இலங்கை தேர்தல் ஆணைக்குழு

இலங்கை தேர்தல் ஆணைக்குழு

மாகாண சபை தேர்தல்கள் குறித்து சகல கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு 

மாகாண சபை தேர்தல்கள் குறித்து சகல கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு

“மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அண்மைய தேர்தல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், “உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம். தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களில் கலப்புத் தேர்தல் முறைமை குறித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் உண்டு” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்

இலங்கை பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் தினசரி முறைப்பாடுகள் – 400 ஐ கடந்த முறைப்பாடுகள்!

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்றும் வன்முறை தொடர்பான முறைப்பாடுகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெற்ற 401 முறைப்பாடுகளில் 309 முறைப்பாடுகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் தரமற்ற போலியான தகவல்கள் – ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

பொதுத் தேர்தல் தொடர்பாக சமூக ஊடகங்களில் தரமற்ற அல்லது போலியான ஆய்வு அறிக்கைகள், கருத்துக் கணிப்புகள் போன்ற தகவல்களை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி அல்லது வேட்பாளர்கள் முறைகேடாக பதவி உயர்வு அல்லது பாரபட்சம் காட்டினால், அந்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நபர் ஒருவர் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினர் தலைவர் ஆர்.எம்.எல்.கே.ரத்நாயக்கவிடம் வினவியபோது, ​​

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேர்தல் சட்டத்தை மீறியமை கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேர்தல் ஆணையத்தில் தனிப் பிரிவு நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் கண்காணிப்பு குழுக்களும் தகவல்களை வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடக ஒழுங்குமுறை குழு செயற்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள், விசேடமாக டிக்டொக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை தொடர்பில் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை விளம்பரப்படுத்த அல்லது பாரபட்சம் காட்டுவதற்காக, அரச ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட சமூக ஊடக கணக்கு அல்லது வேறு ஏதேனும் கணக்கை பயன்படுத்துவதும் தேர்தல் சட்டத்தை மீறுவதாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 பொதுத் தேர்தல் – வேட்பாளர்களின் சொத்து மதிப்புக்களை கோரும் தேர்தல் ஆணைக்குழு !

2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல்செய்யும் அனைத்து வேட்பாளர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் வரையிலான தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

தேசியப்பட்டியல் வேட்பாளர்களும் தமது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்க வேண்டுமென ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

தமது வேட்புமனுக்களுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கையளிக்கத் தவறுகின்றமை தண்டனைக்குரிய குற்றமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.