன்,(வயது 55)
28. பி.லாவண்யா, முள்ளியவளை,முல்லைத்தீவு,(வயது 15)
29.சிவகுமார், யாழ்ப்பாணம்,
30.எம். பத்மாதேவி, இராமநாதபுரம்,(வயது39)
31.சிவானந்த சர்மா, பூநகரி,(வயது 35)
32. பி. சுகந்தினி, மாமல்லபுரம்,(வயது 39)
33. என். சண்முகசுந்தரம், புத்தூர், புளியங்குளம், (வயது 51)
34. ஏ. சாந்திலா, நடன்குடியிருப்பு, விசுவமடு, (வயது51)
35. பி. சிவஞானம், தம்பளை, கோணாவில்,(வயது 55)
36.எஸ். இராஜகுமார், பளை, கிளிநொச்சி,(வயது 44)
37 கே. நடராஜா, உருத்திரபுரம், கிளிநொச்சி
38. கலைவாணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது32)
39. கிருஷ்ணகுமார். வல்லியபுரம், புதுக்குடியிருப்பு,(வயது 30)
40. சந்தியாமேரி, ஜோசப், (வயது 65)
41. ஜே. இராமச்சந்திரன், மாசார் பளை, (வயது64)
42. ஜனூசன், மாசார் பளை,(வயது05)
43. ரி. ஜனரூபன், நட்டாங்கண்டல், (வயது34)
44. ஜி. தர்ஷியா, நட்டாங்கண்டல், (வயது04)
45. இராஜேஸ்வரி, இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 39)
46. ஏ. பார்வதி, பரந்தன், கிளிநொச்சி, (வயது 61)
47. டிலானி, பரந்தன், கிளிநொச்சி,(வயது 01)
48.அருளானந்தன், வட்டாரம் 9, புதுக்குடியிருப்பு, (வயது67)
49. ஏ.பிலோமினா, புதுக்குடியிருப்பு (வயது64)
50. கே. தவராசா, திருநகர், கிளிநொச்சி, (வயது47)
51. சுலக்ஷன், ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 12)
52. எஸ். சுபாகரன், கிளிநொச்சி, (வயது39)
53. ரி.தண்டாயுதபாணி, வட்டுவடக்கு, சித்தன்கேணி,(வயது74)
54. செபமாலை,(வயது 73)
55. எம். மைக்கல்ராஜ், வலையன்மடு,முல்லைத்தீவு,(வயது 21)
56.என்.சுபைதா, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 30)
57. காவ்யா, செம்மலை, முல்லைத்தீவு
58. வசந்தராணி, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 32)
59. எம்.கே. கேதீஸ்வரன், பெரியதம்பனை,வவுனியா,(வயது 52)
60. ஆர். சசிகலா, ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 35)
61. ராபேக்கா,மலையமடு,(வயது20)
62. ரவிக்குமார், ஆனந்தபுரம் கிளிநொச்சி,(வயது 36)
63. ஆர். பாலகிருஷ்ணா, விசுவமடு, முல்லைத்தீவு,(வயது 63)
64.லெனின் குமார், முழங்காடு, கிளிநொச்சி,(வயது 33)
65. எல். விதுஷானி, (வயது11)
66. கே.ஜோர்ஜர். மாதலை, முல்லைத்தீவு.(வயது 43)
67. நடிமலர், வவுனிக்குளம், முல்லைத்தீவு,(வயது44)
68. அடையாளம்தெரியாது
69.எம். மதுமிதன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)
70. எம். புஷ்பமலர், மாதலை, முல்லைத்தீவு,(வயது 39)
71. எல். மைதிலி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 33)
72. விந்துஜன், மாதலை, முல்லைத்தீவு,(வயது 05)
73. விழியரசு, மாதலை,முல்லைத்தீவு,(வயது 1 1/2)
74. பி.பூசன், ஆல்காடி, மன்னார், (வயது 63)
75, ஜே. டேனோயன், யூனிட் 05, தர்மபுரம்,(வயது 15)
76. எஸ்.நாகவர்த்தினி,பரந்தன், கிளிநொச்சி,30
77. நாகவதனி, பரந்தன், கிளிநொச்சி,25
78. என்.சிவகுமார்,பரந்தன், கிளிநொச்சி,36
79. எஸ்.குகஜனி, பரந்தன், கிளிநொச்சி,05
80. ஏ.மரியநாயகம், தர்மபுரம்,யுனிட் 5 கிளிநொச்சி,60
81. கே.கணேஸ் வவுனிக்குளம், முல்லைத்தீவு,63
82. ஆர்.நவசீலன், தெல்லிப்பழை,31
83. வி.லச்சுமி, இயக்கச்சி கிளிநொச்சி,55
84. யோகேஸ் கந்தகன்,கப்பமடு மன்னார்,20
85. கே.தரணி,பாலி நகர் வவுனிக்குளம்,09
