லசந்த விக்கிரமதுங்க

லசந்த விக்கிரமதுங்க

லசந்தவின் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்க முற்படும் அனுர தரப்பு ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலைக்கும் நீதி வழங்க வேண்டும் !

லசந்தவின் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்க முற்படும் அனுர தரப்பு ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலைக்கும் நீதி வழங்க வேண்டும் !

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்ததை போல நிமலராஜன் தொடக்கம் இசைப்பிரியா வரையான அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியையும் பெற்றுக் கொடுக்க உறுதியளிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள சபா குகதாஸ்,

ஊடகத்துறையில் பணியாற்றியதுடன் கலைத்துறையிலும் சிறப்பான படைப்புக்களை வழங்கிய இசைப்பிரியா இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே17ஆம் திகதி வட்டுவாகலில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கு சனல் 4 ஊடகத்தின் ஊடாக ஆதாரங்கள் வெளிவந்தன. அதன் அடிப்படையில் சரணடைந்த ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்ட முறை மனித குலமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு அசிங்கமானது.

எனவே பிரதமர் அவர்களே நீங்களும் பெண் என்ற வகையில் இசைப்பிரியாவுக்கான நீதியை பெற்றுக் கொடுங்கள். இறுதிப் போரில் இசைப்பிரியாவின் கணவன் சிறிராம் கொல்லப்பட்டதுடன் அவரது மகள் அகல்யா பிறந்து இரண்டு மாதங்களில் மருத்துவ வசதியும் பால்மாவும் இல்லாமையால் புதுமாத்தளனில் இறந்தார். அத்தனை துயரங்களையும் சுமந்து கொண்டு சரணடைந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே இவருக்கான நீதி கிடைக்குமா? என குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

லசந்தவிற்கு நீதி: அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி !

லசந்தவிற்கு நீதி: அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – பிரதமர் ஹரிணி !

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் அவரது மகளால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், லசந்த விக்கிரமதுங்கவிற்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கத்தால் எடுக்கப்படக்கூடிய அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்றையதினம் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, “இவ்விடயம் தொடர்பில் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். இதற்கு முன்னரும் நாம் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தோம். தற்போதும் இந்நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம். அகிங்சாவின் கவலையும், அவருக்கு இவ்வேளையில் ஏற்படும் வேதனையையும் என்னால் நன்கு உணர முடிகின்றது.

 

7.3: இவ்விடயம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் இயலுமான அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளுவோம் என அவருக்கு உறுதியளிக்கின்றேன். சட்டமா அதிபர் திணைக்களத்திற்குத் தேவையான சுயாதீனத்தை வழங்கி, உரிய சட்டரீதியான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு, நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” என பிரதமர் தெரிவித்தார்

அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார் –

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் கொல்லப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்டு 15 வருடங்கள் கடந்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் தவறியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

லசந்த 15 வருடங்களுக்கு முன்னர் இன்று போன்ற ஒரு நாளில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார் என்றும், இன்றுவரை ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன தெரிவித்துள்ளார்.

“அரசாங்க அதிகாரத்தை திணிப்பதன் மூலம் பத்திரிகையாளர்களை மௌனமாக்க முயல்வது, கருத்து மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கலாம்” என சிரேஷ்ட வழக்கறிஞர் கூறியுள்ளார்.

“ஜனநாயகத்தின் தூண்களில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், இதுபோன்ற கொடூரமான கொலைகள் ஒரு சமூகத்தில் நடைபெறாது. ஆசிரியர் விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு உள்நோக்கம் இருந்தது. இதன் மூலம் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் வாயடைத்து விடலாம் என அதிகாரிகள் நினைத்தனர்,” என்றார்.

கொலை நடந்து 15 ஆண்டுகள் ஆன பிறகும், குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்களுக்குத் தண்டனை பெற்று, நீதியைக் காப்பாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் ஒருவராக லசந்த விக்கிரமதுங்க போன்றவர்கள் பெரிதும் தவறவிடப்படுவார்கள் என சட்டத்தரணி நவரத்ன தெரிவித்தார்.