அமைச்சர் மனுஷ நாணயக்கார

அமைச்சர் மனுஷ நாணயக்கார

புலிப்பயங்கரவாதிகள் கூட போர்க்காலத்தில் பாடசாலைகளை மூடவில்லை ஆனால் இன்று ஆசிரியர் சங்கங்கள் கண்மூடித்தனமாக பாடசாலைகளை மூடுகிறது – அமைச்சர் மனுஷ நாணயக்கார

 

இந்த நாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதிலும், முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்.

 

இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவது வீரமாக கருதுகின்றனர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

 

களுத்துறை மாவட்டத்துக்கான ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (18) மத்துகம பொது விளையாட்டரங்கில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது .

 

இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர்

 

வடக்கில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்து 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற போதும் பாடசாலைகளை மூட அனுமதிக்கவில்லை. ஆசிரியர்கள் வடிகால்களை வெட்டி பீப்பாய்களுக்குள் வைத்து குழந்தைகளுக்கு கற்பித்தார்கள்.

 

தற்போதைய சூழலில் ஆசிரியர்களாகவும் தெய்வங்களாகவும் கருதப்பட்ட ஆசிரியர்களின் கௌரமும் மரியாதையும் கெட்டுவிட்டது.

 

பாடசாலைக்குச் சென்றிடாத அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்கவின் அரசியல் நலன்களுக்காக கௌரவமான அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் நாட்டில் 10,000 பாடசாலைகளை மூடியதுதான் இவர்களின் செயற்திறமையாகும் .

“இன்று நாங்கள் நிற, கட்சி வேறுபாடின்றி ஒரே அரசில் இணைந்து செயற்படுகின்றோம் அவ்வாறே இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியல் பற்றி சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளனர் – நாட்டையும் வீழ்ந்த நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முழு நாட்டு மக்களும் பாரிய இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் அன்றே அந்தக் கொள்கைகளை மாற்றிய பிறகு, கொரியா மீண்டும் IMF க்கு செல்லாத நாடாக முன் வந்தது.

 

இன்று இலங்கையும் அந்தப் பயணமும் ஆரம்பமாகிவிட்டது. எங்களுக்கு கட்சி அரசியல், இனம், மதம், சாதி, நிறம் எதுவும் வேண்டாம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துக்கு நாடு வந்துள்ளது ஆனால் இன்று இந்த மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தம்மைத் தியாகம் செய்து, சிரேஷ்ட அமைச்சர்கள் தமது அமைச்சுக்களைக் கூட தியாகம் செய்து, நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்த ஒரு பயணமாகும்

 

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பன்னிரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்து வீழ்ந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு பாரிய பங்களிப்பை செய்தார்கள்.

 

இவ்வாறு நாட்டுக்கு பங்களிப்பு செய்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே 100,000 தொழில்முனைவோரை நாம் உருவாக்குவோம்.அதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது அதாவது எமது நாட்டில் முதலீடு செய்ய கொரியா, ஜப்பான், இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து தொழில் முனைவோர் வந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் தமது வீடுகளிலும் பதுங்கு குழிகளிலும் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களும் அதிபர்களும் இருந்தனர் – கிளிநொச்சியில் அமைச்சர் மனுஷ நாணயக்கார!

போராட்டத்தின் மூலம் வேலையை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தினால் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது என வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார் .

 

கொடுப்பனவுக்காக வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட சில தொழிற்சங்கங்கள் தங்கள் உயிரை மாய்த்து போராட்டத்தை கைவிட்டுக்கொண்டனர்

 

‘தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடளாவிய நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஜயகமு ஸ்ரீலங்கா’ கிளிநொச்சி மாவட்ட மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி இந்து கல்லூரி மைதானத்தில் நேற்று (12) நடைபெற்றது இங்கு கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

வடக்கில் யுத்தம் இடம்பெற்ற போதிலும், ஆசிரியர்களும் அதிபர்களும் இங்கு பதுங்கு குழிகளில் பணிபுரிந்தனர்.அதே வேளையில் இன்று தெற்கில் உள்ள ஆசிரியர்களும் அதிபர்களும் ஒரு அரசியல் குழுவின் தேவைக்காக எனது சொந்த பிள்ளைகளின் பாடசாலைக்கல்வினை சீர்குலைத்துள்ளனர்.

