தற்கொலை குண்டுத் தாக்குதல் வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி !
2008 இல் ஒக்டோபர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் மைத்திரிபால சிறிசேனா மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் அவர் உயிர் பிழைத்திருந்தார். இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு உதவிய குற்றச்சாட்டில் இரண்டு நபர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினமான ஏப்பிரல் 28 ஆம் திகதி இவ்வழக்கின் முதலாவது சாட்சியான மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் முற்பட்டு சாட்சியமளித்துள்ளார். 2008 இல் மைத்திரி சுகாதார அமைச்சராக இருந்த போதே அவரது வாகனத் தொடரணி மீது தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மைத்திரி பயணித்த வாகனம் குண்டுத் தாக்குதலில் தப்பியது. இருந்தபோதும் இத்தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஏழு பேர் காயமடைந்திருந்தனர்.