பிலிப் பைன்ஸில் கடத்தப் பட்டிருக்கும் இலங்கைப் பிரஜையைப் பாதுகாப்பாக விடுவிடுப்பதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம், பிலிப்பைன்ஸ் அரசைக் கேட்டுள்ளது. வெளி விவகார அமைச்சு இது தொடர்பாக பிலிப் பைன்ஸ் வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதேவேளை பிலிப்பைன்ஸிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும்; மணிலாவில் இயங்கும் வன்முறையற்ற அமைதிக்கான செயலணியினருடன்; பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மூதூரைச் சேர்ந்த ஒமர் ஜமில் என்பவர் வன்முறைகளற்ற அமைதி செயலணியில் தென் பிலிப்பைன்ஸில் பணியாற்றி வந்த வேளையில் கடந்த வெள்ளியன்று தென் பிலிப்பைன்ஸின் பாசிலான் தீவின் லமிற்றன் நகரில் தங்கியிருந்த சமயம் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்.
இவரைப் பாதுகாப்பாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சு பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சைக் கேடடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.