AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை !
மெக்சிக்கோவில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோ நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையமொன்றில், ஏ.ஐ மற்றும் ரோபோ உதவியுடன் விந்தணுவை கருமுட்டையினுள் ஊசியின் மூலம் செலுத்தி வெற்றிகரமாக கருவுறச்செய்து அதனை 40 வயதான பெண்மணியின் கருப்பையினுள் பொருத்தி, குழந்தையை வளரச் செய்து கடந்த மார்ச் மாதம் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இந்தநிலையில், இந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தால் கருத்தரிக்க இயலாத தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மிக மிக அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சிகிச்சை முறை தொடர்பில் வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில், ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு முட்டையையும் கருத்தரிக்க ஒன்பது நிமிடங்கள் 56 வினாடிகள் ஆனது. ஏ.ஐ உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளமையானது மருத்துவ உலகில் பெரும் திரும்புமுனையாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
