இலங்கை பெண்ணடிமைத்தனம்

இலங்கை பெண்ணடிமைத்தனம்

ஊடகவியலாளரான திருமணமான குடும்பப்பெண் மீது பாலியல் வக்கிரம் கொள்ளும் தமிழ் தலிபான்கள்:

ஊடகவியலாளரான திருமணமான குடும்பப்பெண் மீது பாலியல் வக்கிரம் கொள்ளும் தமிழ் தலிபான்கள்:

ஊழல் ஒழிப்பு அணி வன்னி உட்பட்ட தமிழ் தலபான்களால் விபச்சாரம் செய்வதாக குற்றம் சுமத்தப்படும் பெண் ஊடகவியலாளர் சங்கவி பற்றியதாகும். சங்கவி தி ஐகன் (Shangavi The ICON) எனும் செய்திகள் வழங்கும் யுரீயூப் சனல் நடத்தி வருகிறார். அவர் தொடர்பில் ஊழல் ஒழிப்பு அணி வன்னி வெளியிட்டுள்ள காணொளி மற்றும் பதிவுகள் அனைத்தும் கண்டிக்கப்பட வேண்டியவை. சங்கவி ஒரு ஆணுடன் பாடல் காட்சி ஒன்றில் தோன்றும் ஒரு சிறிய றீல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அந்தக் காணொளியில் விபச்சாரம் செய்வதாக எந்த தடயங்களும் இல்லை. அதை விட சங்கவி யார் யாரோடெல்லாம் படுக்கையை பகிர்ந்து, அதற்காக பணம் வாங்கியுள்ளார் என ஒரு நீண்ட பட்டியலோடு ஒரு பதிவை ஊழல் ஒழிப்பு அணி வன்னி வெளியிட்டுள்ளது. அதிலும் முக்கியமாக ஊடகவியலாளர் சங்கவியின் ஆபாச காணொளிகள் தங்களிடம் இருப்பதாகவும் ஒரு அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பதிவுக்கு பதில் அளித்து சங்கவி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில் அவர் கேட்டுக் கொண்டபடியே ஊழல் ஒழிப்பு அணி வன்னி ஏன் சங்கவியிடம் பணம் செலுத்தி பாலியல் சேவை பெற்றதாக கூறும் ஆண்களின் விபரங்களையும் படங்களுடன் வெளிப்படுத்தவில்லை.

தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்தவர்களை கூட உயிரோடு கொண்டு வர முடியும். அப்படியிருக்க சங்கவியின் ஆபாச காணொளி என கூறப்படும் காணொளி எவ்வளவு தூரம் உண்மையானது என்பதும் கேள்விக்குறியே.

எப்படியாயினும் காணொளியை வெளியிட்டால் சைபர் கிரைம் பொலிஸார் அதனை விசாரித்து முடிவு எடுப்பார்கள். சங்கவியும் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க. எம்பி அர்ச்சுனா இராமநாதன் இந்த விடயத்திலும் தனது முந்திரிக் கொட்டைத்தனத்தை காட்டி பிரபல்யம் தேடிக் கொண்டுள்ளார். அவர் தனது முகநூலில் ஊடகவியலாளர் சங்கவி தொடர்பான அவதூறு பதிவை பகிர்ந்துள்ளார். இந்த விடயம் தொடர்பிலும் சங்கவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மூச்சுக்கு மூண்ணூறு தரம் தனது தங்கை என கௌசல்யா நரேந்திரனுக்கு வக்காலத்து வாங்கும் எம்பி அர்ச்சுனா தனக்காகவும் குரல் கொடுக்க வேண்டும் என்று சங்கவி வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னைப் போலவே அவதூறுகள் மற்றும் வசைப்பாடுகளை எதிர்கொள்ளும் சட்டத்தரணி கௌசல்யாவிடமும் சங்கவி கோரிக்கை வைத்துள்ளார். தனக்கு நியாயம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

வழமை போலவே சங்கவியின் காணொளிக்கு நேரலையில் வந்து எம்பி அர்ச்சுனா அநாகரீகமான முறையில் பதிலளித்துள்ளார். கௌசல்யாவுக்கும் சங்கவிக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம், சங்கவி தான் ஆபாசப்படத்தில் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால் தான் சங்கவிக்கு பாராளுமன்றம் வரை சென்று குரல் கொடுப்பதாகவும் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கல்வியறிவு, அந்தஸ்து மற்றும் அனுபவம் பற்றி எல்லாம் சம்பந்தமில்லாமல் சிலாகித்துப் பேசுகிறார். அதேமாதிரி கௌசல்யாவின் சட்டத்தரணி தகுதியை சங்கவியின் கல்வித் தகமையோடு ஒப்பீடு செய்து தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கின்றார்.