ஆகவே இன்னொரு வேலைநிறுத்தத்தால் பிள்ளைகளின் கல்வி தடைபடல், மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படல், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டால், அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் வீதியில் இறங்கினால், என்ன முடிவு எட்டப்படும் என்பதை யாராலும் எதிர்வு கூற முடியாதுள்ளது.

இன்று சமூக வலைதளங்களில் போராட்டக்காரர்களின் நிலையயைப் பார்க்கும் போது தெரிகின்றது மக்கள் எந்தளவு இவர்கள் மீது வெறுப்புக்கொண்டுள்ளனர் என்பதை எனவே இப்போராட்டக்காரர்களிடம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் உள்ள சிவில் அமைப்புகளை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1984 ஆம் ஆண்டு கிளிநொச்சி தனியான நிர்வாக மாவட்டமாக பிரிக்கப்பட்ட போதிலும்,தொடர்ந்தும் இங்கு யுத்தம் நடைபெற்றதால் தனி மாவட்டமாக அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பை இழந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான தலைமையகம் அமைந்திருந்த பிரதேசமாக இந்த மாகாணம் பல பாரிய பின்னடைவுகளை சந்தித்தது ஆனாலும் இலங்கையில் கிளிநொச்சி கனிமவளங்களுக்கு ஏற்ற பிரதேசமாகும். இங்கு சிவப்பு-மஞ்சள் கலப்பு நிறங்களைக்கொண்ட “லாடோசோல்” எனும் மண்ணில் அலுமினியம், சிலிக்கன் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

எனவே நாம் இந்த மண்ணிலிருந்துமுன்னேற வேண்டும், மாறாக சிங்களவர், தமிழர், முஸ்லீம் என பிரிந்துவிடாமல் இலங்கையராக அப்போதுதான் இந்த நாட்டை முன்னேற்ற முடியும். என அமைச்சர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் இராணுவ சேவைக்காக இலங்கை இளைஞர்களை அனுப்பும் வியாபாரம் – எச்சரிக்கிறார் அமைச்சர் மனுஷ நாணயக்கார !

ஆட்கடத்தல்காரர்கள் சிலர் இணைந்து ரஷ்யாவின் இராணுவ சேவைக்காக இலங்கை இளைஞர்களை அனுப்பும் வியாபாரம் இந்த நாட்களில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வியாபாரத்தில் யாரும் சிக்கிக்கொள்ள வேண்டாம் எனத் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சுற்றுலா வீசா ஊடாக ரஷ்யா இராணுவ சேவையில் இணைந்துகொண்டு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள சில குடும்பத்தினர் வியாழக்கிழமை (9) அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்குத் தொடர்ந்து தெரிவிக்கையில்.

ரஷ்யா இராணுவத்தில் உயர் சம்பளத்துடன் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இதற்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். என்றாலும் அவர்கள் வென்கர் கூலிப்படையில் சேவைக்காகச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் அங்கு முன்னணி பாதுகாப்பு வலயத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் அவர்களுக்கு பல மாதங்களாக அவர்களுக்குரிய சம்பளமும் வழங்காமல் இருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்த நபரையும் யுத்த சேவைக்காக வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதில்லை. அதேபோன்று சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என எந்தளவு அறிவுறுத்தல் மேற்கொண்டாலும் இவ்வாறு தொழிலுக்குச் சென்று பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.

ஆட்கடத்தல் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டத்தின் பிரகாரம் பணியகத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த முறைப்பாடுகள் குற்ற விசாரணை திணைக்களத்தினாலேயே விசாரிக்கப்படுகின்றன. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் சுற்றுலா விசா ஊடாக தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என  இலங்கை மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார

ரணில் விக்கிரமசிங்க அரசியலில் நீண்டகாலம்  இருந்த போதிலும் ஜனாதிபதியாக முதற்தடவையாக பதவியேற்றுள்ளார். இந்த முதற் சந்தர்ப்பத்திலே வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்று பாராமல் சகலருக்கும் சமனாக சேவை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக் காட்டினார்.

