29 சதவீத பாடசாலை மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் !
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீத பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 நடைபெற்ற இந்த ஆய்வுகளின் படி, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.7 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை அருந்துவதுடன் இவர்களில் பெரும்பாலானோர் ஆண் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆண், பெண் மற்றும் வயதுக்கமைய ஒரு சிகரெட் அல்லது இரண்டு சிகரெட்டுக்களை பயன்படுத்திய அல்லது பயன்படுத்த முயற்சித்த மாணவர்களின் எண்ணிக்கை 12.8 வீதமாக பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் விகிதம் கணிசமானளவு அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.