உக்ரைன் படைகள் பின்வாங்குகின்றன: ரஸ்யாவுக்கு சீனா ஆயுத விநியோகம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு !

கடந்த மார்ச் மாதம் முதல் ரஸ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. அமெரிக்கா உக்ரைன் யுத்தத்திலிருந்து தள்ளியே நிற்கின்றது. உக்ரைனுக்கு ஆயுதங்களோ புலனாய்வுத் தகவல்களோ வழங்கப்படவில்லை. அதனால் உக்ரைன் படைகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. அதனால் உக்ரைன் தனது நிலப்பிரதேசங்களை வேகமாக இழந்து வருகின்றது. ரஸ்யா திட்டமிட்டது போல் உக்ரைனில் ரஸ்யர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை விரைவில் கைப்பற்றிவிடும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. உக்ரைன் படைகள் தாக்குதலின் உக்கிரத்தால் சரணடைவதாகவும் உறுத்திபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி வருவதாகவும், சீன அரசின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தகவல்களுக்கு ஆதாரங்கள் உண்டு என்றும், அதனை எதிர்வரும் நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ரஷ்யாவிற்கு ஐஎஸ்காண்டர் ஏவுகணைகளை தயாரிக்கின்றதாக கூறப்படும் மூன்று சீன நிறுவனங்களுக்கு உக்ரைன் தடைகளை அறிவித்துள்ளது.

ஆனால், ஜெலென்ஸ்கியின் குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் நிராகரித்துள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும் எனவும், சீனாவின் நிலைப்பாடு தெளிவானது எனவும் சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான் கூறினார். மேலும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், சமாதான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும் சீனா முயற்சித்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.