லண்டன் இந்திய தூதரம் முன்னுள்ள நேருவின் உருவச்சிலை சேதம்

indiahouse.jpgலண்டனிலுள்ள இந்திய தூதரகம் முன்னுள்ள ஜவஹர் லால் நேருவினுடைய உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“உருவச்சிலை சேதமாக்கப்பட்டுள்ளது  குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பொலிஸார் கடமையில் இருந்துள்ளனர்” என பிரித்தானியாவிற்கான இந்தியத் தூதுவர் சிவ்சங்கர் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்கொட்லண்ட் யாட் பேச்சாளர்” இக்குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Show More
Leave a Reply to MUKILVANNAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • MUKILVANNAN
    MUKILVANNAN

    IS THAT THE ATTENTION SHOWN TO BRITISH PUBLIC AND BRITSH INDIANS BRING PEACE DEAL,TO THE NEHRU BEHEADED IS DAMAGING AS CRIME.PROTEST IS EXPRESSION OF OUR FEELING, NOT THE MANNER OF HATED.
    THERE OTHER PEOPLE ALLSO CONDEM SRILANKAN VIOLATION ON INNOCENT CIVILIONS AND JONING THE PROTEST,THEREFORE OUR COMMUNITY LEADER MUST STEP IN.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்றுவரை புலியாதவு இணையத்தளங்கள் யாவும் இந்தியக் காங்கிரஸ் கட்சியையும், சோனியா காந்தியையும் கேவலப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு நேருவரை மிகவும் கேவலமாக எழுதுவதையே தமது முதற் கடைமையாக எண்ணிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் நேருவின் சிலையை சேதப்படுத்தவதென்பது நடைபெறக் கூடியதே. ஏற்கனவே பிரான்சிலும் இந்தியத் தூதுவராலயத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டமொன்றில் இந்தியத் தூதுவரின் வாகனத்திற்கு தீ மூட்டிய பெருமை படைத்தவர்கள் நம் இளையோர்.

    Reply
  • Row boy
    Row boy

    We proud of this statue

    Reply
  • இளங்கோ
    இளங்கோ

    பார்த்திபன் நாங்கள் 21ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோம் என்பதை ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு உங்களுக்கு. டொரண்டோ மாநகரில் எம்மக்களால் ஒன்றரை லட்சம் மக்களால் நடாத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தினை எப்படி எமது இளையோர் எவ்வளவு கட்டுக்கோப்பாக நடாத்தினார்கள் என்பதை நாலு பத்திரிகைகளையாவது வாசித்து அறியாமல் கிணத்து தவளையாக உலகுக்கு நேருவின் சிலையை உடைத்தார்கள் தமிழ் மக்கள் என்பது உங்களின் உய்த்தறியும் அறிவை பார்த்து உலகம் சிரிக்க போகிறது. பொய் சொல்லும் போதும் பொருந்த சொல்ல பாருங்கள்.
    தமிழ் மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்க சிங்களவர்களால் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் வரிசையில் இதுவும் ஒரு திட்டமிட்ட மகிந்த அரசின் தாக்குதலாலாக கொள்ளலாம். ஏன் இந்தியா கூட தனது அரசியல் லாபத்துக்காக செய்திருக்க கூடாது?

    Reply
  • Thambiah Sabarutnam
    Thambiah Sabarutnam

    முட்டாள்களின் முட்டாள்தனமான போராட்டம்
    தமிழ் வெறி புலி வெறி கொலை வெறி
    சாமர்த்தியம் சாதுரியம் சாணக்கியம் எதுவும் அறவே கிடையாது

    Reply
  • azan
    azan

    சிலை உடைப்புடன் தொடர்புபடுத்தப்பட்டவர்கள்
    -புலி ஆதரவாளர்கள்
    -சிடபிள்யூஜ ஆதரவாளர்கள்
    -மகிந்த அரசின் தாக்குதல்

    லண்டன் இந்தியத் தூதரகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவின் சிலையின் தலை இலங்கைத் தமிழர்களால் உடைக்கப்பட்டதாக வந்த செய்திகளை தூதரகம் மறுத்துள்ளது. சிலையை யாரும் உடைக்கவி்ல்லை என்றும் அது தானாகவே சரிந்து உடைந்துவிட்டதாகவும் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் சுபாஷினி விளக்கமளித்துள்ளார். சிலையின் மார்புப் பகுதி அதன் அடித்தளப் பகுதியில் இருந்து சரிந்துவிட்டது. இதில் யார் மீதும் எங்களுக்கு சந்தேகமில்லை. இதை யாராவது உடைத்ததாக யாரிடமாவது ஆதாரமிருந்தால் அதை எங்களிடம் தரலாம் என்றார்.

    Reply
  • accu
    accu

    நேருவின் சிலை தானாகவே உடைந்திருக்கலாம் அல்லது இளங்கோ கூறியதுபோல் மகிந்தவோ அல்லது சோனியாவோ திட்டமிட்டு இந்தச் சிலையுடைப்பை நடத்தியிருக்கலாம் ஆனால் இதில் புலிகளின் பங்கு இருக்குமென்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. புலிகள் இப்படியான சின்ன விசயங்களில் ஈடுபடமாட்டார்கள். இப்போ ஒருகதைக்கு நேரு உயிரோடு இருந்து அவரின் தலையை காணவில்லை என்றால் அப்போ நிச்சயமாக எல்லோருக்கும் தெரியும் அது புலிதான் செய்ததென்று. இளங்கோவும் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை கொண்ட நாட்டின் தலைவரை எமது தேசியத் தலைவர் போட்டுத்தள்ளிவிட்டார் என்று பெருமை அடித்துக்கொள்ளலாம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //பார்த்திபன் நாங்கள் 21ம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோம் என்பதை ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு உங்களுக்கு. – இளங்கோ//

    அச்சச்சோ இளங்கோ இப்ப 21ம் நுர்ற்றாண்டா நடக்குது. நான் புலிகள் மக்களை கற்காலத்திகு அழைத்துச் சென்று விட்டதால், புலத்திலும் கற்காலமென்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை நீங்கள் என்னை மீட்டு விட்டீர்கள்.அப்படியே உந்த இளையோர் அமைப்பையும் மீட்டு விடுங்களேன். சிலவேளை நேருவின் சிலையில் காக்கா வந்திருந்திருக்கும். காக்காவின் பாரம் தாங்காமல் சிலையின் தலை உடைந்திருக்கும். அதுபோல் பிரான்சிலும் இந்தியத் தூதுவரின் வாகனம் தானாக தீ பிடித்திருக்கும். இப்படி ஒவ்வொன்றும் தானாக நடக்க நாம தான் புரியாமல் தப்புக் கணக்கு போட்டு விட்டோம். எப்படியும் 4 நாளையிலை வன்னியலை உங்கடை முயற்சியாலே போர் நிறுத்தமும் ஏற்பட்டு தமிழீழமும் கிடைச்சுடும். அப்புறம் என்ன மறந்திடாமல் கொடியேத்தேக்கை எனக்கும் அறிவியுங்கோ.

    Reply