சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இலங்கையை இன்னிங்ஸ்-144 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

india.jpgகான்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கையை ஒரு இன்னிங்ஸ், 144 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி அடையச் செய்தது.

கான்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 642 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து இலங்கையின் ஆட்டம் தொடங்கியது – தடுமாற்றத்துடன். ஸ்ரீசாந்த்தின் அபாரப் பந்து வீச்சால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸை 229 ஓட்டங்களுக்கு இழந்தது. இதையடுத்து பாலோ ஆன் வாங்கி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இலங்கை. இந்த முறை ஹர்பஜன் சிங்கும், ஓஜாவும் பந்து வீச்சில் இலங்கையை கட்டுப்படுத்தினர்.

சமரவீராவைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்து வெளியேறினர். சமரவீர கடுமையாகப் போராடி 78 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 269 ஓட்டங்களில் வீழ்ந்து இலங்கை. ஒரு இன்னிங்ஸ் 144 ஓட்டவித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது முதல் இன்னிங்ஸில் இலங்கையை நிலை குலைய வைத்த ஸ்ரீசாந்த் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

 India 642
Sri Lanka 229 & 269 (65.3 ov)
India won by an innings and 144 runs

Sri Lanka 2nd innings (following on)
 NT Paranavitana  lbw b Sehwag  20 
 TM Dilshan  c †Dhoni b Sreesanth  11
 KC Sangakkara*  b Harbhajan Singh  11
 DPMD Jayawardene  run out (Yuvraj Singh/†Dhoni)  10 
 TT Samaraweera  not out  78 
 AD Mathews  c Dravid b Khan  15
 HAPW Jayawardene†  b Harbhajan Singh  29 
 HMRKB Herath  lbw b Harbhajan Singh  13 
 M Muralitharan  b Ojha  29 
 BAW Mendis  lbw b Yuvraj Singh  27 
 UWMBCA Welegedara  c & b Ojha  4 
 Extras (b 7, lb 1, nb 14) 22     
      
 Total (all out; 65.3 overs; 294 mins) 269 (4.10 runs per over)
Fall of wickets1-13 (Dilshan, 3.3 ov), 2-37 (Paranavitana, 10.5 ov), 3-54 (DPMD Jayawardene, 18.3 ov), 4-54 (Sangakkara, 19.1 ov), 5-79 (Mathews, 24.4 ov), 6-140 (HAPW Jayawardene, 37.5 ov), 7-154 (Herath, 41.2 ov), 8-191 (Muralitharan, 44.5 ov), 9-264 (Mendis, 64.2 ov), 10-269 (Welegedara, 65.3 ov) 
        
 Bowling O M R W Econ  
 Z Khan 11 0 63 1
 S Sreesanth 11 4 47 1
 Harbhajan Singh 22 2 98 3
 V Sehwag 3 0 4 1
 PP Ojha 15.3 4 36
 SR Tendulkar 1 0 6 0  
 Yuvraj Singh 2 0 7 1

 

நபியவர்களின் பெயரில் பத்திரிகையில் படம் வெளியானமைக்கு ஜனாதிபதி ஆழ்ந்த கவலை! – பிரியதர்ஷன யாப்பா தகவல்

anura.jpgஇலங் கையின் தமிழ் தேசிய நாளிதல் ஒன்றில் கடந்த செவ்வாயன்று வெளியான முகம்மது நபி (ஸல்) அவர்களுடையதென பிரசுரிக்கப்பட்ட படம் ஒன்று தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிர்ச்சியடைந்ததாகவும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது முஸ்லிம்களின் கலாசாரத்தில் உருவப்படத்துக்கு முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை. அதிலும் முகம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை எங்கும் காணமுடியாது.

இந்த உருவப்படம் வெளியான தகவல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினாலும் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள,  பிரமுகர்களினாலும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்துகு கொண்டுவரப்பட்டபோதே ஜனாதிபதி இது தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்

அந்தப் பத்திரிகை நிறுவத்தின் தவறு காரணமாக இச்செயல் இடமபெற்றிருந்தாலும் அதனால் பாதகமான வேறு விளைவுகள் ஏற்படக்கூடாதென்ற காரணத்தினாலேயே ஜனாதிபதி உடனடி நடவடிக்கைகு உத்தரவிடடுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.

குர்பானி விவகாரம்: அசெளகரியம் ஏற்படுத்த வேண்டாமென ஜனாதிபதி பணிப்பு

macca.jpgஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு குர்பானுக்காக வேண்டி கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாத்தளை மாநகர முதல்வர், ஹில்மி கரீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே இப்பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இது விடயத்தில் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு பொலிஸ் மாஅதிபர் பொலிஸாரைப் பணித்துள்ளார்.

இந்திய அணி 642 ஓட்டங்கள்

greenpark.jpgஇந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை- இந்திய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸிற்காக விளையாடிய இலங்கை அணி ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் குமார் சங்கக்கார 30 ஓட்டங்களையும், பரணவிதான 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறும்.

