சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

டெஸ்ட் போட்டிக்கு ஆபத்து – கங்குலி

ganguly.jpgஇலங்கை- இந்தியா முதல் டெஸ்ட் போட்டி முடிவு குறித்து முன்னாள் கேப்டன் கங்குலி கூறியிருப்பதாவது:- ஆமதாபாத் மைதானத்தில் ஆட்டத்தின் போக்கை கவனித்தால் இந்த மைதானத்தில் ஆடுகளம் சரி இல்லாமல் இருந்ததை காட்டுகிறது.

டெஸ்ட் போட்டிக்கு தகுந்த மாதிரி ஆடுகளம் அமைக்கப்படவில்லை. இதனால் தான் இப்படி போட்டியின் போக்கு மாறியது.  பொதுவாக இந்திய மைதானங்களில் சிவப்பு மண் இருக்கும். இதில் அமைக்கும் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக எகிறி சுழலும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும்.

ஆனால் ஆமதாபாத் மைதானம் சுழற்பந்துக்கு ஏற்றார்போல இல்லை. எனவே பேட்டிங்கை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டியின் நிலைமை வேறு மாதிரி அமைந்து விட்டது.

போட்டியின் முடிவு தெரிந்தால்தான் அது ரசிகர்களை ஈர்க்கும். 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி மவுசு அதிகரித்து வரும் இந்த வேளையில் இது போன்று டெஸ்ட் போட்டி முடிவுகள் இருந்தால் டெஸ்ட் போட்டிக்கே ஆபத்தாகி விடும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா, இலங்கை முதல் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவு

20112009.jpgஇலங் கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெரும் இக்கட்டான நிலையில் தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா கடுமையாகப் போராடி வெற்றி தோல்வியின்றி  முடித்து விட்டது.

இன்று சச்சின் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் 30,000 ஓட்டங்களைக் கடந்து அவர் புதிய சாதனை படைத்தார். தனது 20வது வருட கிரிக்கெட் வாழ்க்கையை புதிய சாதனையுடன் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இன்று சச்சின் பெற்றது 43வது டெஸ்ட் சதமாகும்.

இப்போட்டியில் முக்கிய நிகழ்வுகளாவன.

– மொத்தம் 6 பேர் சதம் அடித்தனர். டிராவிட் (177), டோணி (110), தில்ஷான் (112), பிரசன்னா ஜெயவர்த்தனே (154), கெளதம் கம்பீர் (114), சச்சின் (100).

– மஹேல ஜெயவர்த்தனா இரட்டை சதம் எடுத்தார்.

– சச்சின் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் 30 ஆயிரம்  ஓட்டங்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார்.

– 72 ஆண்டு காலமாக இருந்து வந்த 6வது விக்கெட் இணைப்பட்ட சாதனையை ஜெயவர்த்தனாவும், பிரசன்னா ஜெயவர்த்தனாவும் முறியடித்தனர்.

– மஹேல ஜெயவர்த்தனா டெஸ்ட் போட்டிகளில் 9000 ஓட்டங்களைக் கடந்தார்.

India 426 & 412/4 (129.0 ov)
Sri Lanka 760/7d
India 2nd innings 

G Gambhir  c Prasad b Herath  114 
V Sehwag  c Mathews b Herath  51
R Dravid  lbw b Welegedara  38
A Mishra  c Dilshan b Mathews  24 
SR Tendulkar  not out  100  
 VVS Laxman  not out  51  
 Extras (b 12, lb 9, w 2, nb 11) 34     
      
Total (4 wickets; 129 overs) 412 (3.19 runs per over)
Did not bat Yuvraj Singh, MS Dhoni*†, Harbhajan Singh, Z Khan, I Sharma 
Fall of wickets1-81 (Sehwag, 16.6 ov), 2-169 (Dravid, 40.1 ov), 3-209 (Mishra, 55.6 ov), 4-275 (Gambhir, 79.6 ov) 
        
 Bowling
 UWMBCA Welegedara 21 1 76 1
 KTGD Prasad 13 0 56 0  
 HMRKB Herath 40 6 97 2
M Muralitharan 38 6 124 0  
AD Mathews 15 6 29 1
 TM Dilshan 1 0 2 0 
 NT Paranavitana 1 0 7 0

Match details
Toss India, who chose to bat
Series 3-match series level 0-0
Player of the match DPMD Jayawardene (Sri Lanka)
 Umpires DJ Harper (Australia) and AL Hill (New Zealand)
TV umpire AM Saheba
Match referee JJ Crowe (New Zealand)
Reserve umpire SD Ranade

மஹேல – பிரசன்ன உலக சாதனை;

mahela_prasanna.jpgஅகமதா பாத் டெஸ்டில் இலங்கை அணியின் 6வது விக்கெட்டான மஹேல – பிரசன்னா ஜயவர்தன ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. இந்த ஜோடி 351 ஓட்டம் குவித்தது. இதன் மூலம் 72 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது. இதற்கு முன்பு 1937ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பிங்கின்டன் – பிராட்மேன் ஜோடி 346 ஓட்டம் குவித்ததே சாதனையாக இருந்தது.

