நாட்டின் தென் பகுதியிலுள்ள பெருந்தெருக்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் கொட்டாவ முதல் தொடங்கொட வரையிலான பாதையை விஸ்தரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார். இத்திட்டத்துக்கு 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.