அவருடைய உயர்வுச் சிக்கல் பிரச்சினையை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகின்றார் ஆயிரம் பேரைக்காதலித்ததாக பீற்றிக்கொள்ளும் அர்ச்சுனா. அர்ச்சுனாவுடைய முன்னாள்கள் மீது அல்லது தங்கைகள் மீது விபச்சாரக்குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டால் அவர்களுடைய கணவனமார் சமூகவலைத்தளத்தில் வந்து அப்பெண்களுக்கு நற்சான்றிதழ் வழங்குவது தானாம் அதற்குத் தீர்வு என்கிறார் அர்ச்சுனாவின் அடியான்.

கௌசல்யாவின் கல்வித் தகமையையோ அல்லது தொழில்த்திறனையோ எப்படி எவரும் குறைத்து மதிப்பிட முடியாதோ அதேமாதிரி தான் சங்கவியினுடைய தொழில்த்திறமையும் அவருடைய கல்வித் தகமையும். சங்கவியும் தான் பயணிக்கும் துறையில் சிறந்த நிலையில் இருக்கிறார். நீண்டகாலமாக ஊடகத் துறையில் பணியாற்றுபவர்கள் கூட இலகுவாக அடைய முடியாத சந்தாதாரர்களை அவர் சம்பாதித்து வைத்துள்ளார். சங்கவியின் யுரீயூப் சனலுக்கு ஒரு இலட்சத்தி தொண்ணூறாயிரம் சப்கிறைபர்ஸ் உள்ளார்கள். செய்தி ஊடகத்துறையில் தனியான ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். அவருடைய காணொளிகளை குறைந்தபட்டசமாக 5000 க்கும் மேற்பட்டோர் நாளாந்தம் பார்வையிடுகிறார்கள். கௌசல்யாவும் சரி சங்கவியும் சரி அவரவர் துறையில் திறமையாகவே செயற்படுகின்றனர்.

ஆகவே கௌசல்யா மற்றும் சங்கவி இருவரையும் ஒப்பிட்டு எம்பி அர்ச்சுனா ஒருவரை உயர்த்தி ஒருவரை தாழ்த்துவது கண்டிக்கப்பட வேண்டியது.

ஊடகவியலாளர் சங்கவி தனது கணவனுடன் இருக்கும் காணொளியை வெளியிட்டு முகநூலில் அவதூறு பரப்பும் ஊழல் ஒழிப்பு அணி வன்னி மற்றும் அச்செய்தியை பகிர்வோர் என அனைவரும் கண்டிக்கப்பட வேண்டும். இந்த இடத்தில் தான் எம்பி அர்ச்சுனாவின் ஜால்ரா தமிழ் அடியான் என்கிற யுரீயூப்பரின் பத்தாம்பசலித்தனமான பதிவு ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் அடியான் பிரித்தானியாவில் வாழ்வதாக கூறப்படுகிறது. அவர் ஊடகவியலாளர் சங்கவி விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமானால் , சங்கவியின் கணவர் பொதுவெளிக்கு வந்து சங்கவிக்கு நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என ஆலோசனை கொடுக்கிறார்.

தமிழ் அடியான் போன்ற பால்நிலைச் சமத்துவம் மற்றும் சுய கௌரவம் என்றால் என்னவென்றே தெரியாத ஆண்களால் தான் பெண்கள் வன்முறைக்குள்ளாகிறார்கள். பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் வன்முறைகளே வீட்டில் தான் நிகழ்கின்றன. வீட்டு வன்முறைகளில் முக்கிய குற்றவாளிகளே கணவன்மார் மற்றும் ஆண் நண்பர்களே. ஒரு பெண்ணுக்கு கணவன் தான் பாதுகாப்பு எனக் கூறி தனது அறியாமையை தமிழ் அடியான் வெளிப்படுத்தி நிற்கின்றார். இப்படிப்பட்டவர்கள் தங்களை ஊடகவியலாளர்கள் என நினைத்துக் கொண்டு உளறுவதை பெண்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள்.