86. ஏ.ஜகராஜன் மல்லாவி, பாலிநகர்,40
87. பி.ஸ்ரீவன்னி பாலைநகர், மல்லாவி,43
88. பி.ரவிசியா பாலைநகர் மல்லாவி,08
89 ஜே.கிவிதன் பாலை நகர், மல்லாவி,06
90. எம்.இராசம்மா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,69
91. சி.பாஸ்கரன், வட்டக்கந்தன், மன்னார், 33
92. ரி.மலர்விழி, கிளிநொச்சி,27
93. ஆர்.தவசீலன், மாதலை, முல்லைத்தீவு, 30
94. ரொபர்ட் ராஜா, பொக்கணை,30
95. பி.இராசம்மா, தேவிபுரம்,66
96. கிருபாகரன்,ரத்னபுரம்,கிளிநொச்சி,26
97. அடையாளம் தெரியவில்லை
98. எஸ்.நடராஜன்,28 விவேகாநந்தர் நகர் மேற்கு, கிளிநொச்சி, 52
99. அடையாளம் தெரியவில்லை மரணம்
100. ரி.தியாகலிங்கம்,நட்டாங்கண்டல்,மாங்குளம்,50
101. கே.ராமாஜி,தர்மபுரம்,71
102. புன்னியவதி, தேவிபுரம்,58
103. ஜே.அனிலவன்,தேவிபுரம்,1.5
104. ஜே.வாணி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,32
105. ஆர்.ஜனனி,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,06
106. ஆர்.ராஜிதா,தேவிபுரம்,புதுக்குடியிருப்பு,26
107. எம்.மாரியப்பன்,156 ஆவது மைல்,கிளிநொச்சி,63
108. கவில்தாஸ்,கல்வலி,புதுக்குடியிருப்பு,10
109. குமாரதாஸ், கல்வலி,புதுக்குடியிருப்பு,41
110. ரி.வடிவேலு,404 7ஆவது ஒழுங்கை தர்மபுரம்,77
111. யோகராஜ்,மாதலை,முல்லைத்தீவு,55
112. கார்த்திகா,வல்லாங்குளம், முல்லைத்தீவு,21
113. ஜயராணி,முல்லைத்தீவு,50
114. கே.பிரதீபா,தேவிபுரம்,முல்லைத்தீவு,18
115. கே.ராஜேஸ்வரி
116. எம்.லட்சுமி,கிளிநொச்சி,58
117. எஸ்.கசிகரன், வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,07
118. எஸ்.சிவகௌரி,வித்தியாபுரம்,ஒட்டிசுட்டான்,32
119. சாம்பவி,07
120. வீ.சரஸ்வதி,தேவிபுரம்,முல்லைத்தீவு,23
121. நித்ரன்,மாதலை,முல்லைத்தீவு,11
122. கே.பரமேஸ்வரி,59
123. ஏ.புவியரசன்,பூக்கானல்,கிளிநொச்சி
124. எம்.புஸ்பவதி,கிளிநொச்சி,58
125. ஐ.தம்பிராஜ்,தர்மபுரம்,53
126.வி.இராசையா,கிளிநொச்சி,60
127. அபிஹுதன்,மாதலை,முல்லைத்தீவு,34
128. கே.அபிராஜ்,மாதலை,முல்லைத்தீவு,05
129.அபிஷங்கர்,மாதலை,முல்லைத்தீவு,03
130. வி.பவளம்,மாதலை,முல்லைத்தீவு,68
131. கே.வசந்தகுமார்,மாதலை,முல்லைத்தீவு,34
132. ஏ.வேலாயுதம்,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,73
133. செபஸ்தியன் குரூஸ்,மன்னார்,45
134. வை.சுரேந்திரன்,சாவகச்சேரி,29
135. ஹேமா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,25
136. பிரிதா,137,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,2.5
137. ஆர்.சுதீஸ்வரன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,28
138. கே.கிரிசாந்தன்,கொக்கன அடக்காடு,முல்லைத்தீவு,13
139. சுரேந்தினி,கொக்கன,அடக்காடு, முல்லைத்தீவு,03
140. கே.பரசாவதி,141. கே.சுரேந்திரன்,உடையார் கட்டு தெற்கு,முல்லைத்தீவு ,07
142. எஸ்.நிர்மலா தேவி,மாதலை,முல்லைத்தீவு,37
143. கம்சிகா,மாதலை,முல்லைத்தீவு,04
144. கே.ரவீந்திரன்,மட்டுவில் மேற்கு,பூநகரி,52
145. ஏ.நவரசி,கிளிநொச்சி,33
146. கே.தமிழ்ச்செல்வி,கிளிநொச்சி,07
147. கே.தமிழ்பிரியன்,கிளிநொச்சி,03
148. எஸ்.சிவசந்தியா,புதுக்குடியிருப்பு,முல்லைத்தீவு,09
149. எஸ்.தர்சினி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,02
150. எஸ்.கௌசலா தேவி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,28

மக்கள் தொலைக்காட்சி – யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை

makkaltv-1802.jpgதமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்றுப்பு மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இலங்கைப் படையினரால் நேரடியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்குடா நாட்டின் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகின்ற தமிழ் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்புகள் உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் மக்கள் டிவி நிகழ்ச்சிகளை மட்டும் மறு ஒளிபரப்புச் செய்வதற்கு ராணுவம் தடை விதித்துள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், இப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை உடனுக்குடனும் மக்கள் டிவி காட்டுவதே ராணுவத்தின் கோபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.  இந்தப் பிரதேசத்தில் சன் டிவி மறு ஒளிபரப்பு தொடர்ந்து நடக்கிறது.

இது தொடர்பாக மக்கள் தொலைக்காட்சி நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் அ. சிவகுமார் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதிலிருந்து எல்லா விதத்திலும் நடுநிலையாக செயல்பட்டு வருவதை, பலவிதமான ஆய்வுகளும், அமைப்புகளும் பாராட்டியுள்ளன. ஊடகநெறியை மீறாமல் உலகத் தமிழர்களின் குரலாக இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை தொடர்பான உண்மைநிலையை மட்டும் விருப்பு வெறுப்பின்றி தொடர்ந்து எடுத்துரைப்பதால், இலங்கை இராணுவம் மக்கள் தொலைக்காட்சியை அந்நாட்டில் ஒளிபரப்ப முழுவதுமாக தடை விதித்துள்ளது.

மக்கள் தொலைக்காட்சிக்கு இலங்கையில் இராணுவத்தினர் விதித்துள்ள தடை, உலகளவில் கருத்து சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. ஊடக சுதந்திரத்தின் குரல் வளையை நெரித்துவரும் இலங்கை அரசின் சர்வாதிகார நடவடிக்கையையே இந்த செயல் காட்டுகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலை செய்திகளை வெளியிட்டதற்காக பி.பி.சி. உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு ஜனநாயக பாதையைவிட்டு தடம்மாறி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு ஊடகங்கள் மீதான தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் மக்கள் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் ஒரு சான்றாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளத இலங்கையில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப கூடாது என அங்குள்ள கம்பிவட இயக்குநர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக அரசியல் தலைவர்களும், சக ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் தங்கள் கண்டனக் கணைகளை பதிவு செய்யவேண்டும். தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் மக்கள் தொலைக்காட்சிக்கும், ஊடகநெறியைக் காப்பாற்றப்படுவதற்கும் துணை நிற்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சு.கவில் இணைய கருணா தீர்மானம். கிழக்கில் தனது பணிமனைகளை சு.க.

