யாழில் என்பிபிக்கு எதிராக அநாமதேய சுவரொட்டி !
யாழில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக யாழ்ப்பாண கல்விச் சமூகம் என்ற பெயரில் அநாகரீக அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “அன்பான வாக்காளரே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம் … “ என்ற வாசகங்கள் அச்சுவரொட்டியில் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் இச் சுவரொட்டிகளை காணக் கூடியதாகவுள்ளது. இந்தச் சுவரொட்டிகளை ஒட்டிய விசமிகள் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.