மன்னாரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது ஜனாதிபதி பதவி இது என்பதை மறந்து விடாதீர்கள். 2015 ஆம் ஆண்டில் தமிழில் தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் அனைவருக்கும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கொள்கைகளை செயல்படுத்துவது போன்ற முயற்சிகளில், தேசத்தை உயர்த்துவதற்கான ஒரு பார்வை அவருக்கு உள்ளது.

“குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரிசி விநியோகம் நாடு தழுவிய ரீதியில்  நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் இலக்கு காலவரையின்றி மானியங்களை நம்பியிருக்கவில்லை. மாறாக, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, குடும்பங்களை மேம்படுத்துவது மற்றும் தன்னிறைவை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளார்” என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

மன்னாரின் அபிவிருத்தி தொடர்பில், மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கும், இந்தியாவுடனான படகு சேவையை புத்துயிர் பெறுவதற்கும் ஜனாதிபதியின் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் அதிகமாக மன்னார் மாவட்டத்தில்  சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. உள்ளூர்வாசிகளின் வருமானத்தை அதிகரிக்க ராமர் பாலம் போன்ற இடங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

வட மாகாணத்தின் போருக்குப் பின்னரான போராட்டங்களை அங்கீகரித்த அமைச்சர், முன்னேற்றத்திற்கான அடித்தளக் கூறுகளாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, நாடு முழுவதும் சமத்துவமான அபிவிருத்திக்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றார் என தெரிவித்தார்.

அன்று 60000 இளைஞர்களின் உயிரை பறித்த ஜே.வி.பி இன்றும் இளைஞர்களை அழித்துக் கொண்டு இருக்கின்றது – அமைச்சர் மனுஷ நாணயக்கார

நாட்டைக் காப்பாற்ற வருவோம் என்று தம்பட்டம் அடித்தவர்கள் அன்று 60,000 இளைஞர்களின் உயிர்களை பறித்தவர்கள். ஆனால் இன்று இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம் அன்று செய்த தீங்குகளை மக்கள் விடுதலை முன்னணி இன்றும் செய்துவருகிறது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

 

உமண்தாவ பௌத்த உலகளாவிய கிராமத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளுக்காகத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான முதலாவது வதிவிட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .

 

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

 

இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் மூல்ம் இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை செய்பவர்களுக்கு விரிவான பயிற்சி மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவால்களை எதிர்கொண்டு தமது பணிகளை வெற்றிகரமாகச் செய்வதற்கும் நாட்டிற்கு மீள வந்த பின்னர் தொழில்முனைவோராக வெற்றிபெறுவதற்குத் தேவையான பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்.

 

எங்களின் முதன்மை நோக்கம் விவசாய தொழில் மற்றும் நிர்மாணத்துறை பயிற்சி அளிப்பதன் மூலம் வாழ்க்கையை கற்பிப்பதாகும். நாட்டில் விவசாயத் தொழிலுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் நீங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் எதுவும் இல்லை. மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே இடம் உமண்தாவ என்று முடிவு செய்தோம். தேவையான ஒழுக்கமான சூழலும் மனவலிமையை அளிக்கக்கூடிய சூழல் இங்கு உள்ளது.

 

விவசாயத் தொழில் எப்படி நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இங்கு அனுபவபூர்வமாக காண முடிகிறது. பரந்து விரிந்த அறிவை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்புகிறோம். இவர்கள் வெளிநாடு சென்று திரும்பி வர வேண்டிய சூழலை உருவாக்க விரும்புகிறோம், பணத்தைப் மாத்திரம் தேட வல்ல , தோல்வியடையாது வாழ்க்கையை வெல்லும் குழுவாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறோம்.

இதுவே சமூக முன்னேற்றத்தின் ஆரம்பம். இந்த நாட்டை தொழிலதிபர்கள், இந்த மண்ணை நேசிக்கும் மக்கள் நிறைந்த நாடாக மாற்றும் வேலைத்திட்டத்தின் அழகுதான் இன்று இங்கு நடக்கிறது.

 

இந்த நாட்டில் இளைஞர்கள் மற்றும் கல்வி தொடர்பில் பாரிய பிரச்சினை உள்ளது. ஆனால் நாட்டில் கல்வி சிந்திக்கக்கூடியவர்களை உருவாக்கவில்லை. நமது கல்வி சிந்திக்க முடியாத சிலரை உருவாக்குகிறது, பின்னர் உயர்கல்வி மனப்பாடம் செய்யும் ஒரு குழுவை உருவாக்குகிறது.

