2-ம் எலிசபெத்

2-ம் எலிசபெத்

2-ம் எலிசபெத் ராணியின் மரணத்தை மதுபாட்டிலுடன் கொண்டாடிய பெண் மீது தாக்குதல் !

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19-ம் திகதி நடைபெற உள்ளது. இதற்காக அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.

2-ம் எலிசபெத்தின் மரணத்தையடுத்து உலகின் பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேவேளை, இங்கிலாந்தில் 10 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள் 2-ம் எலிசபெத்தின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகிறனர். இதனிடையே, இங்கிலாந்திற்கு அருகே உள்ள நாடு ஸ்காட்லாந்து. அந்நாட்டின், ஈஸ்டர் ரோஸ் பகுதியில் மீர் ஆப் ஆர்ட் என்ற பகுதி உள்ளது. இங்கு ஜகி பிக்கெட் என்ற பெண் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், 2-ம் எலிசபெத் உயிரிழந்ததை ஜகி பிக்கெட் கொண்டாடினார். தனது கையில் ஒரு மதுபாட்டிலுடன் எலிசபெத் உயிரிழந்ததை ஜகி பிக்கெட் கொண்டாடினார். கொண்டாட்ட வீடியோவை ஜகி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. மேலும், ஜகிக்கு கண்டனமும் வலுத்தது. இதையடுத்து, பாதுகாப்பு நலன் கருத்தி ஓட்டலை மூடும்படி ஜகியிடம் போலீசார் அறிவுறுத்தினர். ஓட்டல் மூடப்பட்ட பின் போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஜகி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, ஜகியின் கார் மீது சிலர் கற்கலை வீசியும், ஜகிக்கி எதிராக கோஷங்களையும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஜகி பிக்கெட்டின் ஓட்டல் பகுதிக்கு சென்ற சிலர் ஓட்டல் கண்ணாடியை கற்களை வீசி உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.