karuna-mp.jpgகிழக்கு மாகாணத்தில் கருணா அம்மான் தலைமையில் இயங்கும் அனைத்து பணிமனைகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகமாக பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளன.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கருணா அம்மான் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படுமென முரளிதரன் எம்.பி யின் பேச்சாளர் கமலநாதன் தெரிவித்தார்.

‘நானும் கட்சியின் மூத்ததலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியில் சேரப்போகிறோம்’ என கருணா அம்மான் இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நானும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் சுதந்திரக் கட்சியில் சேரப் போகிறோம். இதற்காக ஒருவாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச இருக்கின்றேன். அதன் பிறகு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அலுவலகம் அனைத்தையும் சுதந்திரக் கட்சி அலு வலகமாக மாற்றுவோம் என முரளிதரன் எம். பி. கூறியதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.சி.ஆர். சி வதிவிட பிரதிநிதி இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

red-cross-srilanka.jpgசர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பவுல் கெஸ்டெல்லா இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் நேற்றுக்காலை இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி வரும் சிவிலியன்கள் தொடர்பாகவும் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளதுடன் நிவாரணக் கிராமங்களில் இடம்பெயர்ந்தவர்களை தங்க வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியாவுக்கான இரண்டு உதவி பிரதிநிதிகளுக்கும், வன்னி பாதுகாப்பு படைப்பிரிவின் கட்டளைத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றுக்காலை இடம் பெற்றுள்ளது.

வன்னி பாதுகாப்புப் படைப்பிரிவின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. புலிகளின் பிடியிலிருந்து தப்பி பாதுகாப்புத் தேடிமோதல் தவிர்ப்பு பிரதேசத்தை நோக்கி வரும் சிவிலியன்கள் தொடர்பாகவும், அவர்களுக்குத் தேவையான உணவு விநியோகம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

புலிகள் கடல்வழியாக தரையிறங்குவதைத் தடுப்பதற்கு சாலை கடற்கரையில் படையினரின் ஷெல் தளம்

sri-lanka-navy.jpgமுல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகள் கடல் வழியாகத் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாமென இராணுவ புலனாய்வுத்துறை எச்சரித்ததைத்தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய தளங்களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக “லக்பிம’ ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு; சாலை கடற்கரை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியினர் மீது விடுதலைப்புலிகள் கடல் வழியாகத் தரையிறங்கி தாக்குதல் மேற்கொள்ளலாமென கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறை எச்சரிக்கையினை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஷெல் தளங்களை நிறுவியுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் பரப்பளவு குறைந்து வருவதனால் 57 ஆவது படையணியையும் பின்னிருக்கை படையணியாக பேணுவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த படையணி விசுவமடு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளது. புதுக்குடியிருப்புக்கு தென்பகுதியில் 59 மற்றும் 53 ஆவது டிவிசன்களும், விசேட படையணி04 மற்றும் விசேட படையணி 08 என்பன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏ36 வீதிக்கு வடக்கே 55 மற்றும் 58 ஆவது படையணிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

புதுக்குடியிருப்பு தென்புறம் உள்ள படையினரின் நிலைகளை ஊடறுத்து காடுகளுக்குள் உட்புகுவதே விடுதலைப்புலிகளின் நோக்கம்.அது நிறைவேறினால் இராணுவம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளலாமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வன்னியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் லெப்.கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றாலியன் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  முல்லைத்தீவின் கிழக்கு பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 59 ஆவது படையணி நகர்வை மேற்கொண்டிருந்தது. இப்படையணியினர் மீது விடுதலைப்புலிகள் கடந்த 1 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் போது படையினர் தமது முன்னணிநிலைகளை 3 கிலோ மீற்றர் தொலைவுக்கு பின்நோக்கி நகர்ந்திருந்தனர். படையினரை ஒட்டுசுட்டான் பகுதிவரை பின்தள்ளுவதே விடுதலைப்புலிகளின் நோக்கம்.

