பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

சொன்னபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்போம் – மன்னாரில் பிரதமர் !

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) எதிர்காலத்தில் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் முசலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவது தொடர்பாக அமைச்சரவையால் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்காலத்தில் இந்தச் சட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் மதம் அல்லது இனத்தின் அடிப்படையில் எந்த வகையான ஒடுக்குமுறைக்கும் ஆளாக மாட்டார்கள் என்றும், அரசாங்கம் ஒருபோதும் இனவெறி மனநிலையுடன் நெருக்கடிகளைப் பார்க்காது என்றும் அவர் உறுதியளித்தார்.

தமிழ்த் தலைவர்கள் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் கொடுக்க, சிங்கள தலைவர்கள் பெண்களை வர்த்தகத் தலைவிகளாக்குகின்றனர் !

தமிழ்த் தலைவர்கள் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் கொடுக்க, சிங்கள தலைவர்கள் பெண்களை வர்த்தகத் தலைவிகளாக்குகின்றனர் !

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில், அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளன என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வர்த்தகத் தலைவர்களாகவும், தொழில்முயற்சியாளர்களாகவும், ஏற்றுமதியாளர்களாகவும் பெண்கள் முன்னேறக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை அகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆனால் இதற்கு மாறாக தமிழ் தலைவர்கள் பா உ அர்ச்சுனா மற்றும் பா உ சிறிதரன் போன்றவர்கள் பெண்களை விபச்சாரிகளாகவும் போகப் பொருளாகவும் கருதுகின்றனர். பா உ அர்ச்சுனா சாதாரண பெண்களை பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று தூற்றுகின்றார். பா உ சிறிதரனின் அலுவலகத்தில் பெண்கள் பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றனர். அவ்வாறானவர்களை தொடர்ந்தும் தன் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தி வருகின்றார்.

எந்தவொரு தமிழ் கட்சியும் பாராளுமன்றத்துக்கு பெண்களை அனுப்பவில்லை. அவ்வாறு சமூகத்தில் முன்னுக்கு வரும் பெண்களை இழுத்துவிழ்த்துவதில் தமிழ் தலிபான்கள் முன்நிற்கின்றனர். பா உ அர்ச்சுனா அவருடைய அடிப்பொடியான லண்டன் தமிழ் அடியான் இவர்களுடைய ஊதுகுழல் ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்று ஒரு சமூகவிரோதக் கும்பல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வக்கிர புத்தியோடு செயற்படுகின்றனர். இவர்கள் வீட்டுப் பெண்கள் இந்த வக்கிரபுத்தி கொண்டவர்களை எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனர் எனத் தெரியவில்லை எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

வெளிநாட்டுப்பயணங்களும் அரசியல் இலஞ்சமாக இருந்தன  !

வெளிநாட்டுப்பயணங்களும் அரசியல் இலஞ்சமாக இருந்தன !

 

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட தொகையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிட்டார்.

இதன்படி, 2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபச்ச 3,572 மில்லியன் ரூபாவும், 2015-2019 வரையான காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன 384 மில்லியன் ரூபாவும், 2020-2022 வரையான காலப்பகுதியில் கோட்டபய ராஜபக்ச 126 மில்லியன் ரூபாவும், 2023-2024 வரையான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க 533 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

2024.09.21 முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது எனவும் மக்களுக்கு சுமையாக இருக்காமல், செலவுகளை இயலுமான வகையில் குறைத்துக் கொண்டுள்ளோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள 33 பயணங்களில் எதிர்க்கட்சியினர் உட்பட மொத்தமாக 154 பேர் பங்குப்பற்றியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பிரதமர் இதுவும் அரசியல் இலஞ்சம் எனவும் சிறப்புரிமைகள் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அனுரவில் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் யதார்த்தத்துக்கு புறம்பானவை என பாராளுமன்ற உறுப்பினர் டிலித் ஜெயவீர தெரிவித்துள்ளார். வெறும் 1.8 மில்லியன் ரூபாயில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு ஜனாதிபதியால் பயணம் செய்ய முடிந்தது என்றும் மிதிபலகையில் நின்று பயணம் செய்தாலும் இவ்வளவு குறைந்த தொகையுடன் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

“டிஜிட்டல் விவசாயம்” மற்றும் “டிஜிட்டல் பொது அடிப்படை வசதிகள்” தொடர்பில் Bill & Melinda Gates மன்றம் கவனம் !

Bill & Melinda Gates மன்றத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவின் கொள்கை மற்றும் அரச தொடர்புகள், பிரதான பணிப்பாளர் ஹரி மேனன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுகாதாரம் மற்றும் போஷாக்கு, விவசாயம், நகர்ப்புற சுகாதாரம் மற்றும் மகளிர் பொருளாதாரத்தை வலுவூட்டல் தொடர்பான மன்றத்தின் செயற்பாடுகள் பற்றி மேனன் இங்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன் இலங்கையில் விசேடமாக “டிஜிட்டல் விவசாயம்” மற்றும் “டிஜிட்டல் பொது அடிப்படை வசதிகள்” ஆகியவற்றின் மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

டிஜிட்டல் விவசாயத் திட்டங்களுக்கான நிதி வசதிகள் மற்றும் பொது அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதற்கான தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான விடயங்கள் குறித்தான அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி பிரதமர் இங்கு விளக்கமளித்தார்.

இக்கலந்துரையாடலில் Bill & Melinda Gates மன்றத்தின் உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் ஹபுதன்த்ரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) மஹிந்த குணரத்ன, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவுக்கான துணைப் பணிப்பாளர் தனுஜ மீகஹவத்த ஆகியோர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் சமுகமளித்திருந்தனர்.

பாடசாலைகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவது முழுமையாக தடை – பிரதமர் ஹரிணி அமரசூரிய உத்தரவு !

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், கசிந்துள்ள விடயங்கள் தொடர்பில் சுயாதீன நிபுணர்களின் பங்களிப்புடன் முழுமையான விசாரணை அறிக்கை கொண்டுவரப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (26) காலை கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் ஹரினி அமரசூரிய;

“.. பாடசாலைக் கல்வியின் வளர்ச்சி தற்போதைய அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எங்கள் அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளோம்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு இந்த நிறுவனங்கள் செயற்பட வேண்டும். குறிப்பாக, பரீட்சைகளை நடத்துதல் மற்றும் முடிவுகளை வழங்குதல் ஆகியவற்றை விரைவுபடுத்த வேண்டும்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையின் மூலம் செய்யப்பட வேண்டும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் காலிப் பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட வேண்டும்.” என கூறிய பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும் காலங்களில் பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை முழுமையாக நிறுத்துமாறும் உத்தரவு வழங்கியுள்ளார்.