பலாலி

பலாலி

யாழில் 34 ஆண்டுகளின் பின்னர் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட ஆலயம்!

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயரத்துக்கு 34 வருடங்களின் பின்னர் மக்கள் வழிபாட்டுக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள இந்த ஆலயம் உட்பட 6 ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினந்தோறும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பலாலிக்கு வடக்கு ஆளுநர் வேதநாயகன் கள விஜயம்!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ். மாவட்ட இராணுவ தலைமையகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

 

இக் கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

 

அத்துடன் பொதுமக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பான விடைகள் விரிவாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் ஆளுநர், மரக்கன்று நடுகை மேற்கொள்ளபட்டது. பின்னர் விடுவிக்கப்பட்ட பலாலி – அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.