வியாழேந்திரன் கைது – பட்டாசு வெடித்து இளைஞர்கள் கொண்டாட்டம்!
கடந்த வருடம் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம், வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை பகுதியில் வைத்து இலஞ்ச உழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்குறித்த வழக்கு தொடர்பில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுதருவதாக வர்த்தகர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப்பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதனிடையே முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் கைதினை தொடர்ந்து சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர மணிக்கூட்டு கோபுரத்து வீதி சுற்றுவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

