இலங் கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தக் கோரி சென்னையில் திமுக சார்பில் தமிழர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணி, மன்றோ சிலையில் தொடங்கி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணி முடிந்தவுடன் பேசிய கலைஞர்,
இந்த போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் ஒரு வேளை ஏற்படாவிட்டால் ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் என்ன முடிவாக இருக்கும்? அது இங்கே சட்டமன்றத்திலே சில ஆண்டுகளுக்கு முன்பு அம்மையார் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாரே, அந்தத் தீர்மானத்தை போல பிரபாகரனை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வந்து தண்டிப்பதாக இருக்கும்.
இதைத்தான் ஜெயலலிதா, முதல் அமைச்சராக இருந்தபோது தீர்மானமாக முன் மொழிந்து அதை நிறைவேற்றினார்கள். இந்த போரின் முடிவு நமக்கு தோல்வியாக இருந்தால் தமிழர்களுக்கு தோல்வியாக இருந்தால் பிரபாகரன் தலைமையிலே உள்ள அந்த புலிகளுக்கு தோல்வியாக இருந்தால் ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானப்படி இங்கே பிரபாகரனை அழைத்து வந்து தண்டனை கொடுக்க வேண்டும். நான் இப்போதும் கேட்கின்றேன். ராஜபக்சேவுக்கு சொல்கிறேன். சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள்.
இந்திய சரித்திரத்தில் அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, அக்ரோணி கணக்கிலே சைனியங்களையெல்லாம் அழித்து பல நாடுகளை கவர்ந்து பல பூமிகளை தன்னுடைய காலடியிலே போட்டு மிதித்து வந்தபோது போரஸ் மன்னன் எதிர்ப்பை துச்சமாக கருதி போரஸ்’ என்று அழைக்கப்பட்ட புருஷோத்தமனை வென்றபோது பெருந்தன்மையோடு கேட்டான் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று அந்த நிலையிலும் போரஸ் மன்னன், என்னை ஒரு மன்னனைப் போல் நடத்த வேண்டும்” என்று சொன்னான். அவனுடைய பெருந்தன்மைக்கு அலெக்சாண்டரின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக அலெக்சாண்டர், போரஸ் மன்னனின் வீரத்தை பாராட்டி, தனக்கு நிகராக தனக்கு சமமாக ஒரு மன்னனாக உட்கார வைத்தான்.
போரின் முடிவு எப்படியிருந்தாலும் ராஜபக்சே எண்ணுவதைப்போல இருந்தாலும் நான் தமிழ் மக்கள் சார்பாக சொல்லுகிறேன் போரின் முடிவில் பிரபாகரனின் படைக்கு அழிவு ஏற்பட்டாலும் பிரபாகரன் தோல்வியுறுத்தாலும் போரஸ் மன்னனை அலெக்சாண்டர் நடத்தியதைப்போல் நடத்த முன்வருக என்று ராஜபக்சேவுக்கு நான் எங்கள் தமிழர்களின் நலன் கருதி சொல்லி கொள்கிறேன்.
இது தனிப்பட்ட ஒரு பிரபாகரனுக்காக சொல்லப்படுவதல்ல கடந்த காலத்திலே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மத்திய அரசு அண்மையிலே வெளியிட்ட கருத்துக்கள் பிரணாப் முகர்ஜி வெளியிட்ட கருத்தானாலும், குடியரசு தலைவர் வெளியிட்ட கருத்தானாலும், அதைத் தொடர்ந்து சோனியா காந்தி வெளியிட்ட கருத்தானாலும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட கருத்தானாலும் இந்த கருத்துக்கள் எல்லாம் தமிழர்களை தமிழ் மக்களை சம அதிகாரம் கொடுத்து அவர்களுக்கு ஆட்சியிலே சம சுதந்திரம் கொடுத்து அவர்களை நடத்த வேண்டும் என்ற கருத்துத்தான் அந்த கருத்தின் அடிப்படையில் என்ன முடிவானாலும் அந்த முடிவை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு ராஜபக்சே நடந்து கொள்வாரேயானால், சரித்திரம் அவரை மன்னிக்காது.
சரித்திர பள்ளத்தாக்கிலே எங்கோ ஒரு மூலையில்தான் அவர் தள்ளப்படுவார். அதை ஞாபகத்திலே வைத்துக் கொண்டு தமிழன், தன்மானம் உள்ள தமிழனாக தமிழன் தரணி போற்றும் தமிழனாக வாழ தமிழன் சுயமரியாதை உள்ள தமிழனாக வாழ எங்களை அனுமதியுங்கள் என்று வீரசபத முழக்கமிட்டு பேரணியில் கலந்து கொண்ட லட்சோப லட்சம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
thramu
கலைஞர் அவர்களே நீங்கள் ராஜபக்ச விடம் 1000 கோடி பணம் வாங்கியதாயும் அது தமது யுத்த்திற்கு எதிராக செயற்ப்படாமல் இருந்ததிற்டகு சன்மானம்’ என்று இளம் தமிழர் அமைப்பினர் TYO london பிரச்சாரம் செய்கிறார்கள் – உங்கள் காதுகளுக்கு இவை கேட்கிறதா?
murugan
கருணாநிதி ராஜபக்சவை துரோகி என்கிறார் . ஜிரிவி கருணாநிதியை பற்றி போடுகின்ற பாடல் காதுகள் கூசுகின்றன. கருணாநிதி உமக்கு சூடு சுரணை இருக்கிறதா?
பல்லி
அவரை சரித்திரம் மட்டுமே மதிக்காது. ஆனால் உங்களை சரித்திரம் வரலாறு இலக்கியம் கலை பொருளாதாரம் இப்படி எதுவுமே மதிக்க
வாய்ப்பில்லை. பல கணக்கு (அரசியல்) இதில் ஏன் தவறு விட்டீர்கள்?? இருப்பினும் இலக்கியத்தை கொதிக்கவைத்து அதில் வரலாறுகளை ஊறவிட்டு. சிறிதளவு கலையை கலக்கி. எள்ளுபோல சரித்திரம் சேர்த்து முடிவிலே கவிதையை தூவி முடித்தால் சுவயான(புரியாத)அரசியல் மக்களுக்கு கிடைக்கும். என்பது தங்கள் கணக்கு. ஜயா தங்கள் கவிதை வரி ஒன்றையே தங்கள் இன்றய நிலைக்கு பொருந்தும் என பல்லி நினைப்பதால் ….
பதினெட்டை இருபது கூட்டி சென்றால்
அது காதல் கணக்கு.
இருபதை பதினெட்டு இழுத்து சென்றால்
இது கடத்தல் கணக்கு.