இந்திய அணியின் பெற்ற ஓட்ட விபரம் வருமாறு:-

India 1st innings
 G Gambhir  c & b Muralitharan  167 
 V Sehwag  c Dilshan b Muralitharan  131 
 R Dravid  run out (Herath)  144  
 SR Tendulkar  c Samaraweera b Mendis  40 
 VVS Laxman  c Dilshan b Herath  63  
 Yuvraj Singh  c Sangakkara b Mendis  67 
 MS Dhoni*†  b Herath  4  
 Harbhajan Singh  b Herath  5  
 Z Khan  c DPMD Jayawardene b Herath  1 
 S Sreesanth  lbw b Herath  0  
 PP Ojha  not out  1  
 Extras (b 4, lb 11, nb 4) 19     
      
 Total (all out; 154 overs) 642 (4.16 runs per over)
Fall of wickets1-233 (Sehwag, 41.2 ov), 2-370 (Gambhir, 75.1 ov), 3-464 (Tendulkar, 102.5 ov), 4-511 (Dravid, 113.2 ov), 5-613 (Laxman, 141.1 ov), 6-619 (Dhoni, 145.2 ov), 7-639 (Harbhajan Singh, 149.4 ov), 8-641 (Yuvraj Singh, 152.2 ov), 9-641 (Khan, 153.3 ov), 10-642 (Sreesanth, 153.6 ov) 
        
 Bowling O M R W  
 UWMBCA Welegedara 26 4 103 0 
 AD Mathews 17 2 49 0  
 HMRKB Herath 33 2 121 5
BAW Mendis 38 3 162 2 
M Muralitharan 37 0 175 2
TM Dilshan 3 0 17 0        

 Sri Lanka 1st innings
 TM Dilshan  c Ojha b Khan  0 
 NT Paranavitana  not out  30  
 KC Sangakkara*  not out  30  
 Extras (b 4, lb 1, nb 1) 6     
      
Total (1 wicket; 24 overs) 66 (2.75 runs per over)
To bat DPMD Jayawardene, TT Samaraweera, AD Mathews, HAPW Jayawardene†, BAW Mendis, HMRKB Herath, M Muralitharan, UWMBCA Welegedara 
Fall of wickets1-0 (Dilshan, 0.1 ov) 
        
 Bowling O M R W
 Z Khan 7 3 14 1
 S Sreesanth 6 0 29 0 
 Harbhajan Singh 7 3 9 0 
 PP Ojha 4 2 9 0

ஹஜ்ஜுப் பெருநாள் 28 ஆம் திகதி

macca.jpgபுனித ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் 28ம் திகதி சனிக் கிழமை கொண்டாடப்படும் என அகில இலங்கை ஜய்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய, கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை ஏகமனதாக எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கமைய ஹஜ்ஜுப் பெருநாள் 28ம் திகதி கொண்டாடப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

சவூதிஅரேபியாவில் பன்றிக்காய்ச்சல் நான்கு பேர் மரணம்; நான்கு பேர் வைத்தியசாலையில்

macca.jpgசவூதி அரேபியாவில் புனித ஹஜ்ஜுக்குச் சென்றோரில் நான்கு பேர் இன்புளுவென் சியா நோயினால் மரணமடைந்துள்ளனர். சுமார் 25 இலட்சம் மக்கள் இம்முறை ஹஜ் கடமைக்காக மக்கா, மதீனா நகரங்களில் கூடுகின்றனர்.

இவர்களில் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாகவும் மொரோக்கோ, சூடான், இந்தியா, நைஜீரியாவைச் சேர்ந்தவர்களென்று சவூதிஅரேபிய சுகாதார அமைச்சு அறிவி த்துள்ளது. 17 வயதுச் சிறுமியும் 75 வயது மிக்க முதியோருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

புனித ஹஜ்ஜுக்காக சவூதிஅரேபியா வருவோர் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவதுண்டு. இவ்வாறு சான்றிதழ்களைப் பெற்று வந்தோரில் இருபது பேருக்கு இன்புளு வென்சியா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இவர்களில் 12 பேர் தடுப்பூசி ஏற்றப்பட்டனர். நான்கு பேர் வைத்தியசாலைகளில் அனு மதிக்கப்ப ட்டுள்ளனர்.

நான்கு பேர் உயிரிழந்தனர்.சவூதிஅரேபியாவில் இம் முறை 25 இலட்சம் மக்கள் ஹஜ்ஜுக்காக வரவுள்ளதால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விசேடமாக மருத்துவ ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவ நிலையங்களும் சேவையிலுள்ளன. மதவைபவங்களுக்காகப் இலட்சக்கணக்கானோர் கூடும் இடமாக சவூதிஅரேபியா உள்ளது.

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 2 வது போட்டி இன்று ஆரம்பம்

greenpark.jpgசங்கக்கார தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

இந்திய – இலங்கை அணிகள் மோதும் 2 வது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று (24 ஆம் திகதி) தொடங்குகிறது. அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் கப்டன் டோனிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. லேசான காயம்தான் பயப்படும்படி எதுவும் இல்லை.