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றாலியன் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இச்சமரின் போது மேஜர் கமல் நாணயக்கார உட்பட 33 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. உக்கிரமான சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கோப்ரல் புஷ்பகுமார என்ற சிப்பாய் கிளைமோர் குண்டு ஒன்றுடன் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு மாலைதீவு அரசு உதவி

srilanka_displaced_.jpgகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதற்கு மாலைதீவு அரசாங்கம் முன்வந்துள்ளது.

ஒரு தொகையான படுக்கை விரிப்புகள், கூடாரங்கள், அப்பியாசப் புத்தகங்கள், நுளம்பு வலைகள், சப்பாத்துக்கள் மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள் இதில் அடங்கும். மாலைதீவு அரசாங்கம் இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களிலும் பல்வேறு உதவிகளை வழங்கி வந்துள்ளது.

இந்தப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் அலி ஹுசைன் டீடி இந்தப் பொருட்கள் அடங்கிய ஆவணத்தை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரணை சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் நேற்று வழங்கினார்.

மக்களை பலவந்தமாக படைக்கு சேர்ப்பதில் புலிகள் தீவிரம்; 14 வயதுக்கு

st.jpgபொது மக்களை பலவந்தமாகப் படைக்குச் சேர்ப்பதை புலிகள் இயக்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அதிலும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தற்போது இலக்கு வைக்கப்படுவதாகவும் ‘யுனிசெப்’ நிறுவனம் குற்றஞ் சாட்டியுள்ளது.

இதனால் மோதல்களில் சிறுவர்கள் கொல்லப்படுவதும், காயமுறுவதும் அதிகரித்துள்ளதாகவும் ‘யுனிசெப்’ நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுஹமலே கவலை தெரிவித்துள்ளார்.  சிறுவர்கள் நேடியான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் பாரிய உயிராபத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் ‘யுனிசெப்’ விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறுவர்களைப் பலவந்தமாகப் படைக்குச் சேர்ப்பது சகித்துக்கொள்ள முடியாதது என்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

“2003 ஆம் ஆண்டிலிருந்து 2008 இறுதிவரை ஆறாயிரம் சிறுவர்களை புலிகள் படைக்குச் சேர்த்திருந்தனர். சிறுவர் போராளிகள் உடல் ரீதியான இம்சைகளுக்கு உள்ளாவதுடன், அதிர்ச்சியடையும் வேளைகளில் மரணத்தைத் தழுவுகின்றனர். அவர்களின் பிள்ளைப் பராயத்தில் நம்பிக்கைக்குப் பதிலாக அச்சமே குடிகொண்டிருக்கிறது” என்று யுனிசெப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் காயமடைந்து வருவதாக எச்சரித்துள்ள யுனிசெப் நிறுவனம், இவ்வாறு காயமுற்ற சிறுவர்கள் கடந்தவாரம் அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

“இந்தப் பிரச்சினையில் சிறுவர்களே கொல்லப்பட்டும், காயமுற்றும், படைக்குச் சேர்க்கப்பட்டும், இடம்பெயர்ந்தும், தனிமைப்படுத்தப்பட்டும் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். மோதல்கள் காரணமாக அவர்களின் நாளாந்த தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ள யுனிசெப் பிரதிநிதி மோதல்களிலிருந்து பொதுமக்களுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும் என்று புலிகள் இயக்கத்தையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தியுள்ளது.

“மோதல் பிரதேசத்திலிருந்து வெளியேறிவந்துள்ள 30 ஆயிரம் மக்களுக்கு யுனிசெப் நிறுவனமும் ஏனைய ஐ.நா. அமைப்புகளும் இணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

எனவே இவ்வாறு துரிதமாக உதவி பெறக்கூடிய பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அனைத்துப் பொதுமக்களும் வர வேண்டியது மிக முக்கியமானது” என்றும் யுனிசெப் மேலும் தெரிவித்துள்ளது.