வரவுசெலவு திட்டம்: பா உ அர்ச்சுனா தமிழரசுக் கட்சி வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை ! பா உ செல்வம் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார் ! பா உ கஜேந்திரகுமார் எதிர்த்து வாக்களித்தார் !
2025 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த வாக்கெடுப்பில் இராமனாதன் அர்சுனா, ப.திகாம்பரம், தயாசிறி ஜயசேகர இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 பேர் கலந்துகொள்ளவில்லை.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆளும் கட்சியில் இருக்கும் 159 பேரில் 154 பேர் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
வரவு செலவு திட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி, ஜீவன் தொண்டமான் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, ரவி கருணாநாயக்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, நாமல் ராஜபக்ஷ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன வாக்களித்தன.
இதேவேளை ஜனநாய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையும் கவனிக்கத்தக்கது.