கௌசல்யா நரேன்

கௌசல்யா நரேன்

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் ! அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் ! அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்திக்கும் வரை ஆளுமையோடு இயங்கிய கௌசல்யா நரேந்திரன் தனித்தன்மையை இழந்து பொது வாழ்க்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்டப்பட்டுள்ளார். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதிலுள்ள சவால்களை இது காட்டுகின்றது. கௌசல்யா ஏன் தொடர்ந்து அரசியலில் எம்பி அர்ச்சனாவுடன் பயணிக்க மாட்டார் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் நகைப்பிற்கிடமாகவுள்ளது. எம்பி அர்ச்சுனாவின் வழக்கிற்கு உதவி சட்டத்தரணியாக வந்த கௌசல்யா நரேந்திரன் எம்பியின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம். இந்த இடத்தில் கௌசல்யா மீது பரிதாபமே தோன்றுகின்றது.
சிறு வயதில் தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த கௌசல்யா தன்னுடைய கல்வியில் சிறந்து விளங்கியிருக்கின்றார். படித்து முடித்து ஒரு வளர்ந்து வரும் சட்டத்தரணியாகவும் திறமையுடன் தொழில் செய்திருக்கின்றார். அப்படியிருக்க இன்னொருவர் அதாவது அர்ச்சுனா இராமநாதன் தனக்காக முடிவுகள் எடுக்க அனுமதியளிக்கும் வகையில் கௌசல்யா தனது தனித்துவத்தை இழந்து போனது எப்படி?
அதுதான் யாழ்ப்பாணத்து வெள்ளாளிய ஆண் மைய தமிழ்ச் சமுதாயம் கட்டியெழுப்பியுள்ள சமூகவாழ்க்கை. அந்த வாழ்க்கையில் ஒரு தமிழ்ப்பெண் எப்போதும் ஏதோவொரு ஆணின் நிழலில் தான் தன்னுடைய அடையாளத்தை கட்டியமைக்க வேண்டியுள்ளது. அந்த ஆண் தந்தையாகவோ, தனயனாகவோ, கணவனாகவோ அல்லது மகனாகவோ தான் இருக்க முடியும். அப்போது தான் பெண் பாதுகாப்பாக கௌரவமாக வாழமுடியும் என தமிழ்ப் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனப்பாங்கின் வெளிப்பாடே ”முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும், சேலை தான் கிழியும்“ என்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் கருத்தியல், பழமொழியாக கடத்தப்படுகிறது.
இந்த விடயத்தில் கௌசல்யாவை எடுத்துக் கொண்டால், கௌசல்யா அரசியலுக்கு வருவதையும் அரசியலை விட்டு விலகுவதையும் எம்பியும் வைத்தியருமான அர்ச்சனா இராமநாதன் முடிவு எடுத்துள்ளார். அதனை எம்பி இராமநாதனே தனது வாயால் ஒத்துக்கொள்கிறார். கௌசல்யா அரசியிலிருந்து விலகும் முடிவை தானே எடுத்துள்ளதாக கூறும் அவர் சட்டத்தரணி கௌசல்யா முகநூல் கூட அவரால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதைவிட பெரிய வேடிக்கை கௌசல்யாவிற்கு ஏதும் தகவல் சொல்வதாக இருந்தால் தன்னிடம் அறிவிக்கும்படி கூறுகிறார்.
கௌசல்யாவின் காதலில் குறுக்கிட்டு குழப்பிய போதும் சரி, கௌசல்யாவை தானே திருமணம் செய்வேன் என முழங்கிய போதும் சரி, கௌசல்யாவின் சலத்தை கம்பவாரதி ஜெயராஜ்க்கு பூசக் கொடுப்பேன் என்று கூறும் போதும்சரி, பொது இடத்தில் ஒரு சட்டத்தரணியை ‘தங்கம்‘, ‘ தங்கம்’ என அழைத்து தரம்தாழ்த்திய போது வராத அக்கறை, கௌசல்யா மீது இப்போது ஏன் எம்பி அர்ச்சனாவுக்கு வந்துள்ளது. எல்லை மீறி விட்டது. கௌசல்யாவின் எதிர்காலமும், கௌசல்யாவினது குடும்ப மரியாதையும் இப்போது ஏன் கண்ணுக்கு தெரிகிறது. தனித்துவமாக தன்னுடைய அடையாளத்தோடு வாழ வேண்டிய ஒரு பெண் சட்டத்தரணியின் எதிர்காலத்தை இருட்டாக்கியது எம்பி அர்ச்சுனா இராமநாதன் ஆகும்.
