அமைச்சர் ஆனந்த விஜயபால

அமைச்சர் ஆனந்த விஜயபால

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நிகழ்நிலை காப்புச்சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். இச்சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தபோது, நாட்டு மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தேர்தல் காலத்தில் மக்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்துக்கு அமைவாகவே செயற்படுவோம். நிகழ்நிலை காப்புச் சட்டம் வெகுவிரைவில் திருத்தம் செய்யப்படும். இதற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, வெகுஜன ஊடகத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஆகிய அமைச்சுக்களை ஒன்றிணைத்து உப குழு ஒன்றை அமைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை. வழக்குத் தாக்கல் செய்யப்படவுமில்லை. பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை நாங்கள் முழுமையாக பாதுகாப்போம் என்றார்.

பொலிஸ் அரசியல் மயமாக்கலுக்கு முடிவு கட்டப்படும் – பொது பாதுகாப்பு அமைச்சர்

பொலிஸ் அரசியல் மயமாக்கலுக்கு முடிவு கட்டுவதற்கு, இலங்கையின் புதிய பொது பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளதுடன், இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

பொலிஸின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் புதிய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்று (20) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசாங்கங்களின் கீழ் பொலிஸ்துறை அரசியல் மயமாக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை பொலிஸாரை அரசியல் செல்வாக்கிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், இலங்கை பொலிஸார் பக்கச்சார்பற்ற, நியாயமான மற்றும் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் செயற்படுவதை உறுதி செய்வதில் தனது உறுதியான நிலைப்பாட்டை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.