 

மேலும், கற்பனையே இல்லாமல் வெறும் மிதக்கும் ஒரு சிலரை ஊடகங்கள் உருவாக்கும் போது, நம்மால் முடிந்தவரை மக்களை மாற்ற முயல்கிறோம். அதற்கிணங்க இந்த நாட்டை மாற்றியமைத்து கட்டியெழுப்பி ஒரு தேசமாக நாம் வெற்றிப் பயணத்தை ஆரம்பிக்கின்றோம்.

 

நாட்டுத் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படும் இவ்வேளை இதனை தேசியப் பொறுப்பாக கருதுகிறோம். அண்மைக் காலத்தில், 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுத் தொழிலாளிகளால் அந்நிய செலாவணியாக நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது.

 

நாட்டுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் மற்றொரு குழு வெளிநாட்டு தொழிலாளர்ககளிடம் நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியது. ஆனால் நாம் நாட்டின் நிலைமையை மாற்றியுள்ளோம் என்றார்.

“என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது.“ – அதிர்வலைகளைஏற்படுத்தியுள்ள சனல் – 4 வீடியோவில் TMVP முன்னாள் ஊடகப்பேச்சாளர் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் -4 காணொளி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(05) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அதற்கான தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களின் விபரங்கள் குறித்து சனல் 4 என்ற ஊடகம் காணொளியை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்த சனல் 4 ஊடகத்தின் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவிக்குழு ஒன்றை நிறுவுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பல அதிர்ச்சித் தகவல்களை பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளவிடயங்கள்.,

“ என்னால் இந்த பாவத்தை என் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்ல முடியாது. நான் உண்மையை சொல்ல வேண்டும்.” என பிரித்தானியாவின் சனல் – 4 இல் இன்று வெளியாகியுள்ள முன்னோட்ட காணொளியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதலில் சாதாரண பொதுமக்களே ஆலயங்களிலும் ஹோட்டல்களிலும் கொன்று குவிக்கப்பட்டனர்.

இவர்கள் கொல்லப்பட்டமை ஆட்சியை கைப்பற்றுவதற்காகவா என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அரசியலில் மிகவும் விசுவாசமாக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் ஆசாத் மௌலானா அரசியலில் ஈடுபட்டுவந்தவர்.

என்னிடம் ஆபத்தான கைதிகள் உள்ளனர், அவர்கள் கடும்போக்கானவர்கள். அவர்களில் ஒருவரை சந்திக்குமாறு பிள்ளையான் தன்னிடம் தெரிவித்ததாக ஆசாத் மௌலானா குறிப்பிடுகின்றார்.

இதையடுத்து இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்த செய்னி மௌலவியை தான் சந்தித்ததாக ஆசாத் மௌலானா கூறுகின்றார். இதையடுத்து இதுவொரு நல்ல சந்தர்ப்பம். நாம் அவர்களை பயன்படுத்துவோம் என பிள்ளையான் எனக்கு கூறினார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிள்ளையான் எனக்கு கூறுகிறார் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு .

இதையடுத்து தான் தேசிய தவ்ஹீத் ஜமாத்தை (NTJ) சேர்ந்தவர்களுக்கும் உளவுத்துறை அதிகாரி சுரேஷ் சாலேக்கும் இடையிலான சந்திப்பை கிழக்கில் ஒரு கைவிடப்பட்ட பகுதியில் ஏற்பாடு செய்ததாக ஆசாத் மௌலானா கூறுகிறார்.

இதன்போதே செய்னி மௌலவி தனது சகோதரனான சஹ்ரானை எனக்கு அறிமுகப்படுத்தினார் எனக் கூறுகிறார் ஆசாத் மௌலானா. அதன் பின் நான் உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலேயை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

குறித்த சந்திப்பு நிறைவடையும் வரை நான் வெளியில் காத்து நின்றேன். சந்திப்பு நிறைவடைந்து வெளியில் வந்த சுரேஷ் சாலே “ ராஜபக்ஷர்களுக்கு இலங்கையில் ஒரு குழப்பமான நிலை தேவையாக உள்ளது. அதுவே கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க ஒருயொரு வழி” என்று கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் யாரெல்லாம் சந்திப்பில் கலந்துகொண்டார்களோ அவர்களின் முகங்களை நான் அடையாளப்படுத்தி படங்களை வெளியிட்டேன் என்கிறார் ஆசாத் மௌலானா.

