இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சாமர சம்பத் தசநாயக்காவை காக்க களத்தில் ரணில் !
ஊவா மாகண சபையின் முதலமைச்சர், மாகாணசபை அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு நிதியை முறைகேடாக எடுத்து, அரசாங்கத்திற்கு 17.3 மில்லியன் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் உள்ளார். இந்த விடயத்தில் மூக்கை நுழைத்த ரணில், தான் பிரதமராக இருந்த காலத்திலேயே ஜனாதிபதியாக இருந்த மைத்திரியின் சம்மதத்துடன், அப்பணத்தை எடுத்தாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு சாமர குற்றமற்றவர் கூறுகிறார்.
இந்தவிடயத்தில் விரைந்து செயற்பட்ட, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவை கடந்த 17 ஆம் திகதி நேரில் ஆஜராகி அறிக்கை வழங்கும்படி உத்தரவிட்டது. குறிப்பிட்ட நாளில் சமூகம் தர முடியாது என தெரிவித்த ரணிலுக்கு புதிய திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.
இதேசமயம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை முன்னிலையானார்.
