பசில் ராஜபக்ஷ

பசில் ராஜபக்ஷ

நாட்டை விட்டு வெளியேறினார் பஷில் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை பயணமாகியுள்ளதாக நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

அதன்படி இன்று அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK-649 விமானத்தில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளதுடன் அவர் அங்கு இருந்து அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேளை நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷ துபாய்க்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ஷவின் சொத்துப்பட்டியலால் அமெரிக்கா கோபம் – எச்சரிக்கிறார் விமல் வீரவங்ச!

பசில் ராஜபக்சவின் அமெரிக்க சொத்துக்கள் குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்,

“பொருளாதார நெருக்கடியால், இந்த நாடு ஒரு விசித்திரமான மனநிலையில் விழுந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாட்டின் தலைவர்கள் எங்கும் ஓடவில்லை. இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு நாடு எந்த நிலைக்கு வீழ்ச்சியடையும் என்பதை அறிவோம் என்றோம்.

அப்படிச் சொல்லும் போது கோட்டாபய ராஜபக்ச சிலை போல் நிற்கின்றார். சற்று கடினமான கேள்வியை எழுப்பினால் பசிலின் முகம் நன்றாக தெரியும். டொலர் பிரச்சினை எழுப்பப்பட்ட போது, ​​கோட்டாபய பசிலைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கின்றது.

இல்லை, இல்லை, அப்படி ஒன்றும் பிரச்சினை இல்லை. ஒரு சில பணக்காரர்களால் வந்த பிரச்சினையை ஒரு வாரத்தில் தீர்த்து வைப்பேன்” என்று கொஞ்சம் நகைச்சுவையுடன் பசில் பேசியிருந்தார்.

எண்ணெய் பிரச்சினைக்கு 4 மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் உதய கம்மன்பில, ‘எண்ணெய் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்திற்கு விரைவில் செல்ல வேண்டும்’ என்றார்.

ஆனால் பசில் ராஜபக்ச தொலைக்காட்சி உரையாடலில், ‘ஆம்! அவர் அப்படித்தான் சொன்னார். ஆனால், மக்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் அதை செய்யவில்லை’ என்றார்.

இறுதியாக, இந்நாட்டின் தாய் தந்தையர் எண்ணெய் வரிசைகளில் தவித்து இறந்தபோது, ​​அவர்கள் நலமாக உணர்ந்தனர்.

இவை அனைத்தும் சேர்ந்து இறுதியில் நாட்டை வீழ்ச்சிக்கு இட்டுச்சென்றன. மேலும், 69 இலட்சம் வாக்குகள் வீழ்ச்சிக்கு வித்திட்டதாகவும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

“மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னால் கேக் சாப்பிட முடியாது.” – முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ!

மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னால் கேக் சாப்பிட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக மையத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

ரணில்  ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எவரும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்புகளை 100 வீதம் நிறைவேற்ற முடியாமல் போனமை தொடர்பில் வருந்துவதாகவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற பாடுபடுவேன் எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான நேரம் வந்துவிட்டதாகவும், எந்தத் தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும், தன்னால் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வரமுடியாது போனதில் மகிழ்ச்சியடைவதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து பசில்ராஜபக்ஷ விடுதலை!

கள்ளச்சந்தை டொலர் மூலம் வாங்கப்பட்ட ஆயுதங்கள் – பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தல் !

கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக பசில் ராஜபக்ஷ கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அதன் பின்னர் வெளிவிவகார அமைச்சு அதனை நிராகரித்து ஊடக அறிக்கையை வெளியிட்டது. ஆனால் நிதியமைச்சரால் எந்த மறுப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையிலேயே, பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கறுப்புப் பணத்தை எவரும் பயன்படுத்துவதற்கு எமது சட்டங்களில் இடமில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தால் தடைகள் விதிக்கப்பட்ட ஒரு நாட்டைக் கையாள்வதற்கான ஆணையை பொதுமக்கள் அரசாங்கத்திற்கு வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பதை பசில் ராஜபக்ஷவே தீர்மானிப்பார் – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து நிதி அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிதத்தர்.

மேலும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் பாரிய வேறுப்பாடு இருப்பதால் மண்ணெண்ணெய்யை பயன்படுத்த மக்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இவ்வாறு மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கே இருக்கிறது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.