புசாந்தன் சற்குணராசா

புசாந்தன் சற்குணராசா

சர்வதேச அளவில் சாதிக்கும் இலங்கைத்தமிழ் வீரன் புசாந்தன் !

சர்வதேச அளவில் சாதிக்கும் இலங்கைத்தமிழ் வீரன் புசாந்தன் !

சினிமா தொடங்கி விளையாட்டு வரை தென்னிந்திய ஊடகங்களும் , இந்திய ஊடகங்களுமே கதி என இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநரின் பெயர் தெரியுமோ இல்லையோ ஆனால் தென்னிந்திய அரசியலின் அத்தனை அசைவுகளையும் தெரிந்து வைத்திருப்பர். அது போலவே தான் எப்படி இந்தியாவில் கிரிக்கெட் என்கிற விளையாட்டு வணிகமயப்படுத்தப்பட்டு ஏனைய விளையாட்டுக்களும், திறமையானவர்களும் ஊடகங்களின் பார்வையில் இருந்து காணாமல்  ஆக்கப்பட்டார்களோ அதே நிலை தான் இலங்கை தமிழர் மத்தியிலும் நீடிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் தமிழர்களுக்கு வாய்ப்பு இல்லை – இது ஓர் இனவாத நாடு என ஒரு தரப்பினர் கூறிக்கொண்டே இருந்தாலும் மறுவலமாக திறமை உள்ள தமிழ் இளைஞர்கள் தேசிய சர்வதேச மட்டத்தில் சாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு பளுதூக்கும் வீரர் சற்குணராசா புசாந்தன்.

அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Powerlifting) பளு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றிருந்தார். இது இலங்கை விளையாட்டுத்துறையின் பாரிய மைல்கல்லாக அமைந்ததுடன் தமிழ் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளையும் இது திறந்து விட்டிருந்து.

இந்த நிலையில் தற்போது உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்றுவரும் சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட புசாந்தன் 3ம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார். இவருடைய வெற்றியை பலரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.