GovPay – கடைக்கோடி கிராமங்கள் வரை ஜனாதிபதி நிதியத்துடன் இணைக்கப்பட வேண்டும் !
டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay), ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள, அதேவேளை எதிர்காலத்தில் சகல அரச நிறுவனங்களையும் இதனுடன் இணைக்க எதிர்பார்க்கப்படுவதோடு ஏற்கெனவே 12 அரச மற்றும் தனியார் வங்கிகள் இதில் இணைந்துள்ளன.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் இதுவரை காலமும் கொழும்பில் இருந்தே செயற்படுகின்றன. அதனால் தூர பிரதேசங்களில் உள்ள பிரஜைகள் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதே நமது நோக்கம். டிஜிட்டல் மயமாக்கல் மூலமாக நகரமும் கிராமமும் ஒன்றிணைந்துள்ளதால், கிராமிய வறுமையை ஒழிப்பதற்கும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வடமாகாண புத்திஜீவிகள் அமைப்பின் இணைப்பாளாளர் அருள்கோகிலன் 21ம் நூற்றாண்டில் இலங்கை டிஜிற்றல் யுகத்தில் எவ்வாறு கால் பதிக்ககும் என்பதை விளக்குவதுடன் ஜனாதிபதி அனுரா அந்த அமைச்சை தன்பொறுப்பில் எடுத்துக் கொண்டதன் மூலம் அதன் முக்கியத்தவத்தை கோடிட்டுக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இத்திட்டம் வெற்றியடைய வேண்டும் என்றும், டிஜிட்டல் அடையாள அட்டை இதன் முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினார் ஜனாதிபதி அனுர