முல்லைமதி

முல்லைமதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு இவ்வாண்டு மே 17, 18, 19 என வெவ்வேறு தினங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. 2009 மே 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்த செய்தியை 2009 மே 24 அன்று அதன் அன்றைய தலைவர் செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் அறிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இச்செய்தியை அப்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான ரிரின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பி இருந்தது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 பில்லியன் டொலர் சொத்துக்களை வைத்திருந்தவர்கள் அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிவந்தவர்கள் , தங்களிடம் உள்ள அசையும் அசையாத சொத்துக்கள் கேள்விக்கு உட்பட்டு விடும் என்பதால் வே பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்ற மாய விம்பத்தைக் கட்டினார்கள். இன்று ஈழத்தமிழ் சமூகத்தில் இருக்கின்ற தொழில் அதிபர்கள் என்று அறியப்படுகின்ற பெரும்பாலானவர்கள் உலகம் முழக்க கோடீஸ்வரர்களானது விடுதலைப் புலிகளின் பணத்தில் தான். இன்றும் தலைவர் வந்து கேட்டால் நாங்கள் கணக்குக் காட்டுவோம் எனச் சிலர் ரீல் விடுகின்றனர். பெரும்பாலனவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவை அன்றே அறிவித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து இன்று முப்பதிற்கும் மேற்பட்ட பிளவுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்குள் ஏற்பட்டுள்ளது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நிகழ்ந்த மோசமான தவறாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த புலனாய்வுப் போராளி முல்லை மதி வருமாறு தெரிவிக்கின்றார்: “ப சிதம்பரத்தோடு கதைத்தபோது புலிகளையும் அதன் தலைமையையும் காப்பாற்றியிருக்க முடியும் அதற்கான அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதாகவே சிதம்பரம் சொன்னார். சிவசங்கர் மேனனும் அதையே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்த சிலரும் விடுதலைப்புலிகளை அழித்தே ஆகவேண்டும் என வெறிபிடித்த காங்கிரஸ் கட்சி கொள்கை வகுப்பாளர்கள் சிலரும் புலிகளை பரம விரோதிகளாக கருதிய இந்திய உளவுத்துறையின் ஒரு பகுதியினரும் விடுதலைப்புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் உருத்திரகுமாரன் போன்றவர்களும் குழப்பியடித்தனர்.

ஒரு படி கீழிறங்கி இனத்தை காப்பாற்ற விடாத சுயகொளரவம் தன்மானம் இறுதியில் நான் நீ என்ற வறட்டு வாதமாகி அழிவில் முடிந்தது என்பதே உண்மை. சோனியாவின் பெயரை அநியாயமாக பயன்படுத்துகிறார்கள். கருணாநிதியை விட சம்மந்தன் என்ற கொடியனே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாட்டை முடக்கி வைத்திருந்தார்” எனக் குற்றம்சாட்டுகின்றார் முல்லை மதி.

 ‘நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் !’ உள்ளுராட்சித் தேர்தலில் முன்னாள் இயக்கப் போராளிக் கூட்டணிக்கு – சங்குக்கு வாக்களிக்க வேண்டும் !

‘நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகள் !’ உள்ளுராட்சித் தேர்தலில் முன்னாள் இயக்கப் போராளிக் கூட்டணிக்கு – சங்குக்கு வாக்களிக்க வேண்டும் !

வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சங்குச் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் இயக்கப் போராளிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியும் அவர்களுடைய வேர்கள் புலனாய்வுப் பிரிவின் பகுப்பாளராகச் செயற்பட்ட முல்லைமதி தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

நீங்கள் எவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் என உரிமைகோர முடியும் என தேசம்நெற் வினவிய போது “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக குமரன் பத்மநாதன் என்ற செல்வராஜா பத்மநாதன் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நாங்களே உடனடியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை மக்களுக்கு அறிவித்து, தலைமையையும் பொறுப்பேற்றோம். அதன் அடிப்படையில் நாங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான தலைமை” எனத் தெரிவித்தார். இந்நேர்காணலை இன்று முழுமையாக தேசம் ரியூப்பில் பார்க்கலாம்.

“தமிழீழ விடுதலைப் போராளிகள் தங்கள் ஆரம்ப நாட்களில் பல்வேறு தவறுகளை விட்டுள்ளார்கள் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் நாங்கள் எங்கள் உயிர்களை அர்ப்பணிக்கத் துணிந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நாங்கள். அதனால், ஆயதங்களைக் கைவிட்ட பின்னும் இந்த ஜனநாயகப் போராட்டத்தையும் எங்களாலேயே முன்னெடுக்க முடியும். மக்களுக்காக ஒரு துளி வியர்வையும் சிந்தாத மதிவாதத் தலைவர்களின் பரம்பரை அரசியல் வாதிகளால் அதனை நேர்மையாகச் செய்ய முடியவில்லை என்பதை இரா சம்பந்தன், எம் ஏ சுமந்திரன், சி வி விக்கினேஸ்வரன், பொன் ஐங்கரநேசன் போன்றோர் காட்டிவிட்டனர். முன்னாள் இயக்கப் போராளிகள் – உங்களுடைய பிள்ளைகள் விட்ட தவறுகளை மன்னித்து அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான முல்லை மதி வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாங்கள் மற்றைய போராளிகளின் ஆயதங்களை அன்று களைந்தோம் அதற்கான சூழல் அன்று ஏற்பட்டது இன்று எல்லோரும் ஜனநாயக வழியில் போராடுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் உட்பட்ட முன்னால் இயக்கப் போராளிகளுக்கு ஆதரவளியுங்கள்” என வலியுறுத்தினார் முல்லை மதி.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ கைவிடப்பட்டார் ! தமிழினத்தின் துரோகத்தனம் !

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ கைவிடப்பட்டார் ! தமிழினத்தின் துரோகத்தனம் !

அண்மையில் சுவிஸ் நாட்டில் வைத்து ஈழத்தமிழரின் மனித உரிமை செயற்பாட்டாளரான பொஸ்கோ கைதாகியுள்ள நிலையில் தமிழர் தரப்பு அதனை கண்டுங்காணாமலும் செயற்பட்டு வருவதுடன் எதுவித அழுத்தங்களையும் இது தொடர்பில் பிரயோகிக்காமல் கள்ள மௌனம் காத்து வருதிறது.

இந்நிலையில் இது தொடர்பில் புலம்பெயர் அரசியல் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் போராளி புலனாய்வாளர் முல்லைமதி அவர்களுடனான தேசம்திரை நேர்காணல்

2009ற்கு பின்னர் தமிழ்தேசியம் என்ற பெயரில் உலா வரும் போலி ஆசாமிகள் – முல்லை மதி காட்டம் !

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயற்பட்டுக்கொண்டு திலீபனுக்கு பேரணியும் செய்கிறார் கஜேந்திரகுமார் – தமிழ்தேசிய அரசியலை 2009இன் பின்னர் எவரும் உண்மையாக மேற்கொள்ளவில்லை – புலிகளை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் தமிழரசுக்கட்சியினர் – அர்ச்சுனாஇயக்கப்படுகிறார் – இலங்கை தமிழரசுக்கட்சியின் பின்னால் இலங்கை உளவுத்துறை ‘ –

 

புலிகளின் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிய வேர்கள் புலனாய்வுத்துறையின் புலனாய்வுப் பகுப்பாளருடன் ஒர் உரையாடல்