முதலாவது படம் சஹ்ரான், அவர் தான் அமைப்பின் தலைவரும் தற்கொலைதாரியுமாவார். இதன் பின்னர் நான் பிள்ளையானுடன் கதைத்தேன். அப்போது அவர் “ நீ வாயை மூடிக்கொண்டு எதுவும் தெரியாதது போல் இரு அது போதும்” என்றார்.

அவர்களது மக்களையே ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அவர்கள் கொலைசெய்தார்கள். இதுவொரு கசப்பான உண்மை என்கிறார் ஆசாத் மௌலானா.

பிரித்தானிய தொலைக்காட்சி நிலையத்தில் இன்று (05) ஒளிபரப்பப்பட்ட சனல் 4 டிஸ்பாட்ச்கள் ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் இந்த கருத்துகளை பதிவு செய்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP) ஊடகப் பேச்சாளராக இருந்த ஆசாத் மௌலானா.

இதன் முழுமையான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (5) பிற்பகல் 11 : 05 க்கு வெளியாகவுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், ஹோட்டல்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 269 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது வெளிநாட்டில் புகலிடம் கோரியிருக்கும் ஆசாத் மௌலானா, ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுடன் தகவலை பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, ஆசாத் மௌலானா புகலிடம் பெறுவதற்காக இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த நிலையில், சுரேஷ் சாலேயும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி

“நாம் இனமத ரீதியாக பிரிந்திருந்தது போதும். இனிமேல் நாங்கள் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம்.” – யாழில் மனுச நாணயக்கார !

இனியும் இனமத ரீதியாக பிரிந்து நிற்காமல் அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென அமைச்சர் மனுஷ நாணயக்கார அழைப்பு விடுத்துள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் குளோபல் பெயார் கண்காட்சியை யாழில் இன்று(15) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தேசிய மொழியாக தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இன மத ரீதியான பேதங்களை ஏற்படுத்தி முன்னைய அரசியல்வாதிகள் எங்களை பிளவுபட வைத்தனர். அதனாலேயே இனமத ரீதியாக நாங்கள் பிளவுபட்டிருந்தோம்.

முன்னைய அரசியல்வாதிகளே இனமத ரீதியாக எங்களை பிரித்து பிளவுபட வைத்தனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி அனைவரையும் இனமத ரீதியாக ஒன்றிணைத்து நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.

நாங்கள் இனமத ரீதியாக பிரிந்திருந்தது போதும். இனிமேல் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். குறிப்பாக அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை நாம் நோக்கினால் இனமத பேதம் இல்லாததால் தான் அந்தநாடுகள் இப்படி வளர்ந்துள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எனவே நாமும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டும். நான் சிங்களவர்களின் தேசிய உடையை அணிவதில்லை. ஆங்கிலேயர் உடை தான் அணிவதுண்டு. ஆனால் இங்கு தமிழர்களின் உடை அணிந்து வந்துள்ளேன். இங்கு நான் அணிந்து வந்துள்ள ஆடை புகைபடத்தை எனது மனைவிக்கு அனுப்பிய போது இனிய தமிழ் என்றார்.

அதேபோன்று இங்கு என்னுடன் இருக்கும் பணியாளர் கூட இந்த உடை மிக அழகு என்று என்னிடம் கூறியிருந்தார். நாம் எந்த ஆடை அணிந்தாலும் அழகு என்றால் அதற்கு காரணம் எங்களது மனம் அழகாக இருப்பது தான்” – என்றார்.

“போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” – அமைச்சர் மனுஷ நாணயக்கார

வீட்டுப்பணிப் பெண்கள், தூய்மைப்படுத்தல் தொழிலாளர்கள், கட்டட நிர்மானப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதிக்குள் உள்வாங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்கள் உரிமைகள் , சலுகைகள் என்பன இரத்து செய்யப்படவுள்ளதாக போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்  தெரிவித்தார்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமையவே தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் 80,000 தொழில் நிறுவனங்கள் தமது ஊழியர்களை ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றில் உள்வாங்கியுள்ளன.

