ராஜஸ்தானில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது. காலை 7.17 மணயிளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்ஸ்டர் அளவுகோலில் 5.3 என பதிவானதாக அந்த ஆய்வுமையம் தெரிவித்தது.
டில்லிக்கு தென்மேற்கே 650 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுலாத் தலமான ஜெய்சால்மிர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லையில் ஒரு பூகம்பம் தாக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற இந்த பூகம்பத்ததால் பல வீடுகள் சேதமடைந்ததுடன், இருவர் பலியாகியும் உள்ளனர்.