mahela-jayawardene.jpgமஹேல 275 ஓட்டங்களை குவித்து இந்தியாவுக்கு எதிராக சாதனை புரிந்தார். இதற்கு முன்பு 1999ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக 242 ஓட்டம் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 2வது அதிகபட்ச எண்ணிக்கை எடுத்தது. 1997ம் ஆண்டு அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 952 ஓட்டம் குவித்து இருந்தது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட துடுப் பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 ஆயிரம் ஓட்டங்களைத் தாண்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை தட்டிக் கொண்டார்.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்திய அணி சார்பாக காம்பீர் ஆட்ட மிழக்காமல் 74 ஓட்டங்களுடனும் மிஸ்ரா ஆட்ட மிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடினர்.

இதேவேளை ஷெவாக் 51 ஓட்டங்களுடன் டிராவிட் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து சென்றனர். பந்து வீச்சில் வெலகெதர, ஹேரத் தலா ஒரு விக்கெட்டை யும் வீழ்த்தினர். இன்று 5வது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை அணி முன்னிலையில் – மஹேல இரட்டை சதம்

mahela-jayawardene.jpgஇலங்கை – இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 591 ஓட்டங்களைப் பெற்று மூன்றாவது நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

ஸ்கோர் விபரம் வருமாறு

Sri Lanka in India Test series – 1st Test
India 426
Sri Lanka 591/5 (160.0 ov)
Stumps – Day 3

Sri Lanka 1st innings R M B 4s 6s SR
TM Dilshan  c Dravid b Khan  112 
 NT Paranavitana  c †Dhoni b Sharma  35 
 KC Sangakkara*  c Tendulkar b Khan  31 
 DPMD Jayawardene  not out  204 
 TT Samaraweera  c Yuvraj Singh b Sharma  70 
 AD Mathews  c Gambhir b Harbhajan Singh  17 
 HAPW Jayawardene†  not out  84  
 Extras (b 5, lb 13, w 3, nb 17) 38     
      
Total (5 wickets; 160 overs) 591 (3.69 runs per over)
To bat KTGD Prasad, HMRKB Herath, M Muralitharan, UWMBCA Welegedara 
Fall of wickets1-74 (Paranavitana, 16.5 ov), 2-189 (Dilshan, 43.1 ov), 3-194 (Sangakkara, 45.3 ov), 4-332 (Samaraweera, 86.4 ov), 5-375 (Mathews, 96.2 ov) 
        
 Bowling
 Z Khan 30 4 93 2 
 I Sharma 28 0 108 2
Harbhajan Singh 39 3 151 1
 A Mishra 43 6 152 0 3. 
 Yuvraj Singh 13 1 49 0 
 SR Tendulkar 7 0 20 0

இலங்கை – இந்திய முதல் டெஸ்ட் இன்று ஆரம்பம்

sachin.jpgஇலங்கை – இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆமதாபாத்தில் துவங்குகிறது. இதில் சச்சின் 39 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் ஒரு நாள் டெஸ்ட் “டுவென்டி-20” போட்டிகளில் சேர்த்து 30 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சாதிக்கலாம்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று துவங்குகிறது.

முதல் டெஸ்டில் பங்கேற்க இந்தியா, இலங்கை வீரர்கள் நேற்று முன்தினம் ஆமதாபாத் வந்தனர். இவர்களுக்கு ஆமதாபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துடுப்பாட்ட வீரர் இந்திய சச்சின், கிரிக்கெட் அரங்கில் தனது 20 வது ஆண்டை பூர்த்தி செய்துள்ளார். இதுவரை இவர் 159 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 12,773 ஓட்டங்கள் எடுத்துள்ளார். தவிர, ஒரு நாள் அரங்கில் 436 போட்டிகளில் விளையாடி 17,178 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இருபதுக்கு-20 போட்டியில் இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். இதில் 10 ஓட்டங்கள் எடுத்த சச்சின் இருபதுக்கு-20 போட்டிகளை புறக்கணித்து வருகிறார்.

