உண்மையான கள்ளன் – பொலிஸ் விளையாட்டு !
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்தையும், செவ்வந்தியையும் காடு மேடெல்லாம் தேடியும் இலங்கை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகமவில் உள்ள பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பாக தேசபந்து தென்னக்கோன் தேடப்பட்டு வருகின்றார். தலைமறைவாகியுள்ள தென்னக்கோனுக்கு நீதிமன்றம் பயணத் தடை விதித்திருக்கின்றது. மேலும் இதுவரை ஐந்து வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் தேசபந்து தென்னகோனை பொலாஸார் இன்னுமும் தேடி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியை சுட்டுக் கொன்ற கொலையாளிக்கு உதவிய சந்தேக நபரான பெண் இஷாரா செவ்வந்தியையும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகியும் பொலிஸார் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
செவ்வந்தியின் இருப்பிடம் பற்றிய தகவல் வழங்குவோருக்கு பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து 12 இலட்சம் ரூபா பரிசாக வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரிய தீர்மானித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
