பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நிகழ்நிலை காப்புச்சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். இச்சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தபோது, நாட்டு மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தேர்தல் காலத்தில் மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைவாகவே செயற்படுவோம். நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். இதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெகுஜன ஊடகத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுக்களை ஒன்றிணைத்து உப குழு ஒன்றை அமைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. வழக்குத் தாக்கல் செய்யப்படவுமில்லை. பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை நாங்கள் முழுமையாக பாதுகாப்போம் என்றார்.

“நாமல் ராஜபக்ச தொடங்கி யார் மீதும் நாம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை – எடுக்கவும் மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நாமல் ராஜபக்ச தொடங்கி யார் மீதும் நாம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை – எடுக்கவும் மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

 

நாம் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளவில்லை. எதிர்காலத்திலும் அது இடம்பெறாது.விசாரணை நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை. எனவே தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே அதன் தொடர்புடைய தரப்பினர் அழைக்கப்படுகிறார்கள். இதில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை.இது தொடர்ச்சியாக இடம்பெறும்.அரசியல் நோக்கத்தை கொண்ட அந்த பழைய அரசியல் முறைமை இங்கு இருக்காது.அது நாமல் ராஜபக்ஷவோ அல்லது வேறு ஒருவராக கூட இருக்கலாம். பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றுவர்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது.அதனை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பார்களாயின் அது தொடர்பில் நாம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலால் தேசிய பாதுகாப்புக்கு எந்த சவாலும் இல்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நீதிமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலால் தேசிய பாதுகாப்புக்கு எந்த சவாலும் இல்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நேற்று நீதிமன்ற வளாகத்தினுள் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இதனால் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இது பொதுவாக குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையில் இடம்பெறும் சண்டைகள் மோதல்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற அமர்வில் தொடர்ந்தும் இது தொடர்பில் அமைச்சர் விஜேயபால தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.கடந்த காலங்களில் இவ்வாறான ஒருங்கமைக்கப்பட்ட குழுக்களால் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தின சம்பவத்தினை அரசு கடும் அவதானத்தினை செலுத்தியுள்ளது. இது குறித்த தேவையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட சில மணி நேரங்களில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இவர் மகரகம பகுதியினை வசிப்பிடமாகக் கொண்ட சமிந்து டில்ஷான் மதுஷங்க கந்தனல் ஆராச்சி என்பவர் பாலவி பிரதேசத்தில் வைத்து மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு சந்தேக நபராக பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, இது பொதுவாக குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையில் இடம்பெறும் சண்டைகள் மோதல்களே..” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மன்னார் நீதிமன்றத்தின் வெளியில் படுகொலை, கொழும்பு நீதிமன்றத்துக்குள் படுகொலை. சட்டத்தரணியை போன்று வேடமிட்டு கொலையாளிகள் நீதிமன்றத்துக்குள் செல்கிறார்கள். இந்த செய்தி சர்வதேசத்துக்கு சென்றால் யார் நம்பிக்கையுடன் இலங்கைக்கு வந்து முதலீடு செய்வார்கள். கடந்த காலங்களை பற்றி பேசிக்கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெறும் நினைவேந்தல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

வடக்கில் இடம்பெறும் நினைவேந்தல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!

நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும். நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவது எமது நோக்கம் அல்ல. என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

“உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது. ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது என தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு – தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன எனவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.