இன்று இலங்கை அணிக்கு எதிராக ஆமதாபாத்தில் நடக்கும் முதல் டெஸ்டில் சச்சின் 39 ஓட்டங்கள் எடுக்கும் பட்சத்தில் கிரிக்கெட் அரங்கில் 30 ஆயிரம் ஓட்டங்களை (12,773+17,178+10=29961+39=30,000) பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

கல்குடாவில் அரிய ‘காட்டு அணுங்கு’ விலங்கினம்

111109batti.jpgகல்குடா பொலிஸ் பிரிவின், பாசிக்குடா பகுதியில், அநாதரவான நிலையில், இலங்கையில் அருகிவரும் காட்டு அணுங்கு (எறும்பு தின்னி) விலங்கு ஒன்றை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கல்குடா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வன ஜீவராசிகள் மட்டக்களப்பு சுற்றுவட்டார பாதுகாப்பு அதிகாரி என்.சுரேஷ்குமார் தலைமையில் இந்தக் காட்டு அணுங்கு விலங்கைக் கண்டுபிடித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறமான பெரியபுல்லு மலைக்காட்டுப் பகுதிக்கு, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் கொண்டு செல்லப்பட்ட இவ்விலங்கு, அங்கு சுதந்திரமாக விடப்பட்டதாக மட்டு.மாவட்ட அரச ஊடக அதிகாரி தெரிவித்தார்.

111109batti.jpg

சச்சின்; புதிய உலக சாதனை – ஒருநாள் போட்டிகளில் 17 ஆயிரம் ஓட்டங்கள்

06-sachin.jpgஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 17 ஆயிரம் ஓட்டங்களை எடுத்து சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஹைதராபாதில் நேற்று நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது ஆட்டத்தின்போது 7 ஓட்டங்கள்  எடுத்திருந்தபோது இந்த சாதனை மைல்கல்லை சச்சின் எட்டினார். மேலும் இதே ஆட்டத்தில் அவர் அபாரமாக ஆடி சதமும் அடித்தார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் 14 ஆயிரம் ஓட்டங்களைக் கூட கடக்காத நிலையில் சச்சின் 17 ஆயிரம் ஓட்டங்களைக் குவித்து உலக சாதனையைப் புரிந்துள்ளார். 36 வயதான சச்சின் இதுவரை 435 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்த ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார். இதில் 45 சதம், 91 அரை சதம் அடங்கும்.

அதிரடி ஆடுகளங்கள் தேவையென்கிறது ஐ.சி.சி

icc-logo.jpgஒருநாள் மற்றும் “டுவென்டி -20” போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கப்படும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த சம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20” தொடர்களில் பெரும்பாலான போட்டிகளில் குறைவான ரன்களே எடுக்கப்பட்டன. போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆடுகளத்தில் மாற்றம் செய்ய ஐ.சி.சி. முன்வந்துள்ளது. இதையடுத்து ஐ.சி.சி, அதன் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி) சீனியர் அதிகாரி வாசிம் பாரி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது:-

ஒருநாள் “டுவென்டி-20” போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக அதிக ரன்கள் எடுக்கப்படும் வகையில் ஆடுகளத்தை தயார் செய்யவேண்டும் என ஐ.சி.சி, எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. நாங்கள் அவர்கள் ஆலோசனைப்படி நடப்போம் இதற்கு முன்பாகவே உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் துடுப்பாட்டத்திற்கு உதவும் வகையிலான ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம் என்றார்.

பம்பலப்பிட்டி கடலில் இளைஞன் அடித்துக் கொலை – பொலிஸ் விசாரணைக்கு உத்தரவு

பம்பலப்பிட்டி கடலில் நேற்று மாலை இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார். குறித்த இளைஞனை பொல்லினால் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து தடுப்புக் காவலில் வைக்குமாறுதான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெத்திவக்க கூறினார்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராகவிருப்பினும் கைது செய்யப்படும் அதேவேளை, பொலிஸாராயிருந்தாலும் பக்கச்சார்பின்றி உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். பம்பலப்பிட்டி கரையோரத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-

கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள் மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதியாக ரயில் ஒன்றின் மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்த போது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர். அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது.

அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் தாழ்ந்து செல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்தார். உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் நேற்று இரவுவரை மீட்கப்படவில்லை. மீட்புப் பணி கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்த மேலும் 5 நவீன இயந்திரங்கள்

மக்களை துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கு ஏதுவாக மிதிவெடிகள், நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் மிதிவெடிகள் அகற்றும் மேலும் ஐந்து நவீனரக இயந்திரங்கள் இன்று இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படுகின்றன.

250 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி 5 இயந்திரங்களும் ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து தருவிக்கப்படுவதாக தேசநிர்மாண அமைச்சு அறிவிக்கிறது. இன்று காலை 7.30 க்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மேற்படி 5 இயந்திரங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும்.

மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேச நிர்மாண அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, தேசநிர்மாண அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே. கே. குமாரசிறி ஆகியோர் இன்று விமான நிலையத்தில் மேற்படி இயந்திரங்களை பொறுப்பேற் கவுள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்களை உடனடியாக குடியமர்த்துவதற்கு ஏதுவாக மேற்படி மிதிவெடிகள் அகற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதேபோன்று ஏற்கனவே 10 இயந்திரங்களும் தருவிக்கப்பட்டுள்ளன. அவை வவுனியா வடக்கு, மன்னார் பகுதிகளில் மிதிவெடி, கண்ணிவெடிகள் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன