கிளீன் ஶ்ரீலங்கா

கிளீன் ஶ்ரீலங்கா

வடக்கை கைவிடமாட்டோம் ! திறமையுள்ளவர்களுக்கும் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும் வேலை வரும் ! ஜனாதிபதி அனுரகுமார

வடக்கை கைவிடமாட்டோம் ! திறமையுள்ளவர்களுக்கும் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும் வேலை வரும் ! ஜனாதிபதி அனுரகுமார

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கிளீன் ஶ்ரீலங்கா , கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க உடன்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கல்வி, எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வடக்கு அபிவிருத்தி ஆகியவற்றில் புதிய திட்டங்களுக்கு உதவி வழங்குவது குறித்து இதன் போது கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய அபவிருத்தி திட்டங்களில் வடக்கின் அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை நிறுவ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் வடக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், நீர் வசதிகளை வழங்கவும், வடக்கு மக்களின் சமூகப் பிரச்சினைகளுக்கு கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார தெரிவித்தார்.