வர்த்தகப் போரின் உச்சகட்டமாக உலக நாடுகள் சீனா – அமெரிக்கா என அணி பிரிகின்றனவா?
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யும் போது சீனாவின் நலன்களை பாதிக்கும் வகையில் செயற்படும் நாடுகளுக்கு பதிலடி கிடைக்கும் என சீனா வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ட்ரம்ப்புடன் வர்த்தகம் செய்ய முன்வரும் நாடுகளுக்கு அமெரிக்கா வரிச் சலுகைகளை வழங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 145 சதவீதம் வரியையும் அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 125 சதவீதமும் பரஸ்பர வரியை விதித்துள்ளன. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கு 90 நாட்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளது. இக்காலப்பகுதியல் அமெரிக்காவுடன் வரிவிலக்கு சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம் என கால அவகாசம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் தென்கிழக்காசிய நாடுகள் அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெறுவதால் அந்நாடுகள் நடுநிலமை வகிக்கவே விரும்புகின்றன. அமெரிக்கா, சீனாவுடனான வர்த்தகப் போரில் ஏனைய நாடுகளை மிரட்டி பணிய வைக்க முயல்வதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.