எனினும் சட்ட திருத்தங்களின் ஊடாக ஒரேயொரு ஊழியரைக் கொண்டிருந்தாலும், அந்த நிறுவனமும் தமது தொழிலாளியை ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியில் உள்வாங்க வேண்டும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்காகும்.

மாறாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றைக் குறைப்பதோ அல்லது அவற்றை இரத்து செய்வதோ எமது நோக்கமல்ல.

ஓய்வு பெற்றதன் பின்னர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாதத்துக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

தொழிலை பாதுகாப்பதற்கு பதிலாக தொழில் வாய்ப்புக்களை பாதுகாப்பதே எமது இலக்காகும். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் தற்போதும் முறையான காப்புறுதி திட்டங்கள் இல்லை. எனவே அரச உத்தியோகத்தர்களைப் போன்றே தனியார் துறையினருக்கும், மருத்துவம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.

தூய்மைப்படுத்தல் தொழிலில் ஈடுபடுபவர்கள் , கட்டட நிர்மாணப்பணியாளர்கள் , வீட்டுப் பணிப்பெண்கள் என அடிமட்டத்திலிருந்த ஒவ்வொரு தொழிலாளர்களும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி என்பவற்றில் உள்வாங்குவதற்காகவே தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனினும் இவ்வாறான சட்ட திருத்தங்களின் போது தொழிலாளர்களின் சலுகைகள் , உரிமைகள் முடக்கப்படவுள்ளதாக சிலர் போலியான செய்திகளையும் , தகவல்களையும் வெளியிடுகின்றனர்.

அவ்வாறானவர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்குமாறு தொழில் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் போது புலிகள் என கூச்சலிடுவதை ஏற்க முடியாது.” – எம்.ஏ சுமந்திரன்

பிரச்சினைகளை சபையில் எடுத்துரைக்கும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான வேளையின் போது உரையாற்றிய இரா.சாணக்கியன்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுவான்கரை  மற்றும் படுவான்கரை ஆகிய பகுதிகளில் பாலம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு இனவாதி, கிழக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் பாதுகாவலனாக தன்னை நினைத்துக் கொண்டு ஒருதலை பட்சமாக செயற்படுகிறார். தமிழர்கள் வாழும் பகுதிகளில் உட்கட்டமைப்பு தேவைகள் நெருக்கடி நிலையில் காணப்படுகிறது.

தெற்கு மாகாணத்தில் தேவையற்ற வீதி அபிவிருத்திகளும்,பாலம் நிர்மாணிப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்ற.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறையான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுவதில்லை. ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு என்ன என?“ போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

சாணக்கியன் தனது உரையை நிறைவு செய்வதற்கு முன்னர் அவர் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது.

இதற்கு சாணக்கியன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, “உங்களின் கேள்வி ஒழுங்குப்பத்திரத்தில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நீங்கள் சத்தமாக உரையாற்றுவதற்கு நான் அச்சமடைய போவதில்லை.“ என்றார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கு கேள்விக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இதன்போது சாணக்கியன் தொடர்ந்து உரையாட முற்பட்டு, “கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் போது உரிமை மறுக்கப்படுகிறது.“  என்றார்.

இதன்போது உரையாற்றிய மனுஷ நாணக்கார, “புலிகளின் உண்மை முகம் வெளிப்படுகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இவர்கள் தான் தடையாக உள்ளார்கள் என கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனைத்தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், ‘மாவட்டங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து உரையாற்றும் போது புலிகள் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த அமைச்சர் அரசியலில் எவ்வாறு செயற்படுகிறார் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சபையில் உரையாற்றும் வழிமுறையை அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சரவை நோக்கி குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் ஆற்றிய உரையில், புலிகள் என்ற சொற்பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அதனை ஹென்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்கள் !

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பயிற்சி நிலையங்களை நிறுவுதல் மற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டக்கூடிய அதிக தொழில்களை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்துடன் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அந்நாட்டின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்தபோதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

தாதியர் துறையில் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நாட்களின் எண்ணிக்கை மற்றும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அதிகமான தொழிலாளர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, தொழில் தேடுபவர்களுக்கு அந்த பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்க ஜப்பானிய தொழிலாளர் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.