முப்பது வருடகாலமாக நாட்டைப் பெரிதும் பாதித்து வந்த பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் நாள் நெருங்கிவிட்டது. புதுவருடம் முடிந்தவுடன் பயங்கரவாதமற்ற நாட்டில் மக்கள் வாழ முடியுமென பிரதமர் ரத்ணசிறி விக்ரமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். பிரதமர் தமதுரையில் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இந்த மகத்தான வெற்றியை ஈட்டுவதற்கு எமது வீரமிக்க பாதுகாப்புப் படையினர் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். யுத்தமுனையில் அதிக எண்ணிக்கையிலான தமது தலைவர்களை இழந்துள்ள எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு இந்தத் தோல்வியை மறைப்பதற்கு பொய்ப் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. எனினும் அவர்களின் போலிக் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். புலிகள் மேற்கொண்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளபோதும் இதற்கு சில தரப்பினர் உதவி வழங்கி வருவதையிட்டு நாம் கவலையடைகிறோம். வடக்கில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள சிவிலியன்களின் நலன் கருதி அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் புலிகள் பொதுமக்கள் மத்தியில் மறைந்து வாழ்கின்றனர். எனினும் மனித நேயத்துடன் செயற்பட்டு வரும் எமது படை வீரர்கள் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வகையில் பயங்கரவாதிகளுக்கெதிரான தாக்குதல்களில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர்.
புலிகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துண்புறுத்தல்கள் பற்றி சில சர்வதேச அமைப்புக்கள் முற்றாக உதாசீனம் செய்துள்ளன. எனினும் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் இத்தகைய அமைப்புக்களின் நோக்கம் தோல்வி கண்டுள்ளன என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
MUKILVANNAN
THE USUAL THING IS WHEN TWO SIDES IS AT WAR,WHEN WARFARE IS TENSE,ONE SIDE MIGHT BE AT UPPER HAND WHILE THE OTHERSIDE IS LOOSING AS A RESULT BEING WEEK EITHER IN RESOURCES,AMONITIONS OR OTHERWISE.THIS IS UNDERSTANDTABLE.
WEAKER SIDE EITHER SURRENDER OR ESCAPE.
NOW WHAT IS HAPPENINING IN THE CASE OF LIBERTATION OF TAMIL TIGERS IS NOT SAME AS DESCRIBED.
பார்த்திபன்
அப்ப பிரதமர் இது புதுவருடமல்ல, இன்னொரு தீபாவளி என்று சொல்ல வாறார் போல…