பெண்கள் மீதான அடக்குமுறையின் உச்ச கட்டம் அவர்களுடைய நற்பெயருக்கு களங்கத்தை (Character Assassination) ஏற்படுத்துதல் ஆகும். இது காலங்காலமாக நடந்து வரும் ஒடுக்குமுறை. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இப்போது புதிய வடிவம் எடுத்துள்ளது. நிஜ உலகில் ( real world ) வன்முறையை எதிர்கொண்ட பெண்கள். தற்போது நிழல் உலகில் ( virtual world ) அதைவிட மோசமான வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். வலைத்தளங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பெண்கள் மீதான வன்முறைகளை துணிந்து முனைப்போடு ஈடுபடுகிறார்கள். இவ்வாறான ஒரு செயற்பாடே ஊழல் ஒழிப்பு வன்னி அணி போன்ற வலைத்தளங்கள் இயங்குகின்றன. இதற்கு அர்ச்சுனா போன்றவர்கள் வலுச்சேர்க்கின்றனர். இந்த புதிய போக்கை எதிர் கொள்ள தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உண்மையான பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.

“ஊழல் ஒழிப்பு அணி வன்னி “ என்ற முகநூல் மற்றும் அந்த முகநூலைத் தொடரும் பல ஆயிரம் பேரும் கூறும் செய்தி பெண்ணடிமைத்தனம் புதிய வடிவம் எடுத்துள்ளது என்பதாகும். அத்துடன்

யாழ்ப்பாண வெள்ளாள மேலாதிக்கம் மற்றும் ஆணாதிக்க தமிழ்ச் சமூகம் ஒன்று மீண்டும் யுத்தத்திற்குப் பின் மேலெழுந்துள்ளது. இந்தப் போக்கு மிக ஆபத்தானது. தமிழ்ச் சமூகத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களின் நிலை மிகப் பிற்போக்குத்தனங்களால் நிரம்பியுள்ளது. பெண்கள் ஆண்களின் உடமைகளாகவும், கவர்ச்சிப் பாவைகளாகவும் , அடிமைகளாகவும் ஆக்கப்பட்டு வருகின்றனர்.

உலகமயமாக்கம், பால் இனச் சமத்துவம், புலப்பெயர்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என உலகம் பல வகைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. காலச் சூழ்நிலைக்கு ஏற்ப ஈழத்துப் பெண்களும் தங்களை தகவமைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். சர்மினியும் சரி சங்கவியும் சரி பொதுவெளியில் அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் உறுதியாக வைக்க வேண்டும். சர்மினி விளங்கிக் கொள்ள வேண்டியது, பெண்கள் மீது நன்மதிப்பற்றவர்களே கேவலமான கேள்விகளை கேட்பார்கள். அதற்கு அவர்கள் பாணியில் பதில் அளித்தல் தற்துணிவு தான் . ஆனால் அது பாலியல் வக்கிரங் கொண்ட ஆண்களுக்கு இலவசமாக கிடைக்கும் வடிகால் ஆகிவிடும். சர்மினி உங்களுடைய துடுக்குத் தனத்தில் ஒரு துணிவு உண்டு. அதனை காத்திரமான செயற்பாடுகளுக்கு பயன்படுத்தவும்.

சங்கவி நீங்கள் தைரியசாலி. உங்கள் கணவர் மற்றும் உறவினர்கள் பின்னால் ஒளிந்து கொள்ளத் தேவையில்லை. நீங்கள் யாருக்கும் உங்களை நிரூபிக்க தேவையில்லை. உங்கள் பணி தொடரட்டும்.

ஒரு பெண் நாட்டின் பிரதமராக இருக்கும் பாராளுமன்றத்தில் தான் வரலாற்றிலேயே இல்லாத மாதிரி இன்னுமொரு பெண் மீது விபச்சாரம் செய்கிறார், நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்பிபி அரசாங்கத்தின் பொறுப்பு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகும்