ranil wickremesinghe

ranil wickremesinghe

அல்ஜசீராவின் நேர்காணலில் மகிந்த ராஜபக்சவை போட்டுக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

அல்ஜசீராவின் நேர்காணலில் மகிந்த ராஜபக்சவை போட்டுக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

 

இறுதிப்போரில் அகப்பட்டிருந்த தமிழ்மக்களுக்கு சர்வதேசத்தின் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடுத்ததாக சர்வதேச ஊடகமான அல்ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். மேலும் யுத்தத்தில் மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க என அல்ஜசீராவிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டில் முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்பட்டுவிட்டதா ?என அல்ஜசீரா பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க,

எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதிவழங்கப்படவில்லை என கூறியுள்ளார். அதேசமயம் யுத்தத்தின் இறுதி நேரத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் எவையும் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவில்லை என வாக்காலத்து வாங்கினார். விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன. அப்போதெல்லாம் இந்த தவறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இது பெருமளவில் இடம்பெற்றதா? என்றால் நான் அப்படி சொல்ல மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மேலும் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மெஹ்டி ஹசன், ஐக்கியநாடுகளின் குழு, இலங்கை படையினர் யுத்தத்தில் சிக்குண்டவர்களிற்கான மனிதாபிமான உதவிகளை தடுத்தனர் என குறிப்பிட்டுள்ளனரே என கேள்வி எழுப்பியிருந்தார்.

நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன் என ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தார். மேலும் பந்தலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கேள்விகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க குறித்த பேட்டியில் நிராகரித்துள்ளார்.

1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல், சித்திரவதைகள் மற்றும் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார்.

இதேவேளை இறுதி யுத்தத்தின் போது ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அல்ஜசீரா நேர்காணல் நேற்று ஒளிபரப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே ஊடகங்களிடம் பேசிய ரணில், தொகுப்பாளர் மெஹ்தி ஹசனுடன் இணைந்த மூன்று குழு உறுப்பினர்களில் இருவர் புலிகளுக்கு ஆதரவான தொடர்புகளைக் கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் அல்ஜசீரா என்னை இரண்டு மணி நேரம் பேட்டி எடுத்திருந்தது. ஆனால் ஒரு மணி நேர பகுதியை மட்டுமே வெளியிட்டது. அதில் பெரும்பாலானவற்றை எடிட் செய்துள்ளதும் என்று ரணில் விக்கிரமசிங்க அல்ஜசீராவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடிக்கினார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் மாத்திரமே மக்கள் மூன்று வேளைகள் உண்ண முடியும் – கொழும்பில் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற யாரும் உண்மையான ஐக்கிய தேசிய கட்சியினராக இருக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (30.07.2020) இடம்பெற்ற மக்கள சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் மாத்திரமே மக்கள் மூன்று வேளைகள் உண்ண முடியும் எனவும் அதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் மாத்திரமே நாட்டை காப்பற்ற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.