அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

அர்ச்சுனா: பெண்களின் நிர்வாணத்தில் இருந்து ஹோமோபோபியா வரை !

ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வடக்கு புலனாய்வு, ஊர்க்குருவி, யாழ்ப்பாண புலனாய்வு, மயிர் புலனாய்வு, மட்டை புலனாய்வு மற்றும் மண்ணாங்கட்டி புலனாய்வு என இன்ன பல போலி முகநூல் கணக்குகளில் ஒளிந்திருக்கும் கோழைகளின் கொட்டத்தை என்பிபி அரசாங்கம் உடனடியாக அடக்க வேண்டும். ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை ஆளும் என்பிபி அரசாங்கம் இயற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைத்தளம் ஊடாக பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இப்படியான பதிவுகளை போலி முகநூல் கணக்குகளை இயக்குபவர்கள் ஓரினசேர்க்கையை சட்டபூர்வமாக அங்கீகரித்த நாடுகளிலேயே வாழ்கின்றனர். அவர்களுக்கு துணிவு இருந்தால் தமது முகங்களை காட்டி சொந்த முகநூல் கணக்கில் வந்து பதிவுகளை இட வேண்டும். அப்போது அவர்கள் வாழும் நாடுகளிலேயே அதற்கான வரவேற்பை பெறுவார்கள். கம்பி எண்ணுவார்கள். அது மட்டுமல்ல இவர்களது பிள்ளைகளும் குடும்ப உறுப்பினர்களுமே இவர்களைத் துரத்திவிடுவார்கள்.

ஊழல் ஒழுப்பு அணி வன்னி “ஓரினசேர்க்கை கழுதைகளை அடையாளம் காட்டி கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பதிவையும் ஒரு சிலர் பகிர்ந்தும் ஆதரித்தும் கருத்திட்டும் உள்ளனர். எல்ஜிபிரிகியு (LGBTG) சமூகத்தினரை மிக இழிவாகவும், அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் விடப்பட்டுள்ளது. பகிரங்கமாக இவ்வாறான கொலை அச்சுறுத்தல் விடுவதை இலங்கை அரசாங்கம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.

ஆரம்பத்தில் ஊழலை வெளிப்படுத்துகிறோம் என ஆரம்பித்து பெண்களின் நிர்வாணத்தை வெளியிட்டு கீழ்த்தரமான பிரபல்யம் தேடிய போலி முகநூல் கணக்குகள், இப்போது ஓரினச் சேர்க்கை வெறுப்பாகவும் பரிணமித்துள்ளது. பெண்கள் மீதான கருத்தியல் ரீதியான வன்முறையும் தொடர்கின்றது. இதுவும் யாழ்ப்பாண ஆண் மையவாத கருத்தியலின் நீட்சியாகவே தான் பார்க்க வேண்டியுள்ளது. சமூக ஊடகங்களில் துலங்கும் பெண்களை ஒடுக்கும் முனையும் இந்த போலி முகநூல் கணக்குகளும் அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆண்களும் சீழ்பிடித்த பழமைவாத அழிவுச் சமூகத்தின் எச்சங்களேயாகும்.

மனவக்கிரமும் உளவியல் சிக்கல்களுமுடைய இந்த ஆண்களையும் இவர்களை ஆதரிக்கும் ஒரு சில பெண்களையும் அடையாளங் கண்டு விலக்குவதன் மூலமே ஆரோக்கியமான முற்போக்கான தமிழ்ச் சமூகத்தை வளர்த்தெடுக்கலாம். ஈழத்தமிழர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய இனம். அந்தவகையில் எல்ஜிபிரிகியூ (LGBTG) சமூகத்தினர் சந்தித்து வருகின்ற ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். துணிவோடு வெட்கமின்றி பிற்போக்குத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான ஹோமோபோவியோக் கருத்துக்களை பரப்புவர்களை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை அரசாங்கம் சட்டம் கொண்டு வர வேண்டும். அதன்மூலம் எல்ஜிபிரிகியூ சமூகத்தினரின் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும்.