சர்வதேச மன்னிப்பு சபை

சர்வதேச மன்னிப்பு சபை

தொடரும் இனப்படுகொலை – இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் படுகொலை செய்கிறது என சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!

தொடரும் இனப்படுகொலை – இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் படுகொலை செய்கிறது என சர்வதேச மன்னிப்பு சபை குற்றச்சாட்டு!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் காசா பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தனர். இப்போரில் இதுவரை 44,600பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது அதிகமாக உள்ளதாக சர்வதேச சேவை அமைப்புகள் அறிவித்துள்ளன. இதேவேளை பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் அமைப்பு (Committee to Protect Journalists ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 180க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் அதிகமானோர் பாலஸ்தீனியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் இன அழிப்பில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம்சாட்டியுள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை அமைப்பினுடைய விரிவான அறிக்கையில் ,

“ இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் நடத்தும் தாக்குதலை ஆய்வு செய்ததில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் இன அழிப்பில் ஈடுபடுவது தெரியவருகிறது. இது சர்வதேச சமுதாயத்துக்கு ஓர் எச்சரிக்கை மணியாகும். இந்த இன இழிப்பு இப்போதே தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாதுதான். அதே போல், காஸாவில் பொதுமக்களிடையே ஆயுதக் குழுவினர் கலந்திருப்பதையும் மறுப்பதிற்கில்லை. ஆனால், அந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்திவருவது இன அழிப்பே ஆகும். இந்தக் குற்றத்துக்கு அமெரிக்காவும் இஸ்ரேலின் பிற நட்பு நாடுகளும் துணை போவதாகவே கருத முடியும். ” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சர்வதேச மன்னிப்பு சபைய்  இந்த ஆய்வறிக்கை  உண்மைகளைத் திரித்து பொய்யாகப் புனையப்பட்டது என்று இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் விமர்சித்துள்ளதும்  குறிப்பிடத்தக்கது.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் – சர்வதேச மன்னிப்பு சபை வேண்டுகோள்!

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.