கௌசல்யா செய்ததும் தவறு. தொழில்முறை ரீதியான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடைய தொடர்பை அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது கௌசல்யா கற்றுக் கொண்ட “சட்டத்தரணி தொழில் நெறிமுறைகளுக்கு“ முரணானது. இந்த விடயம் தனிப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் என்ற இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்ட விடயமாக கடந்து செல்ல முடியாது. மக்களுக்கு சேவை என பொது வெளியில் வந்த இரு நபர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.
சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தன்னுடைய தொழிலிலும் முறையான நெறிமுறைகளை பின்பற்றவில்லை. அரசியலிலும் அதையே தான் செய்திருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள். மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய இடத்தில் அவர் உள்ளார். கௌசல்யா தானாக முன்வந்து அரசியலை விட்டு விலகினாலும் சரி விலத்தப்பட்டாலும் சரி வாக்குப் போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
கௌசல்யா மாதிரியான பெண்களை ஈழத்தமிழ்ப் பெண்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆண் மைய, பால்நிலைச் சமத்துவமற்ற மற்றும் வன்முறைகள் நிறைந்த சமூகத்தில்  பெண்கள் அரசியலில் தனித்துவத்தோடு செயற்படுவது மிகச் சிரமம். ஆனால் கௌசல்யா நரேந்திரன், உமாசந்திரப் பிரகாஷ் , சுரேகா பரமநாதன் போன்ற பெண்கள், ஆண்மைய அரசியலின் பிரதிநிதிகளாக இருப்பதும் பெண் உரிமைகளுக்கு மிக ஆபத்தானது.
கௌசல்யா தனக்காகவும் குரல் கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை. ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற போலி அடையாளத்துடன் இயங்கும் முகநூலில் பெண்களின் நிர்வாணப்படங்கள் மற்றும் அவதூறுகள் வலம் வந்த போதும் கௌசல்யா அந்த இழி செயலை செய்பவர்களுக்கு வாக்காளத்து வாங்கினார். இன்று திடீரென பொதுவெளியிலிருந்து ஓடி ஒளித்து விட்டார். இப்படியானவர்களிடம் அதிகாரம் போனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த தமிழ்ச் சமூகத்தில் இது பெரிய பின்னடைவாக இருக்கும்.
உமாசந்திரப் பிரகாஷ் போன்ற பெண்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுக்கு அரசியலில் முகவரியை உருவாக்கிக்கி கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல காலம்காலமாக பேரினவாத அரசியலைச் செய்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்சவின் கட்சி எனத் தேசியக் கட்சிகளுக்கு  வாக்கு சேகரித்து கொடுக்கும் இவர்களையும் தமிழ்ப் பெண்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். போரில் வன்முறைக்குள்ளான பெண்கள் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை. மேட்டுக்குடிப் பெண்களான இவர்களுக்கு அரசியல் அதிகாரம் ஒரு சமூக அந்தஸ்து மட்டுமேயாகும்.
சுரேக்கா பரமநாதன் போன்ற பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேல் நிலைக்கு வரும்போது அவர்கள் தம்மையும் மேட்டுக்குடியாக பாவனை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். தமிழரசுக் கட்சி முன்னாள் தவிசாளர் வீட்டில் தீக்குளித்து இறந்த விஜிதாவுக்கு குரல் கொடுத்த சுரேகா, எப்படி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். எம். ஏ. சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் நீண்டகாலமாக செயல்பட்ட பெண்களுக்காக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லை. அதேநேரம் சுரேகாவை எம். ஏ . சுமந்திரன் பின்கதவால் தமிழரசுக் கட்சிக்குள் கொண்டு வந்து, சுரேகாவின் வாய்க்கு பூட்டுப் போட்டார். விஜிதாவின் மரணத்திற்கு காரணமானவர் என்று சுரேகாவால் குற்றம்சாட்டப்பட்ட சுகிர்தனோடே இணக்கமாக ஒரே கட்சியில் அரசியலில் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். தாம் கொண்ட கொள்கையில் நிலையில்லாத பெண்களால் சமூகத்தில் இருக்கின்ற ஏனைய பெண்களின் உரிமைகளுக்காக போராட முடியாது.
பெண்கள் எத்தனை துறைகளில் சரி சமமாக ஆண்களுக்கு நிகராக முன்னேறினாலும், அரசியலில் மட்டும் அவர்களால் தனித்துவமாக செயற்பட முடியவில்லை. அதற்கு பிரதான காரணம் அதிகார அரசியலில் பெண்கள் இடத்தைப் பிடித்தால் பெண்களுக்கெதிரான சட்டங்கள் தொடக்கம் சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற அச்சமாகும்.
ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்துமே ஆண்களின் தலைமைத்துவதிலேயே செயற்படுகின்றன. அக்கட்சிகளில் பெண்கள் ஆண்களுக்கு விருப்பு வாக்குகளைச் சேர்த்துக் கொடுக்கும் கருவிகளே. பெண்களால் தலைமைதாங்கி நடத்தக் கூடிய அரசியல் கட்சிகள் தோன்றினால் அல்லது பெண்களே தமக்கான கட்சிகளை உருவாக்கிக் கொள்ளும் போது ஒருவேளை பெண்களை அரசியலில் கருவேப்பிலையாக பயன்படுத்தும் நிலைமை மாறலாம்.
அதற்கு அரசியலுக்கு வரும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கருத்தியல் ரீதியான வன்முறைகளை எதிர்த்து நிற்க கூடிய திராணி பெண்களுக்கு உருவாக வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள பெண்களும், ஒடுக்கப்படுகிற பெண்களும் மற்றும் வன்முறைகளிலிருந்து உடைத்துக் கொண்டு வருகிற பெண்களும் அரசியலுக்கு வரும் போது மேட்டுக்குடி அலங்கார பொம்மைகளாக இருந்து கொண்டு போலிப் பெண்ணியம் பேசும் பெண்களை அரசியலில் இருந்து நீக்கலாம். வலிகளைச் சுமப்பவர்களே அந்த வலிகளுக்கு தீர்வை காண முடியும். அந்தவகையில் கௌசல்யா நரேந்திரனின் அரசியல் நீக்கம் தமிழ்ப் பெண்களின் போலி அரசியல்ப் பிரவேசத்தைப் பற்றிய மறுபரிசீலனையை வேண்டி நிற்கின்றது.

அர்ச்சுனா – கௌசல்யா கூட்டுக்கு தமிழ் மக்களுடன் இருந்த தேன்னிலவு கசக்க ஆரம்பித்துவிட்டது !

அர்ச்சுனா – கௌசல்யா கூட்டுக்கு தமிழ் மக்களுடன் இருந்த தேன்னிலவு கசக்க ஆரம்பித்துவிட்டது !
வருகின்ற உள்ளுராட்சித் தேர்தலில் அர்ச்சுனா – கௌசல்யா ஊசிக்கூட்டை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. சாளினி, சங்கவி, சுவஸ்திகா எனப் பெண்களை விபச்சாரிகள் எனப் பிரச்சாரம் செய்து அவர்களின் நிர்வாணப் படங்களை முகமூடி போட்டுக்கொண்டு வெளியிட்ட அர்ச்சுனா – கௌசல்யா ஊசிக்கூட்டணியின் பிரச்சார ஊடகமாக மாறியுள்ளது ஊழல் ஒழிப்பு அணி வன்னி. இந்தக் கூட்டுக்குள் இருக்கும் மற்றுமொருவர் லண்டனில் வாழும் அர்ச்சுனா அடியான் – ஊசி அடியான். இவர்கள் பெண்கள் மீது நடத்திய மும்முனைத் தாக்குதல்கள் சமூகத்தில் முன்னுக்கு வருகின்ற பெண்களின் நடத்தை மீது களங்கத்தை ஏற்படுத்துவது, அவர்களை மிரட்டிப் பணிய வைப்பது இல்லையேல் கடைசி ஆயதமாக அவர்களை நிர்வாணமாக்கிய படங்களை வெளியிடுவது. இதற்கு மாநகர முதல்வராக போட்டியிடும் கௌசல்யாவும் உடந்தையாக உள்ளார்.
மூகமூடி அணிந்து கொண்டு இந்த இழிசெயலில் ஈடுபடும் ஊழல் ஒழிப்பு அணி வன்னியை ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிடுபவர்கள் என்று சான்றிதழையும் கௌசல்யா வழங்கியுள்ளார். அர்ச்சுனாவின் பிரச்சாரப் பீரங்கியான ஊழல் ஒழிப்பு வன்னி யிடம் தன்னைப் பற்றியும் எழுதச் சொன்னதாக சொல்லி பெருமைப்படுகின்றார் அர்ச்சுனா. நீங்களே நடத்தும் முகமூடி வலைத்தளத்திற்கு நீங்களே என்னைப் பற்றியும் எழுதுங்கோ என்று கேட்பீங்களாம். அவர்கள் அதற்கு கும்பிடு போடுவார்களாம். யாழ் மக்கள் எத்தினை பேர் தான் காதில பூ வைப்பீர்கள். எத்தனைதரம் தான் வைப்பீர்கள்.
தற்போது இந்த ஊசிக் கூட்டுத் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ் தேசியக் கட்சிகள் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யுத்தத்திற்குப் பின்னான 15 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்ததால் தான் சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்து கதாநாயகனாகத் தோண்றிய அர்ச்சுனாவை மக்கள் நம்ப வேண்டி வந்தது. ஆனால் ஊசி அர்ச்சுனா தான் எவ்வளவு ஆபத்தானவர் என்பதை பெண்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்கி வாக்களித்த யாழ் மக்களின் முகத்தில் கரி பூசிவிட்டார். அதனை ஒருவர் இவ்வாறு விபரிக்கின்றார்.

குமாரவடிவேல் குருபரன் முதல் கௌசல்யா நரேன் வரை: யாழின் குறைவிருத்தி சட்டத்தரணிகள் – யாழ் மக்களின் தலைவிதி !

 குமாரவடிவேல் குருபரன் முதல் கௌசல்யா நரேன் வரை: யாழின் குறைவிருத்தி சட்டத்தரணிகள் – யாழ் மக்களின் தலைவிதி !
யாழின் சட்டத்தரணிகள் குருபரன் முதல் கௌசல்யா வரை சமூத்தைச் சீரழிப்பவர்களாக மாறியுள்ளனர். குறைவிருத்தியுடைய சமூகப் பிரஞையற்ற இவர்கள் யாழ் மக்களின் பிரதிநிதிகளாக மாறுவது யாழ் மக்களை வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. கள்ளக் காணி எழுதுவது முதல் பெண்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்குவது வரை அத்தனை சமூகப் பொறுக்கித் தனங்களையும் இவர்கள் மேற்கொள்கின்றனர். சமூகம் சார்ந்த அடிப்படை அறிவற்ற இச்சட்டத்தரணிகள் தற்போது சமூகம் சார்ந்து கருத்துத் தெரிவிக்குமளவுக்கு தமிழ் சமூகத்தின் நிலை தரம் தாழ்ந்துவிட்டது.
யாழ் மாவட்டத்திலிருந்து தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சட்டத்தரணிகளின் குறைவிருத்தி நிலை மிகக் கீழ்நிலைக்குச் செல்கின்றது. இவர்களிடையே சமூகம் சார்ந்த எந்தச் சிந்தனையும் இல்லையென்பதை அவர்களின் செயற்பாடுகள் வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றது. கடந்த காலங்களில் கள்ளக்காணி எழுதுவதோடு தங்களை மட்டுப்படுத்திக்கொண்டிருந்த இந்தச் சட்டத்தரணிகள் தற்போது அரசியலிலும் சமூக விடயங்களிலும் தலையீடு செய்து தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை தங்கள் சுயவருமானங்களுக்காக சுயபுகழ்ச்சிக்காக பேரம் பேசி வருகின்றனர்.
குருபரன் தலைமையிலான கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகள் யாழ் நூலக எரிப்புடன் தொடர்புடைய, பட்டலந்த சித்திரவதைமுகாமுடன் சிக்குண்ட ரணில் விக்கிரமசிங்கவை தனியாகச் சந்தித்தது பற்றிய செய்தியை கடந்த ஆண்டு தேசம்நெற் வெளிக்கொண்டு வந்திருந்தது. ரணிலைச் சந்தித்த இச்சட்டத்தரணிகள் தங்கள் மீது பொலிஸார் கள்ளக் காணி தொடர்பில் பிரச்சினை எடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டிருந்ததை தேசம்நெற் அன்றே தெரியப்படுத்தி இருந்தது.
தற்போது தமிழ் மக்களின் வறுமையை கேவலப்படுத்தி விடியோக்கள் போட்டு விழிப்பு நிலையில் உள்ள பெண்களை அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து கேவலப்படுத்தும் காணொலிகளை வெளியிட்ட எஸ் கே கிருஷ்ணாவுக்கு ஆதரவாக சட்டத்தரணி குரபரனும் களமிறங்கி இருந்தார். ஆனால் இவர்களுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்த பொலிஸ் அதிகாரி ராகவன் எஸ் கெ கிருஷ்ணாவை இரு வாரங்கள் தடுத்து வைக்க போராடி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த தமிழ் தேசியவாதச் சட்டத்தரணிகள் அம்பலமாகி உள்ளனர்.
இந்தக் கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகளில் கிருஷ்ணவேனி பெரும் கில்லாடி. மற்றும் மணிவண்ணன் போன்றவர்களும் சளைத்தவர்களல்ல.
தையிட்டி விகாரையை சட்டவிரோதம்மானது என்று கூவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிச் சட்டத்தரணிகள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அதேசட்சியைச் சேர்ந்த சுகாஸ் போன்றோர் தையிட்டி விகாரை கட்டப்படுவதற்கு எதிராகவோ கட்டப்பட்டதற்கு எதிராகவோ எந்தவொரு வழங்கையும் இற்றைவரை பதிவு செய்யவில்லை.
ஆனால் யாழில் உள்ள போதைப்பொருள், ஆவா கும்பல்கள் மற்றும் வட்டுக்கோட்டை சாதிய வன்முறைக் கும்பல்களுக்காக வாதாடி அவர்களை வெளியே எடுத்து, தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
காலம்சென்ற மாவை சேனாதிராஜாவின் இறுதிநிகழ்வில் இவர்களதும் சிறிதரனதும் அடியாட்குழுக்களே மரணச்சடங்கிற்கு வருபவர்களை மிரட்டி இறுதிநிகழ்வை தங்கள் அரசியல் பிரச்சார மேடையாகப் பயன்படுத்தினர்.
இவர்களுக்கு சளைக்காமல் அண்மையில் வன்முறையில் ஈடுபட்டு பட்டப்பகலில் கை விரலை வெட்டி எடுத்த வன்முறையாளனை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று பொலிசாரிடம் ஒப்படைத்து அவரைக் காப்பாற்றி வெளியே எடுத்துவிட்டவர் சட்டத்தரணி சர்மினி.
இந்தச் சட்டத்தரணிகள் குற்றவாளிகளுக்கு எப்படி சட்டத்துக்குள் மாட்டாமல் வன்முறையில் ஈடுபடுவது போன்றவற்றை கற்றுக்கொடுப்பதாகக் குற்றம்சாட்டுகின்றார். காலம்சென்ற முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர்.
இவர்களோடு தற்போது சமூகத்துக்கு கருத்துச்சொல்ல சில சமூகம் பற்றிய அரிவரிப் புரிதலும் இல்லாத சில சட்டத்தரணிகள் களமிறங்கியுள்ளனர். உலகத்தின் அனைத்துத் தரப்பினராலும் ஒரு பாஸிஸ்ட் என்று அடையாளம் காணப்பட்ட கொலைவெறியனான, இனவெறியனான ஹிட்லரை சட்டத்தரணி வைஷ்ணவி, ஹிட்லர் ஜேர்மன் மக்களுக்காகப் போராடினார் என்று ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கினார். ஆனால் பெரியார் தமிழ் விரோதியாம். அந்தப்புரம் நடத்தும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் படித்து கலைப்பீடாதிக்கு வக்காளத்து வாங்கும் இந்த வங்குரோத்து சட்டத்தரணியிடம் அறிவை எதிர்பார்ப்பது மிகக் கஸ்டம்.
பாலியல் குற்றவாளியை கும்பிடும் பிரேமானந்தாவின் சீடன் சி வி விக்கினேஸ்வரனின் கட்சியில் உள்ள இன்னுமொரு சட்டத்தரணி இராசையா உமாகரன் என்ற சாதிமான். சாதியத்துக்கு எதிராகப் போராடிய பெரியரை கேவலப்படுத்தி, பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஒரு பெண்ணை 7 தடவை கருக்கலைப்புச் செய்வித்த சீமானுக்கு இவர் யாழ்ப்பாணத்தவர்களின் பெயரில் முண்டுகொடுக்கின்றார்.
இந்த குறைவிருத்திச் சட்டத்தரணிகளின் வரிசையில் நேற்று சட்டத்தரணி கௌசல்யா நரேன் தன் பெயரையும் இணைத்துக் கொண்டுள்ளார். பன்றியோடு சேர்ந்த பசுவும் பவ்வி உண்ணும் என்பது போல் அண்ணன் என்ற பெயரில் சுற்றும் பா உ அர்ச்சுனாவோடு சேர்ந்த கௌசல்யாவின் நிலையும் இது தான்.
ஆயிரம் பேரைக் காதலித்த நான் என்று பெருமை கொள்ளும் அர்ச்சுனா வயது குறைவாக இருந்தால் கௌசல்யாவையே திருமணம் செய்வேன் என்று, வாய்கூசாமல் சொல்கின்றார்.
இதன் தொடர்ச்சியாகவே தம்பி தம்பிராஜா போன்ற சமூகப் பிரஞை அற்றவர்கள், கௌசல்யாவை ‘தேவடியாள்’ என்றும் இன்னும் கேவலமாகவும் பல பதிவுகளை இட்டு வருகின்றார். தம்பி தம்பிராஜா இவ்வாறு எழுதுவது மிகக் கீழ்த்தரமான செயல். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் பாதிக்கப்பட்ட கௌசல்யா நரேன், இந்த ஆண் தமிழ் தலிபான்களான பா உ அர்ச்சுனா, ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வம்பன்டொட்கொம், எஸ் கெ கிருஷ்ணா போன்றவர்களோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களான சாளினிக்கும், ஊடகவியலாளரான சங்கவிக்கும் விபச்சாரப் பட்டம் கட்டுகின்றார்.
ஒரு சட்டத்தரணியாக இருந்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தை அணுகும்படி சொல்லாமல் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதை ஆதரிக்கின்றார். தம்பி தம்பிராஜா கௌசல்யாவை ‘தேவடியாள்’ எனக்கு குறிப்பிடுவது எவ்வளவு மோசமானதோ அதேயளவு மோசமானது, அண்ணாவும் தங்காவும் – அர்ச்சுனாவும் கௌசல்யாவும் சேர்ந்து சாளினியையும் சங்கவியையும் விபச்சாரிகள் என்று முத்திரை குத்துவது.
இந்தக் குறைவிருத்திச் சட்டத்தரணிகள் எந்த முதலீடும் இல்லாமல் மக்களைச் சுரண்டிப் பணம் பார்ப்பதை பொறுத்தக்கொள்ளலாம் ஆனால் அடிப்படைச் சமூக அக்கறையற்ற சமூக விழுமியங்களைப் புரிந்துகொள்ளாத இந்தக் கூட்டம் சமூகத்துக்கு கருத்துச் சொல்ல முற்படுவதை அனுமதிக்க முடியாது. இவர்கள் அடுத்த தலைமுறையையும் தங்களைப் போன்ற குறைவிருத்தி உடையவர்களாக்கி விடுவார்கள். ஆனால் தமிழ் மக்கள் மிக விழிப்பானவர்கள். இந்தக் குறைவிருத்தியாளர்களை விரைவிலேயே அடையாளம் கண்டு கொள்கின்றனர்.