யாழில் வாளுடன் பாடசாலை மாணவன் கைது !
யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது.
இதேவேளை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாள் ஒன்றுடன் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினரிடையே அடுத்தடுத்து போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு கலாச்சாரம் என்பன மிக வேகமாக தலைதூக்கி வருவதுடன் ஒரு அச்சமான ஓர் சூழல் உருவாகி வருகிறது. யாழ்ப்பாண வாள்வெட்டு பிரச்சினைகள் தொடங்கி போதைப்பொருள் பாவனை தொடர்பான வழக்குகள் வரை அனைத்திலும் அதிகமாக இளைஞர்களே கைதாகின்றமை எதிர்கால தலைமுறையினர் குறித்த அச்சத்தை பலரிடமும் ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.