முன் எச்சரிக்கை காரணமாக தினேஷ் கார்த்திக் அவசரமாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் டெஸ்ட் அணியில் இடம்பெற்று இருந்தார். 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு இல்லாததால் ரஞ்சி போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் தற்போது இந்திய வீரர்களோடு இணைந்து கொண்டார். டோனி உடல் தகுதி பெற்று விடுவார். அவர் ஆடாத பட்சத்தில் தான் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அகமதாபாத் ஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால் பந்து வீச்சாளர்கள் சிக்கி திணறி விட்டார்கள். அகமதாபாத் டெஸ்டில் 7 வீரர்கள் சதம் அடித்தனர்.இந்திய அணியில் டிராவிட், டோனி, காம்பீர், டெண்டுல்கர் ஆகியோரும் இலங்கை அணியில் டில்சான், ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகியோரும் சதம் அடித்தனர்.

அது மாதிரியான ஆடுகளம் இல்லாமல் முடிவு தெரியும் வகையில் “பிட்ச்” இருக்க வேண்டும் என்று இரு அணி கப்டன்களும் தெரிவித்துள்ளனர். மைதானம் முதல் 3 தினங்கள் துடுப் பாட்ட வீரர்களுக்கும் கடைசி இரண்டு தினங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. கடைசியாக கான்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த டெஸ்டில் இந்தியா 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் பிரதமரின் மனைவி மீது குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் கிலானியின் மனைவி பவுசியா வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் இழுத்தடித்தார் என்றும் இது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்துகொண்டனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

பவுசியா, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கியில் இருந்து 20 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் பணத்தை ஒழுங்காக செலுத்தாததால் அந்த கடன் 57 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. அதன்பிறகு வட்டியில் சலுகை காட்டினால் பணத்தை திருப்பி செலுத்துவதாக அவர் வங்கிக்கு விண்ணப்பித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அவர் 4 கோடியே 55 லட்சம் ரூபாய் மட்டுமே கட்டினால்போதும் என்று அதிகாரிகள் சலுகை காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த குற்றச்சாட்டை பிரதமர் கிலானி மறுத்து இருக்கிறார்.

துடுப்பாட்டத்தில் மஹேல முதலிடம் பிடித்தார்

mahela-jayawardene.jpgசர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கையின் மஹேல ஜெயவர்த்தன முதலிடம் பிடித்துள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இரட்டைச் சதம் மூலம், மஹேல ஜெயவர்தன, முதன் முறையாக “நம்பர் 1” இடத்தைப் பெற்றுள்ளார். இலங்கை அணிக்கப்டன் சங்ககாரா, இந்தியாவின் காம்பிர் அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

இதில் இந்தியாவின் சச்சின், இலங்கைக்கு எதிரான சதத்தினால் ஒரு இடம் முன்னேறி, 15 ஆவது இடத்தை இங்கிலாந்து வீரர் பீற்றர்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஐந்த இடங்கள் முன்னேறிய ட்ராவிட் 25 ஆவது இடத்திலும், சேவாக் 21 ஆவது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சுத் தரவரிசையில் தென்னாபிரிக்காவின் ஸ்டைன், இலங்கையின் முரளிதரன், அவுஸ்திரேலியாவின் மைக்கேல் ஜோன்சன் முதல் 3 இடங்களை பெற்றுள்ளனர். இந்தியாவின் ஹர்பஜன்சிங், ஒரு இடம் பின்தங்கி 6 ஆவது இடத்திலும், சகிர்கான் 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மைதான வாடகை ரூ. 50 லட்சம்

greenpark.jpgஇந்தியா, இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானத்துக்கு வாடகையாக 50 லட்ச ரூபாய் கொடுக்கப்பட உள்ளது.

உத்திரபிரதேச (உ.பி.,) கிரிக்கெட் சங்கத்துக்கு என சொந்தமாக கிரிக்கெட் மைதானம் இல்லை. இந்நிலையில் இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் வரும் நவ., 24 முதல் 28 வரை நடக்க உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த ஆண்டு இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய ஒருநாள் போட்டிக்கு வாடகையாக ஒரு கோடி ரூபாய், உ.பி., கிரிக்கெட் சங்கம் மாநில அரசுக்கு கொடுத்து இருந்தது.

இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கு கொடுக்கப்பட உள்ள வாடகை குறித்து உ.பி., கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனர் ஜோதி பாஜ்பாய் கூறுகையில்,” கடந்த ஆண்டு இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிக்கு 13 லட்ச ரூபாய் தான் வாடகை கொடுத்து இருந்தோம். ஆனால் இம்முறை 50 லட்ச ரூபாய் வாடகை தரும் படி மாநில அரசு, எங்களை கேட்டுக்கொண்டுள்ளது. போட்டியை சிறப்பாக நடத்த, வேறு வழியின்றி அதை நாங்கள் கொடுக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.