ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மானில் அமைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறி சந்தையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இராச்சியத்தின் புதிய தொழிற்துறை பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்க பல தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஒரு பேரழிவு இடம்பெற்று அது தொடர்பான இழப்புக்கள் முழுமையாக வெளிவராத நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) அஜ்மானில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
