அமரர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளேயின் பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூல் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் கையளிக்கப்படவுள்ளது. ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே யின் மனைவி டாக்டர் சுதர்சினி பெர்ணாந்துபுள்ளே இந்த நூலை அச்சிட்டுள்ள தோடு அன்னாரின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த நூல் வெளியிட்டு வைக்கப்படுகிறது.
மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே 1989ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு வரை நிகழ்த்திய பாராமன்ற உரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று விசேட நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்படவுள்ளது.